Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் சுவாரஸ்யமான மலை ரயில் பயணத்திற்கு ஏற்ற 8 இடங்கள் இவை தானாம்

இந்தியாவில் சுவாரஸ்யமான மலை ரயில் பயணத்திற்கு ஏற்ற 8 இடங்கள் இவை தானாம்

ரயில் பயணங்கள் எப்போதுமே அழகானவை.. அற்புதமானவை.. மறக்க முடியாதவை. அதிலும் சூப்பரான இடங்களுக்கு மேற்கொள்ளும் ரயில் பயணங்களை அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது. அதிலும் மலை ரயில் பயணம் என்றால் கேட்கவே வேண்டாம். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளக் கூடியவை அவை. அப்படிப்பட்ட சில மலை ரயில் பயணங்கள் பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

Vande Bharat Express train on the Anji Khad bridge in Jammu amp amp Kashmir

1. டார்ஜீலிங் ஹிமாலயன் ரயில்வே

இதை டாய் டிரெய்ன் என்றும் செல்லமாக சொல்வார்கள். யுனெஸ்கோவால் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது இந்த ரயில் ரூட். தேயிலைத் தோட்டங்கள், அடர்ந்த காடுகள், அருமையான மலைப் பகுதிகள், கஞ்சன்ஜங்கா சிகரத்தின் எழில் கொஞ்சும் காட்சிகளை ரசித்தபடி இந்த ரயிலில் பயணம் செய்யும்போது சொர்க்கமே நம் கண்ணுக்குத் தெரியும். அப்படிப்பட்ட திரில்லான, அருமையான ரயில் பயணம் இது. உங்க வாழ்க்கையில் ஒரு முறையாவது நீங்க இங்கு போய் பயணிக்க வேண்டும்.

2. கல்கா - சிம்லா ரயில்

இமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள கல்கா - சிம்லா ரயில் இன்னொரு பூலோக சொர்க்கம். யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட ரயில் இது. டாய் டிரெய்ன் என்று இதை யுனெஸ்கோ வர்ணிக்கிறது. இந்த ரயில் செல்லும் பாதையெல்லாமே சூப்பராக இருக்கும். 864 பாலங்கள், 102 சுரங்கப் பாதைகள், 919 ஹேர்பின் வளைவுகள் என செம திரில்லிங்கான அனுபவம் இந்த ரயில் பயணத்தில் கிடைக்கும். இமயமலையின் எழில் கொஞ்சும் அழகை வழியெல்லாம் ரசித்தபடி பயணிக்கலாம். அட்டகாசமான ரயில் பயணம் இது.

Vande Bharat Express train on the Chenab Rail Bridge in Jammu amp amp Kashmir

3. ஊட்டி மலை ரயல்

நம்ம ஊரு நீலகிரி மலை ரயிலை சொல்லாமல் இருக்க முடியுமா? அழகான நீலகிரி மலையில் ஊர்ந்து செல்லும் இந்த ரயிலில் பயணிக்காதவர்களே இருக்க முடியாது. தேயிலைத் தோட்டங்கள், நீர் வீழ்ச்சிகள், அடர்ந்த காடுகள் என இந்த ரயில் செல்லும் பாதை எல்லாமே சொர்க்கம் தான். மலைகளின் ராணியான ஊட்டியை பார்க்க மேட்டுப்பாளையத்திலிருந்து இந்த ரயிலில் பயணிப்பதே சுகானுபவம் தான்.

4. மாத்தரன் ஹில் ரயில்வே

மாத்தரன் ஹில் ரயில்வே - மகாராஷ்டிராவில் உள்ளது இந்த ரயில். இந்தியாவிலேயே கார் உள்ளிட்ட எந்த வாகனமும் இல்லாத ஒரே மலைவாசஸ்தலம் இந்த மாத்தரன் மலைப் பகுதி தான். இந்தப் பகுதிக்கு இயக்கப்படும் இந்த மலை ரயிலானது மிகவும் மெதுவாகத்தான் செல்லும். அடர்ந்த காடுகள் வழியாக இது செல்லும் அழகே தனி. பள்ளத்தாக்குகள், மலைச் சிகரங்கள் என வழியெங்கும் அட்டகாசமான இயற்கையை அனுபவித்தபடி செல்லலாம்.

5. கங்கரா பள்ளத்தாக்கு ரயில்

கங்கரா பள்ளத்தாக்கு ரயில், இந்த ரயில் பயணத்தை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் அற்புதமான ரயில் பயணம் இது. கண்டிப்பாக இதில் பயணித்தே ஆக வேண்டும் நீங்கள். பசுமையான பள்ளத்தாக்குகள், தோட்டங்கள், தலுதார் மலைச் சிகரம் ஆகியவற்றின் வழியாக இந்த ரயில் பயணம் இருக்கும். அற்புதமான அனுபவத்தை இந்த ரயில் பயணம் தரும் என்பது முக்கியமானது.

6. ஜம்மு பாரமுல்லா ரயில்

ஜம்மு பாரமுல்லா ரயில் இன்னொரு அற்புதம். இந்தியாவின் மிக மிக அழகான ஒரு பிராந்தியம் ஜம்மு காஷ்மீர். அங்கு செயல்படும் இந்த ரயிலானது பனி படர்ந்த மலைப் பகுதிகள் வழியாக செல்லும் அழகை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. உலகின் மிகவும் உயரமான ரயில் பாலம் என்று கூறப்படும் சேனாப் பாலத்தின் மீது இந்த ரயில் செல்லும் போது நாம் சந்திக்கும் உணர்வுக்கு வார்த்தைகள் கிடையாது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் அழகுக் கோலத்தையும் இந்த ரயில் பயணத்தின் போது நாம் பார்த்து ரசிக்க முடியும்.

7. லம்டிங் சில்சார் மலை ரயில்

லம்டிங் சில்சார் மலை ரயில்.. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ளது இந்த ரயில். வட கிழக்கின் மிக மிக அழகான ரயில் பயணங்களில் இதுவும் ஒன்று. பசுமையான தோட்டங்கள், வனப் பகுதிகள், பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள், பழங்குடியினர் வசிக்கும் கிராமங்கள் வழியாக இந்த ரயில் செல்லும். அஸ்ஸாமின் அழகை அள்ளிப் பருகியபடி இதில் பயணிப்பதே தனி சுகம் தான்.

8. அரக்குவேலி ரயில்

விசாகப்பட்டினம் - அரக்குவேலி ரயில். தென்னிந்தியாவின் அழகான ரயில் பயண அனுபவத்தில் இதுவும் முக்கியமானது. மொத்தம் 58 சுரங்கப் பாதைகள், 84 பாலங்கள், அடர்ந்த வனப் பகுதிகள் வழியாக இந்த ரயில் செல்லும் அழகே தனி. அரக்கு வேலியின் அழகை ரசித்துப் பார்த்தபடி இதில் பயணிக்க முடியும். காபித் தோட்டங்களின் அழகே தனி தான். அதிலும் ஆங்காங்கே இருக்கும் நீர் வீழ்ச்சிகளை ரசிக்க 2 கண்கள் போதாது.

More News

Read more about: train
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+