Search
  • Follow NativePlanet
Share
» »முதல் முறையாக சர்வதேச பயணம் போக போறீங்களா? இதெல்லாம் மறக்காம தெரிஞ்சுக்கோங்க

முதல் முறையாக சர்வதேச பயணம் போக போறீங்களா? இதெல்லாம் மறக்காம தெரிஞ்சுக்கோங்க

முதன்முறையாக சர்வதேச பயணம் மேற்கொள்பவர்களுக்கு, அது ஒரு பரவசமான அனுபவமாக இருக்கும். ஆனால் சரியான திட்டமிடல் இல்லா விட்டால், புதிய இடங்களுக்கு செல்லும் போது சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதனால், உங்கள் முதல் சர்வதேச பயணத்தை சிறப்பாக மாற்ற, நீங்கள் பின்பற்ற வேண்டிய 7 முக்கியமான குறிப்புகள் இதோ...

Airport

1. பாஸ்போர்ட் மற்றும் விசா தயார் செய்தல்:

சர்வதேச பயணத்தின் முக்கிய அடிப்படை உங்கள் விசா மற்றும் பாஸ்போர்ட் ஆகும். பயணத்திற்கு முன் உங்கள் பாஸ்போர்ட் காலாவதியாமல் இருக்கிறதா என்பதையும், பயண தேதிக்கு பிறகு 6 மாதங்கள் வரை செல்லுபடியாகும் வகையில் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், தேவையான விசா முறைகளை முன்கூட்டியே மேற்கொள்ளுங்கள். சில நாடுகள் இ-விசா (E-Visa) வழங்குகின்றன, இதனால் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

2. ஆவணங்களின் டிஜிட்டல் மற்றும் ஜெராக்ஸ் வைத்திருத்தல் :

சர்வதேச பயணத்தின் போது, முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம். உங்கள் பாஸ்போர்ட் , விசா, விமான டிக்கெட், மருத்துவ காப்பீடு, ஹோட்டல் முன்பதிவு விவரங்கள் போன்ற அனைத்து ஆவணங்களின் டிஜிட்டல் மற்றும் ஜெராக்ஸ் காப்பியை உங்களுடன் வைத்திருக்க வேண்டும்.

3. அவசியமான பொருட்களை மட்டும் எடுத்து செல்லுங்கள்:

சர்வதேச பயணத்தின் போது, வானிலை முன்னறிவிப்புகளை அறிந்து அதற்கேற்ற உடைமைகளை மிதமாகவும், கூடுதல் கட்டணங்களை தவிர்த்திடும் பொருட்டு தேவையானதையும் மட்டும் எடுத்துச் செல்லவும்.

4.பயணத்திற்கான செலவை திட்டமிடல்:

சர்வதேச பயணத்தின் போது, வெளிநாட்டில் செலவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை முன்கூட்டியே ஆய்வு செய்யுங்கள். உங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் சர்வதேச அளவில் பயன்படுத்த முடியுமா என்பதை சரிபார்க்கவும். மேலும், சில அங்கீகரிக்கப்பட்ட பண மாற்ற நிலையங்களில் (Forex Exchange) உங்கள் பணத்தை மாற்றிக்கொள்ளலாம்.

5. உள்ளூர் மொழி சொற்களை கற்றுக் கொள்ளுதல்:

சர்வதேச பயணத்தின் போது, அந்த நாட்டின் உள்ளூர் மொழியின் அடிப்படை சொற்களை (Basic Local Phrases) கற்றுக் கொள்ளுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புதிய நாட்டிற்குச் செல்லும்போது, எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள் என்ற நம்பிக்கையில் இருப்பதை விட, வணக்கம், நன்றி, என்னை மன்னிக்கவும், இந்த இடத்திற்கு எப்படி செல்லலாம், என்ன விலை, உதவி செய்ய முடியுமா போன்ற முக்கிய சொற்களுக்கு உள்ளூர் சொற்களை தெரிந்துகொள்வது பயண அனுபவத்தை எளிதாக்கும்.

6.பயணக் காப்பீடு:

சர்வதேச பயணம் செய்யும் போது, பயணக் காப்பீடு (Travel Insurance) என்பது ஒரு முக்கியமான பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது. எதிர்பாராத மருத்துவ அவசர நிலைகள், பயணத்திற்கான மாற்றங்கள், உடமைகள் இழப்புகள் போன்றவற்றுக்கு எதிராக இது நிதி பாதுகாப்பு அளிக்கிறது.

7. உள்ளூர் கலாச்சாரம் மற்றும் விதிகளை அறிந்து கொள்ளுங்கள்:

ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்துவமான சம்பிரதாயங்கள் மற்றும் சட்டங்கள் இருக்கும். உதாரணமாக, சில நாடுகளில் தெருவில் துப்புவது சட்டவிரோதமாக இருக்கலாம், மற்ற சில இடங்களில் மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். உங்கள் பயண நாடுகளின் கலாச்சாரம் மற்றும் நடைமுறைகளை தெரிந்துகொள்வது, உங்கள் பயணத்தை இனிமையாக்கும்.

முதன்முறையாக சர்வதேசம் பயணம் செய்யும் போது, சிறிய கவனக்குறைவுகளும் பெரும் பிரச்சனைகளாக மாறலாம். மேலே கூறிய பயண குறிப்புகளை பின்பற்றி, உங்கள் பயண அனுபவத்தை இனிமையாகவும் பாதுகாப்பாகவும் மாற்றிக்கொள்ளுங்கள். புதிய நாடுகளையும், கலாச்சாரங்களையும் கண்டு மகிழுங்கள்!

More News

    Read more about: world trip
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+