Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருவாரூர் » வானிலை

திருவாரூர் வானிலை

இவ்வூருக்குச் செல்வதற்கு ஏற்ற காலகட்டம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் ஆகியவையாகும். மழைக்காலம், ஜீன் முதல் செப்டம்பர் வரையும், குளிர்காலம், டிசம்பர் முதல் பிப்ரவரி வரையும்  நீடிக்கின்றன. இவ்விரண்டு காலங்களும் திருவாரூருக்குச் செல்வதற்கு ஏற்ற காலங்களாகும். கோடைகாலம் மிகவும் வெப்பமாக இருப்பினும், திருவாரூருக்கு புனிதயாத்திரை செல்வதற்கு ஏற்ற காலகட்டமேயாகும்.

கோடைகாலம்

திருவாரூரில், ஏப்ரல் முதல் மே வரையிலான மாதங்கள் கோடைகாலமாக கருதப்படுகிறது. இச்சமயத்தில் இங்கு மிகவும் வெப்பமாக இருக்குமாதலால், அவ்வமயம் இங்கு செல்வதைத் தவிர்ப்பது நல்லது. இந்த காலகட்டத்தில், தட்பவெப்பநிலை, அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சமாக 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். இத்தட்பவெப்பநிலை காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் வருகை இச்சமயத்தில் குறைந்து காணப்படுகிறது.

மழைக்காலம்

திருவாரூரில் ஜீன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டம் மழைக்காலமாகக் கருதப்படுகிறது. இக்காலத்தில் இங்கு, லேசான தூறல் முதல் மிதமான மழை பெய்யும். இதனால், மழைக்காலத்தில் திருவாரூர் பசுமையாக காட்சியளிக்கும். இக்காலத்தில் திருவாரூருக்குச் சென்று வருவது சாலச் சிறந்தது.

குளிர்காலம்

திருவாரூரில் குளிர்காலம் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும். இச்சமயத்தில் இவ்வூர் மிதமான தட்பவெப்பநிலையுடன் இருக்கும். இக்காலத்தில் இங்கு செல்வதும் உசிதமாகும். குளிர்கால தட்பவெப்பநிலை சுமார் 23 டிகிரியிலிருந்து 30 டிகிரி வரை வேறுபடும்.