Search
  • Follow NativePlanet
Share
» »அட நம்ம ஊரு போலவே இருக்கே என ஆச்சரியப்பட வைக்கும் உலகின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள்

அட நம்ம ஊரு போலவே இருக்கே என ஆச்சரியப்பட வைக்கும் உலகின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள்

உலகம் முழுவதும் எத்தனையோ நாடுகளில், ஏராளமான பிரபலமான சுற்றுலா தலங்கள் உள்ளன. அவற்றில் சில தலங்கள் அப்படியே அச்சு அசலாக இந்தியாவில் உள்ள பிரபலமான தலங்களை போலவே இருந்து சுற்றுலா பயணிகளை ஆச்சரியப்பட வைக்கும். அப்படி பிரபலமான உலக சுற்றுலா தலங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Lakshdweep Vs Maldives

லட்சத்தீவு-மாலத்தீவுகள்

அரபிக் கடலில் 36 சிறு தீவுகளின் தொகுப்பாக அமைந்துள்ள லட்சத்தீவுகள், இயற்கையான அழகு, பசுமை நிறைந்த சுற்றுச்சூழல், மற்றும் பாரம்பரிய கலாச்சாரம் ஆகியவற்றின் இணைப்பாக திகழ்கிறது. இந்தியாவின் மறைந்த சொர்க்கம் என்று சொல்லக்கூடிய இத்தீவுகள் சுற்றுலாப் பயணிகளை வருடந்தோறும் கவர்ந்திழுக்கின்றன. அமைதியான ஒரு இடத்தில் இயற்கையுடன் நேரம் கழிக்க விரும்பினால், மாலத்தீவுகள் போன்று காட்சியளிக்கும் லட்சத்தீவுகள் உங்களுக்கு சரியான தேர்வாக அமையும்.

Grand Canyon and Gandikota

கண்டிகோட்டா - இந்தியாவின் "கிராண்ட் கேன்யன்"

ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில், பென்னா ஆற்றின் கரையில் அமைந்துள்ள கண்டிகோட்டா (Gandikota) இந்தியாவின் மறைந்து கிடக்கும் ஒரு அற்புதமான வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். இதன் பிரம்மாண்டமான சிவப்பு பாறைகள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்கு காரணமாக, இதனை "இந்தியாவின் கிராண்ட் கேன்யன்" என்றும் அழைக்கின்றனர்.

கஜ்ஜியார் - இந்தியாவின் "மினி சுவிட்சர்லாந்து"

இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள கஜ்ஜியார் பசுமையான மலைகளாலும், நீரூற்றுகளாலும், திறந்த புல்வெளிகளாலும் மற்றும் பனிபடர்ந்த சிகரங்களாலும் "இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து" (Mini Switzerland of India) என்ற அழைக்கப்படுகின்ற இந்த இடம், இயற்கையின் பிரம்மாண்ட அழகை காட்டுகிறது.

தார் பாலைவனம் - ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனம்

தார் பாலைவனம் இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனமாகும். "மறைமுகமான பாலைவனம்" (Great Indian Desert) என்றும் அழைக்கப்படும் இது, இந்தியாவின் ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், குஜராத் மாநிலங்களிலும் பாகிஸ்தானின் சில பகுதிகளிலும் பரவி உள்ளது. இங்கு ஜெய்சல்மீர் கோட்டை, பிகானேர், பார்மர், ஜோத்பூர் போன்ற நகரங்கள் தார் பாலைவனத்திற்குள் உள்ள புகழ்பெற்ற இடங்கள். இங்கு ஒட்டக சவாரி மிக பிரபலமானது, காடி ஆட்டம் (Kalbelia Dance) - யுனெஸ்கோ பாரம்பரியமாக அறிவிக்கப்பட்ட நடனமாகும்

Niagara falls Chitrakot Falls

சித்ரகோட் அருவி - நயாகரா -அமெரிக்கா

சட்டீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மாவட்டத்தில் இந்த அருவி இந்த்ராவதி ஆற்றின் மீது உருவாகியுள்ள சித்ரகோட் அருவி இந்தியாவின் மிகப்பெரிய பரந்த அகலமுள்ள நீர்வீழ்ச்சி ஆகும். இது "இந்தியாவின் நயாகரா" என்று அழைக்கப்படுகிறது.

ஆலப்புழா - வெனிஸ்,இத்தாலி

ஆலப்புழா கேரளாவின் மிக அழகான மற்றும் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். "கேரளாவின் வெனிஸ்" என்றும் அழைக்கப்படும் இந்த இடம், உப்பங்கழிகளில் (Backwaters) பயணிக்கும் படகு வீடுகள், அழகிய கடற்கரை ஆகியவற்றால் உலகப்புகழ் பெற்றது.

ஆலி - ஆல்ப்ஸ், ஜரோப்பா

ஆலி: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற மலை ஸ்கீயிங் ரிசார்ட் ஆகும். "இந்தியாவின் ஸ்கீயிங் பரதம்" (Skiing Paradise of India) என்று அழைக்கப்படும் இது, இமயமலைகளின் மத்தியில் வெள்ளை பனிக் கம்பளத்தால் சூழப்பட்டு,காணப்படும் இந்த ஆலியின் பனி மலைகள் உலகத் தரத்திலான ஸ்கீயிங் அனுபவத்தை தருகின்றன. "Auli Ropeway" - இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கேபிள் கார் போன்றவை, இந்தியாவின் ஆல்ப்ஸ் மலை அழைக்கப்படுகிறது.

பாம்பன் பாலம் - கிரேட் ஒஸன் சாலை,ஆஸ்திரேலியா

பாம்பன் பாலம் 1914ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கடல்மீது கட்டப்பட்ட ரயில் பாலமாகும். இது தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் இடையே அமைந்துள்ள இந்த பாலம் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலமாக திகழ்கிறது. இதன் மையப்பகுதி ரயில்கள் செல்லும்போது மூடப்பட்டும், கப்பல்கள் வரும்போது திறக்கப்படும் காட்சி மற்றும் கடலின் மத்தியில் ரயிலில் பயணம் ஒரு நம்பமுடியாத அனுபவத்தை அளிக்கும்.

பிரகதீஸ்வரர் கோயில் -கிசா பிரமீடு, எகிப்து

பிரகதீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள சோழர்களின் சிறப்புமிக்க நினைவுச் சின்னம் ஆகும். ராஜராஜ முதலாம் சோழன் என்பவரால் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது யுனெஸ்கோ உலக பாரம்பரியக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட கலைமிகு ஆலயம், இந்த கோயில் தமிழர் அறிவு, கட்டுமான திறமை, கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் மகத்தான உதாரணம். "பெரிய கோயில்" என்றழைக்கப்படும். இந்த 1000 ஆண்டுகள் பழமையான கோயில், இன்றும் மகத்தான சிற்பங்களுடன் கண்கொள்ளாக் காட்சியாக விளங்குகிறது.

நோங்ரியாட் - மச்சு பிச்சு, பெரு

நோங்ரியாட்: மேகாலயா மாநிலத்தின் மிக அழகான, இயற்கை செழுமையான மற்றும் சாகசமிக்க கிராமங்களில் ஒன்றாகும். இது "மேகாலயாவின் உயிருடன் வளரும் பாலம் (Living Root Bridge)" மற்றும் அழகான நீர்வீழ்ச்சிகள் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்றுள்ளது.

More News

Read more about: world tour world trip
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+