Search
  • Follow NativePlanet
Share
» »சம்மருக்கு கேரளாவுக்கு பட்ஜெட் டூர் போகலாம்...நீங்க ரெடியா?

சம்மருக்கு கேரளாவுக்கு பட்ஜெட் டூர் போகலாம்...நீங்க ரெடியா?

கேரளாவுக்கு செல்வதென்றாலும் பலருக்கும் இஷ்டம் தான். காரணம், இயற்கை அன்னையின் தழுவலில் வனப்புற காட்சி தரும் அற்புத பூமி கேரளா. அப்படிப்பட்ட கேரளாவுக்கு போவதற்கு நீங்க ரெடியா இருக்கீங்களா? ஆசையாக தான் இருக்கு இருந்தாலும் டூர் என்றால் அதிகம் செலவு ஆகுமே என யோசிக்கிறீங்களா? வாங்க அதுக்கு நாங்க ஐடியாஸ் தர்றோம்.

Kathakali

டிரிப் பிளான்

எந்த ஊருக்கு டூர் செல்வதாக இருந்தாலும் அதற்கு முன்பாக அந்த இடத்தை பற்றியும், அதை சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள், விலைவாசி நிலவரம், பாதுகாப்பு, தங்கும் இடம் உள்ளிட்ட, உணவு உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கு பிறகு அங்கு செல்வதால் உள்ளூர் வியாபாரிகளிடம் அதிக விலை கொடுத்து ஏமாறாமல் இருக்க முடியும்.

பட்ஜெட் பிளான்

முதலில் உங்களது பட்ஜெட்டையும், முன்னுரிமைகளையும் பட்டியல் போட்டுக்கங்க. எத்தனை பேர் போகப் போறீங்க, எங்கெல்லாம் போவதற்கு திட்டமிட்டிருக்கீங்க, தோராயமாக எவ்வளவு செலவாகும், போக்குவரத்து, தங்குமிடம், சாப்பாடு, சுற்றிப் பார்ப்பது என எல்லாவற்றையும் பிளான் பண்ணிக்கோங்க.

Kerala backwater

டைமிங் முக்கியம்

எந்த சமயத்தில் கேரளாவிற்கு டூர் போக வேண்டும் என்பது முக்கியம். கேரளா டூர் செல்வதற்கு சரியான மாதங்கள் எவை என்பதை முதலில் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மே முதல் செப்டம்பர் வரை போவதற்கு சரியான டைம். காரணம் அப்போது ஹோட்டல்களில் கூட்டம் குறைவாக இருக்கும். வாடகையும் சற்று குறைந்து காணப்படும். குளிர்காலத்திலும் போகலாம். ஆனால் அப்போது செலவு அதிகமாக இருக்கும். எனவே உங்களுக்கு வசதியான நேரத்தை முடிவு பண்ணிக்கோங்க.

போக்குவரத்து பிளான்

ரயில்கள் அல்லது ஸ்லீப்பர் கோச் உள்ள பஸ்களில் போவது சரியான ஐடியா. இதன் மூலம் செலவைக் குறைக்கலாம். சொந்த வாகனங்களில் சென்றால் கண்டிப்பாக நிறைய செலவு ஆகும். கேரளாவுக்குப் போன பிறகு உள்ளூர் பஸ்களை அதிகம் பயன்படுத்தலாம். அதே போல் ஆட்டோக்களையும் பயன்படுத்தலாம். டூவீலர் வாடகைக்கு எடுத்தும் உள்ளூரைச் சுற்றிப் பார்க்கலாம்

Kathakali

பட்ஜெட் தங்குமிடம்

கேரளாவில் நமது பட்ஜெட்டிற்கு ஏற்றது போன்ற தங்குமிடங்கள் நிறைய உள்ளன. அவற்றைத் தேர்வு செய்து அங்கு தங்கலாம். ஹாஸ்டல்கள், கெஸ்ட் ஹவுஸ்கள், ஹோம்ஸ்டேக்கள், ஈகோ ரிசார்ட்டுகளும் கூட நிறைய உள்ளன. ஆன்லைனில் ரூம்கள் புக் செய்வதற்கு பதிலாக தெரிந்தவர்களை வைத்து அல்லது நேரில் சென்று ரூம் புக் செய்வது நல்லது.

பார்க்க வேண்டிய இடங்கள்

கோவில்கள், உள்ளூர் மார்க்கெட்டுகள், கடற்கரைகள், இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பகுதிகளுக்குச் செல்வதன் மூலம் நமக்கு செலவும் குறையும், நல்ல அனுபவமும் கிடைக்கும். செலவு இல்லாமல் ஜாலியாக என்ஜாய் செய்து விட்டு வரலாம்.

உணவு

உள்ளூர் சாப்பாட்டை சாப்பிடுங்கள். எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊர்ச் சாப்பாட்டை சாப்பிடுவது நல்லது. காரணம் அந்த ஊரின் கலாச்சாரத்தை அறிய முடியும். செலவும் குறைவாக இருக்கும். மேலும் தெருவோர சிற்றுண்டி ஸ்டால்கள் நிறைய உள்ளன. பட்ஜெட்டுக்கும் அது ஒத்து வரும். தோசை, ஆப்பம், இடியாப்பம், மீன் கறி போன்றவை கேரளாவின் கலாச்சார உணவுகள். ஒரு பிடி பிடிங்க.

கேரளாவுக்குப் போனால் எல்லா இடத்தையும் பார்த்தே ஆக வேண்டிய அவசியம் இல்லை. சில இடங்களை மட்டும் பார்த்தால் போதுமானது. இதனால் தேவையில்லாத செலவுகளைக் குறைக்கலாம். குறிப்பாக கொச்சி, ஆலப்புழா, மூணாறு ஆகியவை முக்கியமானது. அங்கு போகலாம். அதே போல் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடங்களுக்கு செல்லும் வழக்கமான இடங்களுக்கு பதிலாக இதுவரை பார்க்காத புதிய இடங்களுக்கு செல்வதால் புதிய பல அனுபவங்கள் கிடைக்கும்.

More News

    Read more about: kerala kerala tourism
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+