Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் 5 மிகப்பெரிய அணைகள்!

இந்தியாவின் 5 மிகப்பெரிய அணைகள்!

By

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் எண்ணற்ற அணைகளும், நீர்த் தேக்கங்களும் நாடு முழுக்க கட்டப்பட்டன. தற்போது உலக அளவில் அணைக்கட்டுமானத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.

இன்றளவில் 4300 அணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், இவற்றில் பெரும்பாலானவை 20 ஆண்டுகள் பழமையானவையாகும். ஒவ்வொரு அணையும் ஒவ்வொரு வகையில் தனிச் சிறப்புபெற்று விளங்கி வருகின்றன.

அதாவது உத்தரகண்ட் மாநிலத்தில் பகீரதி ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள தெஹ்ரி அணை இந்தியாவின் உயரமான அணையாக கருதப்படுகிறது.

அதேபோல இந்தியாவில் கட்டப்பட்ட முதல் வில்லணையாகவும், ஆசியாவின் மிகப்பெரிய வில்லணையாகவும் பெரியார் நதிக்கு குறுக்கே கட்டப்பட்ட இடுக்கி வில்லணை திகழ்கிறது.

மேலும் திருச்சிராப்பள்ளி அருகே காவிரி ஆற்றின் குறுக்காக 2000 ஆண்டுகளுக்கு முன்பாக கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை உலகின் பழமையான அணையாகவும், நம் பாரம்பரிய பெருமையை எடுத்துரைக்கும் விதமாகவும் திகழ்ந்து வருகிறது.

தெஹ்ரி அணை

தெஹ்ரி அணை

உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள தெஹ்ரி அணை பகீரதி ஆடரின் குறுக்காக கட்டப்பட்டுள்ளது. 261 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணை இந்தியாவின் உயரமான அணையாகவும், உலகின் 8-வது உயரமான அணையாகவும் அறியப்படுகிறது.

படம்

பக்ராநங்கல் அணை

பக்ராநங்கல் அணை

பக்ராநங்கல் அணை ஹிமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 225 மீட்டர் உயரம் கொண்ட பக்ராநங்கல் அணை, தெஹ்ரி அணைக்கு பிறகு இந்தியாவின் உயரமான அணையாக திகழ்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த அணையின் நீர்த்தேக்கமான 'கோபிந்த் சாகர் ஏரி' இந்தியாவின் 2-வது பெரிய நீர்த்தேக்கமாக அறியப்படுகிறது.

படம் : Apar Singh Bataan

ஹீராகுட் அணை

ஹீராகுட் அணை

ஓடிஸா மாநிலத்தில் மகாநதி ஆற்றின் குறுக்கே ஹீராகுட் அணை கட்டப்பட்டுள்ளது. 26 கி.மீ நீளம் கொண்ட இந்த அணை உலகின் நீளமான அணைகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

படம்

நாகர்ஜுனா சாகர் அணை

நாகர்ஜுனா சாகர் அணை

ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள நாகர்ஜுனா சாகர் அணை கிருஷ்ணா நதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ளது. 124 உயரம் கொண்ட இந்த அணை 1.6 கி.மீ நீளத்துடனும், 26 கதவுகளுடனும் நவீன இந்திய கட்டிடக்கலையின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

சர்தார் சரோவர் அணை

சர்தார் சரோவர் அணை

குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் சரோவர் அணை நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 163 உயரம் கொண்ட இந்த அணை நர்மதா நதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ளதால் நர்மதா அணை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

படம்

More News

    Read more about: அணைகள்
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+