Search
  • Follow NativePlanet
Share
» »சாப்பாட்டு பிரியரா நீங்கள்? உங்களுக்கு ஏற்ற நகரங்கள் இவை தான்

சாப்பாட்டு பிரியரா நீங்கள்? உங்களுக்கு ஏற்ற நகரங்கள் இவை தான்

இந்தியாவில் கலாச்சாரங்களுக்கு மட்டுமல்ல உணவுகளுக்கும் பெயர் பெற்ற நகரங்கள் ஏராளமாக உள்ளன. ஒவ்வொரு மாநிலம், ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு உணவு புகழ்பெற்றதாக இருக்கும். பலவிதமான உணவுகளை ருசி பார்க்க வேண்டும் என ஆசை கொண்ட உணவுப் பிரியர்கள் அவசியம் செல்ல வேண்டிய டாப் 10 இந்திய நகரங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

10 amazing cities in India every food lover should visit

டில்லி

தலைநகர் டில்லியில் காரசாரமான சாட் மசாலா உணவுகளை ருசித்து மகிழ வேண்டும் என்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் சாந்தினி செளவுக் தான். இங்கு கபாப் உணவுகள் மிக பிரபலம். அதே போல் தெருவோரக் கடைகளும் இங்கு அதிகம். விதவிதமான ஸ்நாக்ஸ்களை ருசிக்க வேண்டும் என்றால் இங்கு செல்லலாம்.

மும்பை

பாலிவுட் நகரமான மும்பையை தெருவோர கடைகளின் தலைநகர் என்றே சொல்லலாம். இங்கு விற்கப்படும் வட பாவ், பாவ் பாஜி, சாட் மசாலா உணவுகள் உலக பிரசித்தி பெற்றவை. மும்பை சென்றால் இந்த உணவுகளை கண்டிப்பாக ருசிக்க மறந்து விடாதீர்கள்.

10 amazing cities in India every food lover should visit

ஜெய்பூர்

ராஜஸ்தானின் அரண்மனை நகரமான ஜெய்பூர் நகரம், தால் பாடி சுர்மா, லால் மாஸ், கீவர் ஆகிய உணவுகளுக்கு பெயர் பெற்ற ஊர். ராஜஸ்தானின் மற்றொரு புகழ்பெற்ற உணவு ஜிலேபியாகும். பார்த்ததுமே ருசிக்க வேண்டும் என நாக்கில் எச்சில் ஊற வைக்கும் பாரம்பரிய உணவுகள் இங்கு அதிகம்.

கோல்கட்டா

உணவு பிரியர்களுக்கு மிகவும் ஏற்ற நகரங்களில் ஒன்ற கோல்கட்டா. இது ரசகுல்லாவிற்கு பெயர் பெற்ற நகரமாகும். இது தவிர சன்தேஷ், மிஷ்டி தோய் ஆகிய உணவுகளும் இங்கு மிகவும் பிரபலம்.

சென்னை

தென்னிந்திய உணவுகள் அனைத்தும் கிடைக்கும் ஊர் சென்னை. சென்னை வந்தால் மொறு மொறு தோசை, அதோடு சாம்பார், சட்னி ஆகியவற்றை ருசிப்பதற்கு மறந்து விடாதீர்கள். விதவிதமான தோசை வகைகள், மசாலா தூக்கலாக சேர்த்த செட்டிநாடு அசைவ உணவு வகைகள் என வித விதமான உணவுகளுக்கு பெயர் பெற்ற நகரம் இது.

10 amazing cities in India every food lover should visit

கோவா

கோவா சுற்றுலா தலங்களுக்கு மட்டுமல்ல கடல் உணவு பிரியர்களுக்கு சொர்க்க பூமியாக விளங்கக் கூடியது. ஃபிரஷாக கடலில் இருந்து பிடித்த இரால், மீன் வகைகளை சமைத்து சுட சுட தருவார்கள். இங்கு கிடைப்பது போல் கடல் உணவு ரகங்கள் வேறு எங்கும் கிடைக்காது.

அமிர்தசரஸ்

அமிர்தசரசில் பொற்கோவில் மட்டுமல்ல பெரிய அளவில் உணவு சமைப்பதற்கும் புகழ்பெற்ற ஊர். சாதாரணமாகவே தினமும் 50,000 முதல் 60,000 பேருக்கு உணவு சமைப்பார்கள். எளிமையான, சைவ உணவிலும் பல வகைகளை ஒரே நேரத்தில் ருசிக்க நினைப்பவர்கள் அமிர்தசரசிற்கு வரலாம்.

ஐதராபாத்

பிரியாணி பிரியர்களின் சொர்க்க பூமியாக இருக்கும் ஊர் ஐதராபாத். சுவை, மணம் என அனைவரின் நாக்கிலும் எச்சில் ஊற வைத்து, பிரியாணியை ருசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் நகரம். அரபிக், முகலாயர்கள், தெலுங்கு என பல வகைகளில் இங்கு பிரியாணி செய்து அசத்துவார்கள். இது தவிர சமோசாவிற்கும் புகழ்பெற்ற ஊர் இது தான்.

கொச்சி

அசைவம், சைவம் எதுவாக இருந்தாலும் அடுக்கிக் கொண்டே போகும் அளவிற்கு உணவு வகைகளை கொண்ட மாநிலம் கேரளா தான். ஓணம் சமயத்தில் இவர்கள் பரிமாறும் ஓணம் சந்தியாவை பார்த்தாலே நமக்கு பசி அடங்கி விடும். அந்த அளவிற்கு 21 முதல் 64 வகை உணவுகளை அடுக்கி விடுவார்கள். மலபார் இரால் கறி, மீன் பிரியாணி ஆகியவை கொச்சியில் மிகவும் பிரபலமான உணவுகளாகும்.

மைசூரு

மைசூர் பாக் இனிப்பை சுவைக்கு போதெல்லாம் மைசூரு நகரின் நினைவு வராமல் இருக்காது. இங்கு தோசை வகைகள், கோபி மஞ்சூரியன், வறுத்த கோழி ஆகியவைகள் மிகவும் ஃபேமஸ். அதே போல் மைசூரு அரண்மனையை சுற்றி விற்கப்படும் பழச்சாறுகள், பைனாப்பிள் மசாலா ஆகியவை மிக மிக பிரபலம்.

More News

    Read more about: chennai
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+