Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருவண்ணாமலை » வானிலை

திருவண்ணாமலை வானிலை

காலை நேர சூரிய வெப்பம் தாங்கக்கூடிய அளவில் இருக்கும் குளிர்க்காலமே திருவண்ணாமலைக்கு பயணம் செய்ய சிறந்த காலம்.  குளிர்காலத்தில் நிலவும் இனிமையான வானிலை பக்தர்களையும், சுற்றுலா பயணிகளையும் ஒருசேர ஈர்க்கின்றது. உண்மையில், குளிர்காலத்தில் தான் இந்த பட்டணத்தில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. 

கோடைகாலம்

பிப்ரவரி மாதம் தொடங்கி மே மாதம் இறுதி வரை திருவண்ணாமலையில் கோடைக்காலம் நீடிக்கிறது. கோடையின் போது வெப்பம் 45 டிகிரி செல்சியஸ் வரை உயர்கின்றது. சுட்டெரிக்கும் வெயில் மயக்கத்தையும், நீரிழப்பையும் ஏற்படுத்தும் என்பதால், இந்த பட்டணத்திற்கு வர இது சரியான காலம் அல்ல. கோடையின் போது காலைநேரங்களில் ஈரப்பதமும் அதிகமாக இருக்கிறது.

மழைக்காலம்

ஜூன் மாதம் மத்தியில் மழைக்காலம் தொடங்கி ஆகஸ்டு மாத இறுதி வரை நீடிக்கிறது. எனினும், மழையின் காரணமாக திருவண்ணாமலையின் வானிலை நலம் அடைவது இல்லை. மழைக்காலத்தில் பதிவான அதிகபட்ச வெப்பம் 39 டிகிரி செல்சியஸ். கடுமையான மழை ஈரப்பதத்தை மாத்திரமே அதிகரிக்கிறது, மழைக்காலத்தில் மழைப்பொழிவின் அளவும் அதிகப்படியாக இருக்கிறது.

குளிர்காலம்

நவம்பர் மாத மத்தியில் தொடங்கி பிப்ரவரி மாதம் மத்திய பகுதி வரை குளிர்க்காலம் நிலவுகின்றது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸுக்கு குறைந்து, காலை நேரத்தில் வெளியே சுற்றிப்பார்ப்பதை எளிதாக்குகிறது. மாலை நேரம் குளிர்ச்சியாக இருக்கிறது, ஆனால் உறைந்துபோகும் அளவுக்கு அல்ல. மென்மையான சால்வை அல்லது பருத்தி உடை மூலமாக இந்த குளிரை எளிதில் தாக்குபிடித்துக்கொள்ளலாம். இரவு நேரத்தில் உறங்குவதற்கு மென்மையான போர்வை தேவைப்படும்.