Search
  • Follow NativePlanet
Share
» »இது இந்தியாவா? இல்ல சுவிட்சர்லாந்தா?...திணறடிக்கும் அழகுடைய 10 சுற்றுலா தலங்கள்

இது இந்தியாவா? இல்ல சுவிட்சர்லாந்தா?...திணறடிக்கும் அழகுடைய 10 சுற்றுலா தலங்கள்

பனிமலைகள், பச்சை பசேல் என பசுமை போர்த்தி பள்ளத்தாக்குகள் என இயற்கை அழகு நிறைந்து கிடக்கும் இந்தியாவில் உள்ள சில சுற்றுலா இடங்களுக்கும் சென்றால் நாம் இருப்பது இந்தியாவா இல்லை சுவிட்சர்லாந்தா என சந்தேகமே வந்து விடும். அந்த அளவிற்கு மூச்சு முட்ட வைக்கும் இந்தியாவின் டாப் 10 அழகான சுற்றுலா தலங்கள் எங்குள்ளன என வாங்க தெரிந்து கொள்ளலாம்.

Auli

அவுலி

உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மலைபாங்கான இடம் .இது முக்கியமாக ஸ்கீயிங் மற்றும் அட்வென்ச்சர் விளையாட்டுகளுக்காக பிரபலமானது. பனிமூடிய மலைகளில் டிரக்கிங், ஸ்னோபோர்டிங் செய்ய சிறந்த இடம் ஆகும்.இந்தியாவின் நீளமான கேபிள் கார் பயணங்கள் செய்ய அவுலி ஒரு சிறந்த இடமாகும்.பனிமூடிய மலைகளின் அழகு, மற்றும் சாகச விளையாட்டுகள் போன்றவற்றை வழங்குவதால் அவுலி, சுவிஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைகளை போன்று தோற்றமளிக்கிறது.

கஜ்ஜியார்

மலைகள், காடுகள், மற்றும் இயற்கை காட்சிகளால் சூழப்பட்ட இந்த இடம் இமாசல பிரதேசத்தின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.பாராசெய்லிங், ஹார்ஸ் ரைடிங், மற்றும் டிரக்கிங் போன்ற விளையாட்டுகள் இங்கே பிரபலமாக உள்ளன. இயற்கை அழகு மிகுந்த கஜ்ஜியார் ஏரியில் பயணம் செய்வது சுற்றுலாப் பயணிகளுக்கு மனமகிழ்ச்சியை தருவதாக உள்ளது. இது "இந்தியாவின் சுவிட்சர்லாந்து" என்றும் அழைக்கப்படுகிறது.

Gulmarg

குல்மார்க்

குல்மார்க், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான மலைபாங்கான சுற்றுலா தலம் ஆகும். இது அதன் அற்புதமான இயற்கை அழகு, பனிச்சரிவுகள் மற்றும் உலகப் புகழ்பெற்ற கேபிள்கார் வசதிகளால் பிரபலமானது.குல்மார்க் புல்வெளிகள் மூடி மறைந்த மலைகளால் சூழப்பட்டுள்ளதால், இது சுவிஸ் நாட்டில் உள்ள ஸ்கை ரிசாட்டுகளுக்கு இணையானதாக கருதப்படுகிறது.

முன்சியாரி

"மலைகளின் வாயில்" (Gateway to the Himalayas) என்று அழைக்கப்படும் இவ்விடம், பிரபலமான பாஞ்ச்சூலி (Panchachuli) மலைத்தொடரின் அற்புதமான காட்சிகளைக் கொண்டுள்ளது. டிரக்கிங் மற்றும் அட்வென்ச்சர் போன்ற சாகச விளையாட்டுகள் செய்ய ஓர் அற்புதமான இடமாகும். இங்குள்ள ஐந்து பனிமூடிய மலைகளின் காட்சிகள், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கின்றன.

Tawang

தவாங்

தவாங் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள, இயற்கை அழகும், புத்த மத பாரம்பரியமும் நிறைந்த ஒரு பிரபலமான மலைப்பாங்கான சுற்றுலாத் தளமாகும். இப்பகுதி, பனிமூடிய மலைகளாலும், ஏரிகளாலும் சூழப்பட்டுள்ளது. இது சுவிட்சர்லாந்து நாட்டை போல் மனதை கொள்ளை கொள்ளும் மலை நகரம் ஆகும்.

ஸ்பிட்டி பள்ளத்தாக்கு

ஸ்பிட்டி பள்ளத்தாக்கு (Spiti Valley), இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு உயர்நில மலைப்பாங்கான பாலைவன பள்ளத்தாக்கு ஆகும். இது இந்தியா - திபெத் எல்லையில் அமைந்துள்ளது. இங்குள்ள பனிமூடிய மலைகளால் சூழப்பட்டுள்ள பகுதிகள் சுவிஸ் ஆல்ப்ஸ் மலைகளை போல் தோற்றமளிக்கின்றன.

சோப்தா

இந்தியாவின் மினி ஸ்விட்சர்லாந்து என்று அழைக்கப்படும் சோப்தா இயற்கையின் மிக அழகான மலைப்பாங்கான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். பசுமையான புல்வெளிகள் மற்றும் அழகிய ஏரிகள் கொண்ட இது கேதர்நாத் வனவிலங்கு சரணாலயத்தின் (Kedarnath Wildlife Sanctuary) ஒரு பகுதியாக உள்ளது.

லம்பசிங்கி

லம்பசிங்கி ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலைப்பாங்கான கிராமமாகும்.இது "தென்னிந்தியாவின் காஷ்மீர்" (Kashmir of South India) என்று அழைக்கப்படுகிறது.தென்னிந்தியாவின் பனி விழும் இடங்களில் ஒன்றாகும்.பனி விழும் டிசம்பர் - ஜனவரி மாதங்களில் இயற்கையின் அமைதியை அனுபவிக்க ஒரு சிறந்த இடமாகும்.

கின்னௌர்

கின்னௌர் இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள, இயற்கையின் அற்புதங்கள் சூழ்ந்துள்ள ஒரு சிறப்பான பள்ளத்தாக்காகும்.இது "இந்தியா - திபெத் எல்லையின் நுழைவாயில்" (Gateway to Tibet) என்று அழைக்கப்படுகிறது. பனிமூடிய மலைகள், பசுமையான தோட்டங்கள், பாரம்பரிய புத்த மடாலயங்கள், மற்றும் அழகாக கிராமங்கள் ஆகியவை சுவிஸ் கிராமங்களை போல் அழகாக தோற்றமளிக்கின்றன.

ஜுலுக்

ஜுலுக், சிக்கிமில் அமைந்துள்ள, கடல்மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் இருக்கும் ஒரு அழகான சிறிய கிராமமாகும். இங்குள்ள பிரபலமான "சில்க் ரோடு" (Old Silk Route) வழியில் அமைந்துள்ளதால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் இது விளங்குகிறது. இங்குள்ள 32 திருப்பங்களைக் கொண்ட ஜிக்-ஜாக் சாலைகள்,சுவிஸ் கிராமப்புறத்தை நினைவூட்டும் விதமாக உள்ளன.

More News

    Read more about: gulmarg tawang auli
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+