Search
  • Follow NativePlanet
Share
» »அதிகமான நதிகளை கொண்ட உலகின் 7 நாடுகள் இவைகள் தான்

அதிகமான நதிகளை கொண்ட உலகின் 7 நாடுகள் இவைகள் தான்

ஒவ்வொரு நாடும் தனது தனித்துவமான நதிகளை கொண்டு பல்லுயிர் சூழலியல் மற்றும் அழகியல் சிறப்புகளை எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக ரஷ்யா, பங்களாதேஷ், இந்தியா, அமெரிக்கா, கனடா, இந்தோனேஷியா, மற்றும் சீனா ஆகிய நாடுகளின் நதிகள் உலக அளவில் மிக முக்கியமானவைகளாக கருதப்படுகின்றன. மிக நீளமான நதிகள், அதிகமான கிளை நதிகளை கொண்ட நதிகள், வற்றாமல் இருக்கும் நதிகள் என பலவகைகளில் பிரசித்தி பெற்ற நதிகள் உள்ளன. அப்படி உலக அளவில் அதிகமான நதிகளைக் கொண்ட நாடுகளின் பட்டிலைய தெரிந்து கொள்வோம்.

அதிக நதிகளை கொண்ட 7 நாடுகள்

Moscow

1. ரஷ்யா

உலகில் அதிகமான எண்ணிக்கையிலான நாடுகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இருக்கும் ரஷ்யாவில் சுமார் ஒரு லட்சம் நதிகள் உள்ளதாம். இவற்றில் சில நதிகள் மிக நீளமானவையாகவும், உலகிலேயே சக்திவாய்ந்த நதிகளாகவும் உள்ளன. உலகின் மிகப்பெரிய மற்றும் நீண்ட நதிகளில் ஒன்றான லீனா நதி சைபீரியாவின் பனிக்காடுகளில் உற்பத்தியாகி, ஆர்க்டிக் பெருங்கடலுடன் கலக்கிறது.

2. வங்கதேசம்

நதிகளின் நிலம் என்று அழைக்கப்படும் வங்கதேசத்தி ் பத்மா மற்றும் ஜமுனா போன்ற 700-க்கும் மேற்பட்ட ஆறுகள் பாய்கின்றன.இந்த அனைத்து நதிகளிலும் வெயில் காலமானாலும், மழைக்காலம் ஆனாலும் எப்போதும் வற்றாமல் தண்ணீர் பாய்ந்து ஓடிக் கொண்டே இருக்கும். வங்கதேசத்தில் மிக முக்கியமான நதியான மேக்னா, இதன் பரந்த நீர்ப்பரப்பு மற்றும் ஹில்சா மீன்களின் வாழ்விடமாக உள்ளது. இது உப்புநீர் மற்றும் இனிப்புநீர் கலந்த சிறப்பு சூழலியலை வழங்குகிறது. இது மண் சரிவுகளால் பல தடைகளை சந்தித்தாலும், கடலோடிய நிலப்பரப்புகளை உருவாக்கும் தன்மை கொண்டவையாகும்.

Ganga river

3. இந்தியா

400 க்கும் மேற்பட்ட ஆறுகளைக் கொண்டுள்ளது இந்தியா. கங்கை, யமுனை மற்றும் பிரம்மபுத்திரா ஆகியவை குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் உள்ள நதிகளாகும். இதில் பிரம்மபுத்திரா நதி அதன் பல்வேறு இயற்கை நிலைகள் மற்றும் பருவமழை காரணமாக இந்தியாவின் மிகப்பெரிய நதிகளில் ஒன்றாக விளங்குகிறது. இதன் கப்பல் போக்குவரத்து, ஜலசக்தி திட்டங்கள் இந்த நதியினை தனித்துவமாக மாற்றுகின்றன. 14 பிரதான நதிகளும், 20 கிளை நதிகளும், 99 சிறிய ஆறுகளும் இந்தியாவில் உள்ளன.

4. அமெரிக்கா

உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றாக இருக்கும் அமெரிக்காவில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான நதிகள் பாய்கின்றனவாம். மிசிசிப்பி நதி வட அமெரிக்காவின் முதன்மை வாழ்வாதார நதியாக விளங்குகிறது. இங்கு கடற்கழுகு, பெரிய ஆமைகள் போன்றவை காணப்படுகின்றன. இந்த நதி அதன் பழங்குடி சமூகங்களின் வாழ்க்கை முறைக்கு முக்கியமான ஆதாரமாக விளங்குகிறது.

5. கனடா

கனடாவில் 8500 க்கும் மேற்பட்ட பெயரிடப்பட்ட ஆறுகள் உள்ளன. இது தவிர சில சிறிய நதிகளும், பெயரிடப்படாத நதிகளும் உள்ளன. மக்கென்சி நதி கனடாவின் மிகவும் முக்கியமான பனிப் பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக செயல்படுகிறது. இது மக்கள் வாழ்வதற்கு முக்கியமான நதி ஆகும்.இங்கு பனிக்கோழிகள், பனிக்கரடிகள், மற்றும் கடற்கழுகுகள் போன்றவை வாழ்கின்றன.

6. இந்தோனேஷியா

இந்தோனேஷியாவில் 5590 நதிகள் ஓடுகின்றன. இங்குள்ள மிக நீளமான நதியான கபுவாஸ், பரந்த மழைக்காடுகளின் நடுவே பாய்கிறது. இது ஆசிய கரடியும், பல்வகையுள்ள பறவைகளும் வாழும் இடமாக விளங்குகிறது. இந்த நதி 1143 கி.மீ., வரை பயணிக்கிறது. ஆனால் இங்குள்ள பாதிக்கும் மேற்பட்ட நதிகள் மிகவும் மாசடைந்து காணப்படுகின்றன.

7. சீனா

சீனாவில் உண்மையில் 50,000 அதிகமான நதிகள் உள்ளன. ஆனால் காலநிலை மாற்றம், மண் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை பல நதிகள் காணாமல் போய் விட்டன. தற்போது அங்கு 22,000 நதிகள் மட்டுமே உள்ளன. சீனாவில் உள்ள மொத்த நதிகளின் நீளம் 4,20,000 கி.மீ., ஆகும். உலகின் மூன்றாவது மிகப்பெரிய நதியான யாங்சே சீனாவின் முக்கியமான பசுமை வளம் கொண்ட நதியாகும் . இதன் நீரில் சீனாவின் தனிப்பட்ட டால்பின்கள் மற்றும் மீன் வகைகள் வாழ்கின்றன.

More News

    Read more about: river world trip
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+