இந்தியா பிரமிக்க வைக்கும் மலை நகரங்களுக்கும், இயற்கை அழகுக்குள் தாயகமாக விளங்குகிறது. அதன் அழகிய மலைப்பகுதிகள் வெவ்வேறு மாநிலங்களில் பரவியிருக்கின்றன. தூய்மையான காற்று, பசுமை மலையருவிகளின் தழுவல், நீர்ச் சொட்டுகளில் மிதக்கும் காலை மழை, பனி படர்ந்த மலைச் சிகரங்கள் இவையெல்லாம் மலை நகரங்களின் தனித்துவத்தை பிரதிபலிக்கின்றன. இந்தியாவில் மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை அழகு நிறைந்த சிறந்த 10 மலை பிரதேசங்கள் பற்றி விரிவான தகவல்களை பார்க்கலாம்!

குல்மார்க்
குல்மார்க் என்பது இந்தியாவின் மிகவும் அழகான மலை நகரங்களில் ஒன்றாகும். "பூங்காவின் மலர்" என அழைக்கப்படும் இந்த இடம், பனி மூடிய மலைச்சிகரங்கள், பசுமை நிறைந்த பள்ளத்தாக்குகள், புகழ்பெற்ற ஸ்கையிங் (Skiing) மற்றும் குயின்ட் காஷ்மீர் பசுமை ஆகியவற்றால் பிரபலமானது. இது சறுக்கு வீரர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு சொர்க்கமாகும்.கோண்டோலா,பிர் பஞ்சல் மலைத்தொடர்கள் கண்கவர் அழகிய காட்சிகளை கொண்ட இடங்களாகும்.
மணாலி
குலு பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மணாலி இமயமலையின் பரந்த காட்சிகள், பசுமையான புல்வெளிகள் மற்றும் பாய்ந்து ஓடும் ஆறுகளை கொண்டது. இங்குள்ள சோலாங் பள்ளத்தாக்கு மற்றும் ரோஹ்தாங் கணவாய் ஆகியவை கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் ஆகும்.

மூணாறு
மூணாறு "தென்னிந்தியாவின் சிறந்த மலை நகரங்களில்" ஒன்றாக விளங்குகிறது. இதன் மணக்கும் தேயிலை தோட்டங்கள், தென்னிந்தியாவின் உயரமான மலைச் சிகரங்கள், பசுமை நிறைந்த பள்ளத்தாக்குகள், குளிர்காற்று வீசும் அழகிய நிலப்பரப்பு போன்றவை சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கின்றன. டாப் ஸ்டேஷன் மேற்கு தொடர்ச்சி மலைகளின் பரந்த அழகிய காட்சிகளை வழங்குகிறது.
டார்ஜிலிங்
டார்ஜிலிங் உலகப்புகழ்பெற்ற தேயிலை தோட்டங்கள், கனமான பனி மூடிய மலைகள், இமயலையின் பின்னணி ஆகியவற்றால் பிரபலமானது. இங்குள்ள கஞ்சன்ஜங்கா மலை உலகின் மூன்றாவது உயர்ந்த மலையாகும்.யுனெஸ்கோ பாரம்பரிய ரயிலான டாய்ஸ் ரயில் மற்றும் பாத்தாசியா லூப் - புகழ்பெற்ற புகைவண்டி பாதை போன்றவை இங்குள்ள சிறந்த இடங்களாகும்.

தவாங் (Tawang)
தவாங் இந்தியாவின் மிகவும் அழகான மற்றும் கண்கவர் மலை நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு பனி மூடிய மலைகளும், அமைதியான புத்த கோவில்களும், மெய்மறக்கச் செய்யும் இயற்கை அழகும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒன்றாகும்.செலா பாஸ் ஏரி (Sela Lake) மற்றும் மாதுரி மலைகளின் மத்தியில் அமைந்துள்ள ஓர் அழகிய நீர்நிலைகளாகும்.
ஷிம்லா
முந்தைய காலங்களில் "கோடைக்கால தலைநகரம்" என அழைத்த ஷிம்லா, அதன் பிரிட்டிஷ் கால கட்டடங்கள், நவீன ரயில் சேவை மற்றும் அழகிய மழைக்காட்சிகள் காரணமாக பிரபலமானது. இங்குள்ள சிறப்பு இடங்கள் மால் சாலை, கூபர்ஸ் ஹில், ஜாக்கு கோயில் போன்றவையாகும்.
பெல்லிங்
பெல்லிங் என்பது சிக்கிமின் ரகசிய அழகான மலை நகரம். இது கேங்டோக், யுக்சோம் போன்ற சுற்றுலா இடங்களை விட அமைதியானதும், இயற்கையுடன் இணைந்ததும் ஆகும். கஞ்சன்ஜங்கா மலைத்தொடர்களின் நேரடி காட்சிகளும், அரிய புத்த கோவில்களும், நீர்வீழ்ச்சிகளும், அடர்ந்த காட்டுகளும் இதன் முக்கியமான சிறப்புகளாகும்.
லான்ஸ்டவுன்
உத்தரகாண்டில் ள்ள ஒரு மலை நகரமாக விளங்குகிறது. இது வழக்கமான சுற்றுலா இடங்களை விட மிகவும் அமைதியானதாகவும், இயற்கை சூழலால் மேம்பட்டதாகவும் இருக்கிறது. பிரிட்டிஷ் கால கட்டிடக்கலையும், பசுமையான மலைப்பாதைகளும், கோர்கா ரைஃபிள் ரெஜிமென்ட் போன்ற வரலாற்று நினைவுகளும் இதன் முக்கிய ஈர்ப்பாகும்.
மவுண்ட் அபு
ராஜஸ்தானின் ஒரே மலை நகரமாக விளங்குகிறது. இது ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்து, சுத்தமான காற்று, பசுமை, மற்றும் வரலாற்று நினைவுகளால் சுற்றி இருக்கிறது. வெயில் கொளுத்தும் ராஜஸ்தானின் பாலைவனங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இயற்கையின் ஒரு பொக்கிஷமாக இது கருதப்படுகிறது.தில்வாரா ஜெயின் கோவில்,நக்கி ஏரி,குரு ஷிகார் போன்றவை சிறப்பு மிக்க இடங்களாகும்.
ஜீரோ (Ziro) என்பது அருணாச்சல பிரதேசத்தின் மிக அழகான மலை நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த இடம், அதன் பசுமையான இயற்கை, நவீனத்துடன் கலந்த பழங்குடி கலாச்சாரம், மற்றும் இயற்கையை நேசிப்பவர்களுக்கு சிறந்த இடமாக இருக்கிறது.



Click it and Unblock the Notifications



