Search
  • Follow NativePlanet
Share
» »ஒரே நாளில் ஒரு நாடு முழுவதையும் சுற்றி பார்க்க வேண்டுமா? அப்போ இது தான் சரியான இடம்

ஒரே நாளில் ஒரு நாடு முழுவதையும் சுற்றி பார்க்க வேண்டுமா? அப்போ இது தான் சரியான இடம்

வேர்ல்டு டூர் பிளான் பண்ணுறீங்களா? குறுகிய காலத்தில் அதிக நாடுகளை, இதுவரை பார்க்காத நாடுகளுக்கு செல்ல பிளான் செய்கிறீர்களா? அப்படியானால் இந்த நாடுகளுக்கு சென்று பாருங்கள். ஒரே நாளில் ஒரு நாட்டையே சுற்றி பார்த்து விட்டு வந்து விடலாம். அப்படிப்பட்ட சூப்பரான 10 நாடுகளை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

Vatican City

வாடிகன் சிட்டி

உலகின் மிகச் சிறிய நாடான வாடிகன் சிட்டி இத்தாலியின் ரோம் நகரில் தன்னாட்சி பெற்ற ஒரு நாடாகும். ஆன்மிகம், கலை, வரலாறு ஆகியவற்றை இணைக்கும் அற்புதமான நாடாகும். செயிண்ட் பீட்டஸ் பசிலிக்கா, சிஸ்டைன் சேப்பல், வத்திக்கான் போன்ற அருங்காட்சியகங்கள் இங்கு அவசியம் காண வேண்டிய இடங்கள். வெறும் 44 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த நாட்டை ஒரே நாளில் சுற்றி பார்த்து விட்டு வந்து விடலாம்.

மொனாக்கோ

பிரான்சிற்கு தென்கிழக்கில் உள்ள தன்னாட்சி பெற்ற மொனாக்கோ நாடு 208 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள நாடாகும். மொனாக்கோ மான்டே கார்லோ கேசினோ, இளவரசர் அரண்மனை மற்றும் ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் ஆகியவற்றை இங்கு கண்டு ரசிக்கலாம்.

Luxembourg

சான் மரினோ

இத்தாலிக்கு நடுவே உள்ள ஒரு குட்டி நாடு தான் சான் மரினோ. 61.2 கி.மீ., தான் இந்த நாட்டின் மொத்த பரப்பளவே. அப்பெனின் மலைகளில் அமைந்துள்ள இந்த நாடு பெரும்பாலும் கிராமப்புறங்களைக் கொண்டதாகும். இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க ஏற்ற நாடு இது.

லிச்சென்ஸ்டீன்

ஐரோப்பிய நாடான இது 160 கி.மீ., பரப்பளவு கொண்டதாகும். சுவிட்சர்லாந்திற்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையில் அமைந்துள்ள இந்த நாடு இயற்கை மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் சென்று வர ஏற்ற நாடு. வடுஸ் கோட்டையும், டிரெக்கிங் செல்வதும் இங்கு மிக பிரபலமானவையாகும்.

அன்டோரா

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் அமைந்துள்ள அன்டோரா, வரி இல்லாமல் ஷாப்பிங் செய்வதற்கு பெயர் பெற்ற நாடு. 468 கி.மீ., பரப்பளவு கொண்ட இந்த நாட்டில் ரோமான்ஸ் தேவாலயம் மிகவும் புகழ்பெற்றதாகும். சுற்றுலா செல்ல மிகவும் ஏற்ற நாடு.

லக்சம்பர்க்

ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ள மிக சிறிய நாடு லக்சம்பர்க். இங்குள்ள ஓல்ட் டவுன் முக்கியமான யுனெஸ்கோ தளமாகும். கிராண்ட் டூகல் அரண்மனை, போக் கேஸ்மேட்ஸ் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இடங்கள் ஆகும்.

மால்ட்டா

தெற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள தீவு நாடான மால்ட்டா 316 கி.மீ., பரப்பளவு கொண்ட நாடாகும். இதைச் சுற்றி பல தீவுக் கூட்டங்கள் உள்ளன. இவைகள் ஒரே நாளில் சுற்றி பார்க்கும் அளவிற்கு மிகவும் சிறியவை. இங்கு வாலெட்டா, மடினா ப்ளூ க்ரோட்டோ ஆகியவை அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள் ஆகும்.

பஹாமாஸ்

மேற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்டம் தான் இந்த பஹாமாஸ். இதில் சுமார் 700 பவளத் தீவுகள் உள்ளன. இதில் 30 தீவுகளில் மக்கள் வசிக்கிறார்கள். 1373 கி.மீ., பரப்பளவு கொண்டது இந்த தீவு. தலைநகரான நசாவ் கேபிள் கடற்கரைக்கு புகழ்பெற்ற நகரம். அட்லாண்டிஸ் பாரடைஸ் தீவுக்கும் இங்கிருந்து செல்லலாம்.

பார்படாஸ்

கரீபியன் தீவான பார்படாஸ் மிகச் சிறிய தீவாகும். இங்குள்ள பிரமிக்க வைக்கும் கடற்கரைகள், பிரிட்ஜ் டவுன், ஹாரிசன்ஸ் குகைகள் ஆகியவை சுற்றுலாவுக்கு பெயர் பெற்றவை. சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் நாடுகளில் இதுவும் ஒன்று.

ஆன்டிகுவா மற்றும் பார்புடா

இந்த இரட்டை தீவுகள் கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள மிக பிரபலமான தீவுகள் ஆகும். இங்குள்ள கடற்கரைகள் சுற்றுலா பயணிகளிடம் மிகவும் பிரபலமானவை. இங்கு ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தீவு முழுவதையும் சுற்றி பார்த்து விட்டு வந்து விடலாம்.

More News

    Read more about: tour
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+