Search
  • Follow NativePlanet
Share
» »என்னங்க சொல்றீங்க...இந்த 10 கடற்கரைகளில் மணலே கிடையாதா?

என்னங்க சொல்றீங்க...இந்த 10 கடற்கரைகளில் மணலே கிடையாதா?

கடற்கரைகள் என்றாலே அழகிய மணல் பரப்புகளும், நீலக் கடலும் தான் நினைவுக்கு வரும். ஆனால், உலகில் சில பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் மணலே கிடையாதாம். மணல் இல்லாத இயற்கையின் அதிசயங்களை கொண்டிருக்கும் சில விநோதமான கடற்கரைகள் உள்ளன.

அவற்றில் சிலவற்றைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

1. கிளாஸ் பீச், அமெரிக்கா

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள கிளாஸ் பீச் என்னும் இந்த கடற்கரை மணல் இல்லாத கண்ணாடி கூழாங்கற்களால் ஆன வித்தியாசமான கடற்கரையாகும். ஒரு காலத்தில் கண்ணாடி பாட்டில்கள், மண்பாண்டங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் கழிவுகள் குப்பையாக கொட்டப்பட்ட இந்த கடற்கரை, காலப்போக்கில் இயற்கையின் சக்தியால் அழகிய கண்ணாடி போன்ற கூழாங்கற்களால் மின்னும் கடற்கரையாக மாறியது.

2. ஜயண்ட்ஸ் கோஸ்வே பீச், அயர்லாந்து

வட அயர்லாந்தில் உள்ள ஜயண்ட்ஸ் கோஸ்வே கடற்கரை, ஆரஞ்சு நிறம் கலந்த ஆறு மூலைகள் கொண்ட ஒன்றோடொன்று இணைந்த பாசால்ட் வடிவ பாறைகளால் மூடப்பட்டுள்ளது. இது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக இந்த தனித்துவமான பாறைகள் உருவாகியுள்ளன. இது யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

3. ஸ்டினிவா பீச், குரேஷியா

குரேஷியாவின் விஸில் பகுதியில் உள்ள ஸ்டினிவா கடற்கரை, இரண்டு உயரமான பாறைகளால் சூழப்பட்டுள்ளது. இதனால் கடலுக்குள் செல்லும் வழி முழுவதும் கரடுமுரடான கற்களால் ஆனது கடலுக்குள் செல்லும் வழியில் பசுமை நிறம் கலந்த நீருடன் சேர்ந்து ஒரு குளம் போல் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

4. சராகினிகோ பீச், கிரீஸ்

கிரீஸின் மிலோஸ் தீவுகளில் அமைந்துள்ள சராகினிகோ கடற்கரை, முற்றிலும் எரிமலை வெள்ளை பாறைகளால் ஆனது. இந்த பாறைகள் கடல்காற்று மற்றும் கடல்நீரின் காரணமாக சிற்பங்கள் செய்யப்பட்டுள்ளது போல காட்சியளிக்கின்றன.

5. டர்டில் டோர், இங்கிலாந்து

இங்கிலாந்தின் ஜுராசிக் கோஸ்ட் பகுதியில் அமைந்துள்ள டர்டில் டோர் கடற்கரை, இது பெரிய எரிமலைப் பாறையால் உருவான தனித்துவமான இயற்கை வளைவு ஆகும். இது படிக்கட்டுகளிருந்து இறங்கி கடற்கரைப்பகுதி செல்லும் ஒரு அதிசயமான சிறிய கூழாங்கற்களால் ஆன கடற்கரை.

6. பெரிஸ்ஸா பீச், கிரீஸ்

கிரீஸின் சாண்டோரினி தீவில் அமைந்துள்ள பெரிஸ்ஸா கடற்கரை, கருநிறப் பாறை மற்றும் தெளிவான கடல் நீருக்கு பிரபலமானது. இது எரிமலை வெடிப்பின் காரணமாக உருவானதால், இக்கடற்கரை கரும் நிறமாக மாறியுள்ளது.

7. சேசில் பீச், இங்கிலாந்து

இங்கிலாந்தின் டோர்செட் பகுதியில் உள்ள சேசில் கடற்கரை, முழுவதும் மணல் இல்லாமல் சிறிய கூழாங்கற்களை கொண்ட 18 கிமீ நீளமுள்ள இந்த கடற்கரை, அதிக சப்தத்துடன் வரும் அலைகளுக்கு பிரசித்தி பெற்றது.

8. ரெய்னிஸ்‌ஃப்ஜாரா பீச், ஐஸ்லாந்து

ஐஸ்லாந்தின் ரெய்னிஸ்‌ஃப்ஜாரா கடற்கரை, இங்கு கருப்பு நிற கூழாங்கற்களுடன் கூடிய கடற்கரை மற்றும் பெரிய பசால்ட் தூண்கள் மற்றும் கடல் சுனாமிகள் இங்கு அதிகமாக ஏற்படுவதால் உலகின் மிக அழகான மற்றும் ஆபத்தான கடற்கரைகளில் ஒன்றாகும்.

9. ஜோகுல்சார்லான் பீச், ஐஸ்லாந்து

ஐஸ்லாந்தில் உள்ள ஜோகுல்சார்லான் கடற்கரை, 'டயமண்ட் பீச்' என அழைக்கப்படுகிறது. இது ஹிம நதிகளில் இருந்து உடைந்து வரும் பனிக்கட்டிகள் கடற்கரையில் உள்ள கருப்பு எரிமலை பாறைகளில் மோதி சிதறும் வெண்மையான பனிக்கட்டிகள், வைரங்கள் ஒளிர்வதை போல் தோன்றும்.

10. ஷெல் பீச், ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஷெல் பீச், மணலுக்கு பதிலாக 70 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள இந்த கடற்கரை முழவதும் சிறிய வெள்ளை நிற சிப்பிகள் மற்றும் குண்டு சிப்பிகள் கொண்டுள்ள உலகின் அதிசிய கடற்கரைகளில் ஒன்றாகும்.

More News

    Read more about: beach ireland australia
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+