சென்னை விமான நிலையம் தான் இவ்வூருக்கு மிக அருகில் அமைந்த விமான நிலையமாகும். இந்நிலையம் சர்வதேச விமான நிலையமாக இருப்பதனால், சென்னை மாநகரம், இந்தியாவின் பல்வேறு இடங்களுடன் மட்டுமின்றி உலகின் பல்வேறு இடங்களுடனும், விமான சேவை மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது. சென்னையிலிருந்து, பேருந்து அல்லது இரயில் மூலமாக இவ்வூரை எளிதாக அடையலாம். திருவாரூரிலிருந்து சுமார் 110 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருச்சி நகரிலும் ஒரு விமான நிலையம் உள்ளது. திருச்சி நகரை விமானம் மூலமாக அடைந்து, பின்னர் இரயில் மூலமாக இவ்வூரை அடையும் வாய்ப்பும் சிறப்பானதாகப் பரிந்துரைக்கப்படுகிறது.