Search
  • Follow NativePlanet
Share
» »ரிலாக்சாக இருக்க கொச்சியின் இந்த 5 சூப்பரான இடங்களுக்கு தான் போகணும்

ரிலாக்சாக இருக்க கொச்சியின் இந்த 5 சூப்பரான இடங்களுக்கு தான் போகணும்

கேரளாவில் உள்ள முக்கியமான தலங்களில் ஒன்றாக இருக்கும் கொச்சி, கலாச்சாரம், வரலாறு மற்றும் இயற்கையை முழுமையாக இணைக்கும் ஒரு அற்புதமான கடற்கரை நகரம் ஆகும்.சுற்றுலா செல்லத் திட்டமிடும் நண்பர்களாக இருந்தாலும் சரி, காடுகளின் அமைதியை தேடும் ஒருவராக இருந்தாலும் சரி, கொச்சியில் பல அழகான சுற்றுலாத் தளங்கள் உள்ளன. அதே போல் அமைதியான இடத்திற்கு சென்று ரிலாக்சாக ஓய்வெடுத்து விட்டு வரலாம் என நினைப்பவர்கள் செல்ல வேண்டிய கொச்சியின் சூப்பரான 5 இடங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Kochi

மரைன் டிரைவ்

மரைன் டிரைவ் கொச்சியின் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாகும்.வெளிச்சமான கடற்கரை நடைபாதை, அழகான கடல்காட்சி, மற்றும் மனம் மயக்கும் சூரிய அஸ்தமனக் காட்சி ஆகியவை இதனை பிக்னிக்கிற்கும், இயற்கையை ரசிக்கவும் சிறந்த இடமாகவும் மாற்றுகிறது. படகு சுற்றுலா சென்று சூழ்ந்துள்ள நீர்நிலைகளில் படகில் பயணிக்கலாம். அருகிலுள்ள சிறந்த உணவகங்களில் கடற்கரை உணவுகளை ருசிக்கவும், ஷாப்பிங் சென்று விரும்பியதை வாங்கி மகிழவும் ஏற்ற இடமாகும்.மெரைன் டிரைவ், அமைதியான சூழலில் ஓய்வெடுக்க விரும்புபவர்களுக்கும், புகைப்படக் காதலர்களுக்கும், குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புபவர்களுக்கும் ஒரு சிறந்த இடம் ஆகும்.

Kochi

ஃபோர்ட் கொச்சி கடற்கரை

போர்ட் கொச்சி கடற்கரை, கேரளாவின் கொச்சி நகரத்தில் அமைந்துள்ள மிக பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இது வரலாற்று முக்கியத்துவம், கலாச்சாரம், அழகிய கடற்கரை, மற்றும் சீன மீன்பிடி வலைகள் (Chinese Fishing Nets) ஆகியவற்றால் பிரபலமானது. அழகிய சூரிய அஸ்தமனக் காட்சிகளுக்குப் பெயர் பெற்றது. கொச்சியிலிருந்து படகு அல்லது சாலை வழியாக இந்த இடத்தை எளிதாக அடையலாம். இங்கு கேரளா ஸ்பெஷல் கடல் உணவுகளை ருசிக்கலாம். இது துறைமுகம் என்பதால் கொச்சியின் பிரதான அடையாளமாக இந்த இடம் கருதப்படுகிறது. இங்குள்ள வரலாற்று இடங்களான போர்த்துகீசியர்களும், டச்சுக்காரர்களும் கட்டிய பழமை வாய்ந்த கட்டிடங்களை பார்வையிடலாம்.

Kochi

சுபாஷ் போஸ் பூங்கா

சுபாஷ் போஸ் பூங்கா கொச்சி நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள அழகான மற்றும் அமைதியான பசுமை பூங்காக்களுள் ஒன்றாகும். இது நகரத்தின் சலசலப்பில் இருந்து ஒதுங்கி, குடும்பத்தினருடன் நேரம் கழிக்க சிறந்த இடமாகும்.அமைதியான சூழலில் உடல் மற்றும் மனதை தூய்மைப்படுத்த சிறந்த இடம்.பூங்காவில் இருந்து மெரைன் டிரைவ் மற்றும் நீர்நிலைகளின் அழகை காணலாம்.அருகில் உள்ள உணவகங்களில் உள்ளூர் சிறப்பு உணவுகளை ருசிக்கலாம்.சுபாஷ் போஸ் பூங்கா என்பது இயற்கையின் பசுமை, கடல்காற்று, அமைதி, மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு மையத்துடன், குடும்பத்தினருக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் சிறந்த இடம்.

மங்களவனம் பறவைகள் சரணாலயம்

கொச்சி நகரின், இயற்கையின் வளம் நிரம்பிய அழகிய சரணாலயமாகும். இது நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய, ஆனால் முக்கியமான மிதநீர்வாழ் பகுதி (Mangrove Ecosystem) ஆகும்.பல்வேறு குட்டிப்பறவைகள், நீர்பறவைகள், மற்றும் சீசன் பறவைகளை இங்கே காணலாம். ஒட்டகச் சிவிங்கிகள், சிலந்திகள், மற்றும் சிறிய விலங்குகள் போன்ற பல்வேறு உயிரினங்கள் காணப்படுகின்றன. இது அடர்ந்த தாவரங்களால் நகரத்தின் "பசுமை நுரையீரல்" என்று அழைக்கப்படுகிறது. 72க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் மற்றும் சதுப்பு நிலக் காடுகளுக்கு தாயகமாக உள்ளது. இயற்கை ஆர்வலர்களும் பறவை ஆர்வலர்களும் மங்களவனம் பறவைகள் சரணாலயத்தை ரசிப்பார்கள்.

சேராய் கடற்கரை

சேராய் கடற்கரை கொச்சியில் உள்ள மிக அழகான மற்றும் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றாகும். இது சுத்தமான மணல், அமைதியான நீர், மற்றும் கடற்கரையோர உணவகங்கள் ஆகியவற்றால் பிரபலமானது. இது குடும்பங்களுக்கும், நண்பர்கள் குழுக்களுக்கும், கடற்கரையை நேசிப்பவர்களுக்கும் சிறந்த இடமாக விளங்குகிறது. இங்கு தண்ணீர் அமைதியாக இருப்பதால் நீச்சலுக்குப் பொருத்தமான இடமாகும்.மஞ்சள், சிகப்பு வண்ணங்களில் அழகான சூரிய அஸ்தமனக் காட்சியை ரசிக்கலாம்.கடற்கரையில் அமைதியாக சைக்கிள் ஓட்டலாம் அல்லது நடைபயணத்தை அனுபவிக்கலாம். கடலோர உணவகங்களில் பிரபலமான மலபார் உணவுகளை ருசிக்கலாம்.

More News

Read more about: kochi kerala kerala tourism
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+