Search
  • Follow NativePlanet
Share
» »இந்திய டிரைவிங் லைசன்ஸ் வைத்துக் கொண்டு இத்தனை நாடுகளில் கார் ஓட்டலாமா?

இந்திய டிரைவிங் லைசன்ஸ் வைத்துக் கொண்டு இத்தனை நாடுகளில் கார் ஓட்டலாமா?

நடிகர் அஜித்திற்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு நமக்கு கார் ஓட்ட தெரிந்திருந்தாலும் எந்த ஒரு வெளிநாட்டிற்கு சென்றாலும் அந்த நாட்டு சாலைகளில் கார் ஓட்டுவதற்கு அந்த நாட்டின் லைசென்ஸ் அல்லது சர்வதேச லைன்சென்ஸ் பெற்றிருக்க வேண்டும் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்திய லைசென்ஸ் வைத்திருந்தாலே இந்த 12 நாடுகளில் கார் ஓட்ட முடியும். ஒவ்வொரு நாடும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை இந்திய டிரைவிங் லைசென்சை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கின்றன. அவை எந்தெந்த நாடுகள், எவ்வளவு காலத்திற்கு அனுமதி வழங்குகின்றன தெரியுமா? வாங்க தெரிந்து கொள்ளலாம்.

Highway

அமெரிக்கா

அமெரிக்காவில் ஒரு வருட காலத்துக்கு இந்திய ஓட்டுநர் உரிமத்தை வைத்துக் கொண்டு கார்களை ஓட்ட முடியும். அதேசமயம், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சர்வதேச டிரைவிங் லைசென்ஸை வாங்கிக் கொள்வது நல்லது.

மலேசியா

மலேசியாவில் 3 மாத காலத்துக்கு இந்திய டிரைவிங் லைசென்ஸ் வைத்துக் கொண்டு கார்களை ஓட்டலாம்.

ஜெர்மனி

ஜெர்மனியிலும் நமது டிரைவிங் லைசென்ஸ் செல்லுபடியாகும். அதேசமயம், 6 மாதம் வரைக்கும் தான் அதை பயன்படுத்த முடியும்.

Highway

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் ஒரு வருடம் வரை நமது டிரைவிங் லைசென்ஸ் செல்லு படியாகும். அதேசமயம், வடக்கு ஆஸ்திரேலியாவில் 3 மாதம் மட்டுமே இந்திய லைசென்ஸ் பயன்படுத்த முடியும்.

இங்கிலாந்து

பிரிட்டனில் 12 மாதங்கள், அதாவது ஒரு வருட காலத்துக்கு நமது டிரைவிங் லைசென்ஸை பயன்படுத்த முடியும்.

நியூசிலாந்து

நியூசிலாந்து நாட்டில் ஒரு வருட காலம் வரை நமது நாட்டு டிரைவிங் லைசென்ஸை பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு.

ஸ்விட்சர்லாந்து

ஸ்விட்சர்லாந்திலும் நமது நாட்டு லைசென்ஸுக்கு ஆயுள் காலம் ஒரு வருடமாகும். அதன் பிறகு சர்வதேச லைசென்ஸ் எடுத்தாக வேண்டும்.

தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்காவின் அழகான சாலைகளில் நமது லைசென்ஸை வைத்துக் கொண்டு வாகனங்களை ஓட்டி மகிழ முடியும் . ஆனால் ஒரு வருடத்திற்கு தான் அது செல்லுபடியாகும்.

ஸ்வீடன்

ஸ்வீடன் நாட்டில் நமது லைசென்ஸானது ஒரு வருட காலம் வரை செல்லுபடியாகும். அது வரை நமது லைசென்ஸ் உடன் வாகனங்களை ஓட்டி மகிழ முடியும்.

சிங்கப்பூர்

சிங்கப்பூரிலும் நமது டிரைவிங் லைசென்ஸ் செல்லுபடியாகும். இங்கும் ஒரு வருடம் இதைப் பயன்படுத்த முடியும். ஒரு வருடத்துக்குள் சிங்கப்பூரை நீங்கள் பலமுறை சுற்றிப் பார்த்து விட முடியும்.

ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டின் அழகிய ஊர்கள், கடற்கரைகளை நீங்கள் உங்களது டிரைவிங் லைசென்ஸைப் பயன்படுத்தி வாகனங்களை செலுத்தி சுற்றிப் பார்த்து மகிழலாம். இது ஆறு மாதம் வரைக்கும் செல்லுபடியாகும்.

கனடா

கனடாவில் நமது லைசென்ஸின் ஆயுள் காலம் 3 மாத காலம் மட்டுமே. குறுகிய பயணமாக செல்வதாக இருந்தால் இந்த கால கட்டமே போதுமானது.

More News

    Read more about: india
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+