Search
  • Follow NativePlanet
Share
» »குழந்தைகளின் கோடை விடுமுறையை மறக்க முடியாததாக மாற்றும் சூப்பரான 5 தீம் பார்க்குகள்

குழந்தைகளின் கோடை விடுமுறையை மறக்க முடியாததாக மாற்றும் சூப்பரான 5 தீம் பார்க்குகள்

கோடை விடுமுறை நெருங்கி விட்டது. உங்கள் குழந்தைகளின் கோடை விடுமுறையை மறக்க முடியாத வகையில் அனுபவிக்க ஒரு தீம் பார்க்கில் சென்று ஜாலியாக என்ஜாய் பண்ணலாம். கிளாசிக் கதாபத்திரங்கள் முதல் உற்சாகமான சவாரிகள் வரை, தீம் பார்க்குகள் அனைவருக்கும் ஏதாவது ஒன்றை வழங்குகின்றன. இது மாதிரி பல தீம் பார்க்குகள் உள்ளதால் அவற்றில் சரியானதை தேர்வு செய்வது மிகவும் கடினமாக இருக்கும். முழு குடும்பத்திற்கும் கோடை விடுமுறை நாட்களை மறக்க முடியாத நாட்களாக இருக்கும் வகையில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 தீம் பார்க்குகளின் பட்டியல் இதோ...

வால்ட் டிஸ்னி வேர்ல்ட் ரிசார்ட், புளோரிடா

தீம் பார்க்குகளின் ராஜாவான வால்ட் டிஸ்னி வேர்ல்ட், மேஜிக் கிங்டம், எப்காட், ஹாலிவுட் ஸ்டூடியோ மற்றும் அனிமல் கிங்டம் ஆகிய நான்கு தனித்துவமான பூங்காக்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு பூங்காவிலும் ஒவ்வொரு வகையான பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. குறிப்பாக மேஜிக் கிங்டமில் பீட்டர் பானுடன் வானத்தில் உயரமாக செல்லுவது மற்றும் அனிமல் கிங்டமில் சஃபாரி செய்து உண்மையான விலங்குகளை கண்டு ரசிப்பது வரை சின்னச் சின்ன விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. டிஸ்னி வேர்ல்டில் அற்புதமான அணிவகுப்புகள், டிஸ்னி கதாபாத்திரங்களுடனான சந்திப்பு மற்றும் வாழ்த்துகள் மற்றும் திகைப்பூட்டும் வானவேடிக்கைகள் போன்ற மாயாஜால நிகழ்வுகள் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஹாலிவுட், லாஸ் ஏஞ்சல்ஸ்

இந்த பூங்கா திரைப்பட ரசிகர்களின் சொர்க்கமாக திகழ்கிறது. மேலும் இங்கு ஜுராசிக் பார்க் மற்றும் தி விசார்டிங் வேர்ல்ட் ஆப் ஹாரி பாட்டர் போன்ற சிறந்த படங்களின் நிகழ்விடங்களை நேரடியாக கண்டு அனுபவிக்கலாம். இதய துடிப்பை அதிகரிக்க செய்யும் ரோலர் கோஸ்டர் முதல் இன்டராக்டிவ் ஷோ வரை பல வகையான சாகச நிகழ்ச்சிகளை விரும்பும் குடும்பங்களுக்கு யுனிவர்சல் ஸ்டுடியோ ஒரு சிறந்த அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது.

லெகோலேண்ட் புளோரிடா

LEGOLAND என்பது அனைவருக்கும் பிடித்தமான பொழுதுபோக்கு நிறைந்த அதிசய இடமாகும். குழந்தைகள் தங்கள் விருப்பமான LEGO மாடல்களை கண்டு ரசித்து மகிழலாம். குழந்தைகள் தங்கள் சொந்த படைப்புகளை உருவாக்கலாம், Ninjago மற்றும் Pirates போன்ற பிரபலமான LEGO தீம்களை கொண்ட சிலிர்ப்புட்டும் சவாரிகளை அனுபவிக்கலாம். நீர் விளையாட்டுகள், நிகழ்ச்சிகள் கதாபாத்திரங்களுடன் சந்தித்தல் போன்றவை LEGOLAND குழந்தைகள் மற்றும் குடும்பங்களுடன் ஒரு முழுமையான பொழுதுபோக்கை வழங்குகிறது.

டோலிவுட் பிஜியன் போர்ஜ், டென்னஸி

கிரேட் ஸ்மோக்கி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள டோலிவுட் தீம் பார்க் சிலிர்ப்புகள் மற்றும் தெற்கு வசீகரத்தின் தனித்துவமான கலவையாக உள்ளது. உலகத்தரம் வாய்ந்த ரோலர் கோஸ்டர் சவாரிகள், புளூக்ராஸ் மற்றும் நாட்டுபுற இசைகளுடன் நேரடி நிகழ்ச்சிகள், டோலிவுட்டின் கண்கவர் கைவினை விளக்கங்கள் போன்றவை கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் விரும்பும் குடும்பங்களுக்கு ஏற்ற ஒரு அற்புதமான இடமாகும்.

ஐரோப்பா-பார்க் ரஸ்ட், ஜெர்மனி:

ஐரோப்பா -பார்க் பல்வேறு ஐரோப்பிய நாடுகளை பிரிதிநித்துவப்படுத்தும் வகையில் ஒவ்வொரு தனித்துவமான சவாரிகள், நிகழ்ச்சிகள் மற்றும் சமையல் நிகழ்ச்சிகள், ஜெர்மனியின் சில்வர் ஸ்டார் கோஸ்டரின் வைட்-நக்கிள் த்ரில்ஸ் முதல் இத்தாலியின் கோண்டோலாக்கள் வரை, ஐரோப்பா பார்க் ஒரு வேடிக்கையான மற்றும் கல்வி அனுபவத்தை முழு குடும்பத்திற்கும் வழங்குகிறது.

More News

    Read more about: world tour
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+