திரிசூர் நகரத்தில் விமான நிலையம் இல்லை. இதற்கு மிக அருகில் உள்ள கொச்சி விமான நிலையம் 58 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், ஷீலங்கா போன்ற போன்ற இடங்களிலிருந்து நேரடி சர்வதேச விமான சேவைகள் கொச்சிக்கு உள்ளன. மேலும், இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் உள்நாட்டு சேவைகளும் இயக்கப்படுகின்றன. மும்பை, சென்னை, பெங்களூர், டெல்லி போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.