Search
  • Follow NativePlanet
Share
» »ஃபிரண்ட்ஸ் உடன் கோழிக்கோடு டூர் போனால் இந்த 10 இடங்களை பார்க்க மறந்துடாதீங்க

ஃபிரண்ட்ஸ் உடன் கோழிக்கோடு டூர் போனால் இந்த 10 இடங்களை பார்க்க மறந்துடாதீங்க

நண்பர்களுடன் சேர்ந்து கேரளா டூர் போக பிளான் செய்கிறீர்கள் என்றால் அதற்கு மிகவும் ஏற்ற இடம் கோழிக்கோடு தான். கேரளாவில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று. இன்று சுற்றி பார்ப்பதற்கு ஏராளமான இடங்களும், அனுபவிக்க ஏராளமான விஷயங்களும் உள்ளன. கோழிக்கோட்டில் நீங்கள் ஜாலியாக என்ஜாய் பண்ணுவதற்கு செல்ல வேண்டிய 10 முக்கியமான இடங்களை நாங்கள் உங்களுக்கு சுற்றி காட்டுகிறோம்.

Friends

துஷாரகிரி நீர்வீழ்ச்சி

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள துஷாரகிரி அருவி சாகசத்தை விரும்புபவர்களுக்கு, டிரெக்கிங் செய்பவர்களுக்கு மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு ஏற்ற அமைதியான இடமாகும். உங்கள் நண்பர்களுடன் சென்று சாகச பயணம் மேற்கொண்டு இயற்கையின் அழகை அனுபவிப்பதற்கு இது சிறந்த இடம் ஆகும்.

பேப்பூர் துறைமுகம்

தென்னை மரங்களும், தங்க மணலும் கொண்ட சாலியர் ஆற்றில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க துறைமுகம் ஆகும். பாரம்பரிய மரக்கப்பல்களை கட்டுவதற்கு பெயர் பெற்ற இந்த துறைமுகத்தின் அழகை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது. பார்க்க பார்க்க வியப்பை தரும் ஒரு அற்புதமான இடம்.

மானாஞ்சிரா சதுக்கம்

1994 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ஒரு வளாகம், நன்னீர் குளத்தால் சூழப்பட்ட பகுதியாகும். நகர மையத்தின் ஒரு அமைதியான இடம், உங்கள் நண்பர்களுடன் ஓய்வெடுக்கவும், சுற்றுலா செல்லவும் ஏற்ற இடம் ஆகும்.

Friends

கப்பட் கடற்கரை

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க பகுதியாகும். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வாஸ்கோடகாமா தரையிறங்கிய வரலாற்று சிறப்புமிக்க கடற்கரை இடமாகும். அதனால் வரலாற்று ஆய்வாளர்களும், சுற்றுலா பயணிகளும், மாணவர்களும் இங்கு அதிகம் வந்து செல்கிறார்கள்.

எஸ் எம் தெரு (ஸ்வீட் மீட் தெரு)

இது உள்ளூர் சிற்றுண்டிகள், கைவினைப் பொருட்கள் மற்றும் நினைவுப் பொருள்கள் போன்றவற்றை ஷாப்பிங் செய்வதற்கு ஏற்ற ஒரு பரபரப்பான தெருவாகும். இங்குள்ள கடைகளில் உள்ளூர் கைவினைப் பொருள்கள் ஏராளமாக உள்ளன. இது சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உள்ளது.

திக்கோடி கலங்கரை விளக்கம்

இந்த கடற்கரை விளக்கம் கடற்கரையின் பரந்து விரிந்த அழகை கண்டு ரசிக்க மிகவும் ஏற்ற இடமாகும். இங்கு சுற்றுலா பயணிகளும், உள்ளூர்வாசிகளும் அதிகம் வந்து செல்கிறார்கள்.

சரோவரம் உயிரியல் பூங்கா

இயற்கை நடை பயணங்கள், படகு சவாரி மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அங்குள்ள இயற்கை சுற்றுச்சூழலை சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்ற இடம்.

பெருவண்ணாமுழி அணை

பசுமையால் சூழப்பட்ட இந்த அழகிய அணை பகல் நேர பயணங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

வெள்ளரிமலை மலைகள்

மலையேற்றம் செய்யும் பயணிகளுக்கு இது ஒரு அற்புதமான இடமாகும். இங்குள்ள இயற்கை காட்சிகளும், சவாலான பாதைகளும் டிரெக்கிங் செய்பவர்கள் விரும்பி செல்லும் இடங்களில் ஒன்றாக உள்ளது.நண்பர்களுடன் சுற்றுலா செல்ல ஒரு நல்ல இடமாகும் .

More News

    Read more about: kerala kozhikode
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+