Search
  • Follow NativePlanet
Share
» »பார்த்தாலே குலைநடுங்க வைக்கும் உலகின் 8 படு த்ரிலான ரோலர் கோஸ்டர் சவாரிகள்

பார்த்தாலே குலைநடுங்க வைக்கும் உலகின் 8 படு த்ரிலான ரோலர் கோஸ்டர் சவாரிகள்

சாகச ஆர்வலர்கள் மற்றும் சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை விரும்புவர்களுக்கு, மிக உயரத்தில், படுவேகமாக இயங்கும் ரோலர் கோஸ்டர் சவாரிகள் உலகெங்கிலும் பல உள்ளன. அவற்றில் பார்த்தாலே பதற வைக்கும் அளவிற்கு இருக்கும் மிக முக்கியமானதும் மற்றும் பயங்கர திரில்லிங்கான அனுபவத்தை கொண்டதுமான ரோலர் கோஸ்டர் சவாரிகள் என்னென்ன, அவை எங்குள்ளன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

roller coaster ride

ஃபார்முலா ரோசா, யுஏஇ

அபுதாபியில் உள்ள ஃபெராரி வேர்ல்டில் அமைந்துள்ள இது, உலகின் அதிவேக ரோலர் கோஸ்டராகும். இது வெறும் 4.9 வினாடிகளில் 240 கிலோ மீட்டர் அல்லது மணிக்கு 149 மைல் வேகத்தை எட்டக்கூடியது. ஃபார்முலா 1 காரை போல் இந்த சவாரியும் ஒரு அற்புதமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இங்குள்ள ஃபெராரி சின்னத்தை பிரதிபலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

கிங்டா கா, அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் உள்ள சிக்ஸ் ஃபிளாக்ஸ் கிரேட் அட்வென்ச்சரில் காணப்படும் கிங்டா 456 அடி உயரம் உள்ள உலகின் மிக உயரமான ரோலர் கோஸ்டராகும். இது ஒரு பயமுறுத்தும் சவாரியாக அமைந்துள்ளது. இந்த ரோலர் கோஸ்டர் 128 மைல் வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் தொடங்கி அதன் உயரத்தை சென்றடைகிறது. இதில் பயணம் செய்வது ஒரு திரில்லிங்கான அனுபவத்தை தருவதாக உள்ளது.

roller coaster

கேட் கீப்பர், அமெரிக்கா

ஓஹியோவில் உள்ள சீடர் பாயிண்ட் கேளிக்கை பூங்காவில் அமைந்துள்ள கேட் கீப்பர் அதன் தனித்துவமான வடிவமைப்பால் புகழ்பெற்றதாகும். உலகின் மிக நீளமான இறக்கைகள் கொண்ட ரோலர் கோஸ்ட்டரான இது இரட்டை தலைகீழ் மாற்றத்தையும் 164 அடி உயர வீழ்ச்சியையும் கொண்டுள்ளது.

புல் த்ரோட்டில், அமெரிக்கா

கலிபோர்னியாவில் உள்ள சிக்ஸ் ஃப்ளாக்ஸ் மேஜிக் மவுண்டனில் அமைந்துள்ள ஃபுல் த்ரோட்டில் 121 அடி உயரம் கொண்டதாகும். உலகின் மிக உயரமான செங்குத்து வளையத்தை கொண்டுள்ள இந்த ரோலர் கோஸ்டர் அதன் தனித்துவமான வடிவமைப்பிற்கு பெயர் பெற்றதாகும் இதில் ரைடர்களை லூப் வழியாக முன்னோக்கி செலுத்துவதற்கு முன்பு, பின்னோக்கி அனுப்பும் ஒரு ஏவுதளமும் உள்ளது. இது பயணம் செய்பவர்களுக்கு ஒரு சாகச அனுபவத்தை வழங்குகிறது.

roller coaster ride

தி ஸ்மைலர் யுகே

இங்கிலாந்தில் உள்ள ஆல்டன் டவர்ஸில் காணப்படும் தி ஸ்மைலர் வியக்கத்தக்க வகையில் 14 சுழல்களுடன் கூடிய ரோலர் கோஸ்டராகும். இது அதிக தலைகீழ் மாற்றங்கள் செய்ததற்கான சாதனைகளையும் படைத்துள்ளது. இதில் சவாரி செய்யும் போது எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சுழல்கள் இருப்பதால் இந்த ரைடில் செல்வோர் பயம் கலந்த திரில்லிங் அனுபவத்தை அனுபவிப்பர்.

ஸ்டீல் டிராகன் 2000, ஜப்பான்

ஜப்பானில் உள்ள நாகஷிமா ஸ்பா லேண்டில் அமைந்துள்ள ஸ்டீல் டிராகன் 2018 மீட்டர் நீளம் கொண்ட ஒரு ரோலர் கோஸ்ட்டராகும். 2000 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த ரோலர் கோஸ்டர் உலகின் மிக நீளமான ரோலர் கோஸ்டர் என்ற சாதனையை படைத்துள்ளது.

தி கிரிஃபோன், அமெரிக்கா

விர்ஜீனியாவின் புஷ் கார்டன்ஸ் வில்லியம்ஸ் பர்க்கில் அமைந்துள்ள கிரிஃபோன், 25 அடி உயரமுள்ள செங்குத்தான ரோலர் கோஸ்டர். இது சவாரி செய்பவர்களை வீழ்ச்சியின் விளிம்பிற்கு அழைத்துச் சென்று ஒரு கணம் நிறுத்தி, பின்னர் பயங்கரமான கோணத்தில் கீழ்நோக்கி விழுவதால் இது ஒரு சாகச பயணமாக அமைகிறது.

roller coaster ride

டகாபிஷா, ஜப்பான்

ஜப்பானில் உள்ள ஃபுஜி-கியூ ஹைலேண்டில் அமைந்துள்ள டகாபிஷா, உலகின் மிக செங்குத்தான சரிவுகளில் ஒன்றான 121 டிகிரியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சவாரி மெதுவான ஏற்றத்துடன் தொடங்குகிறது. இது மேலே உயரத்திற்கு சென்று பிறகு திடீரென கீழ்நோக்கி இறங்குவது ரைடில் செல்பவர்களுக்கு ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை தருகிறது.

More News

    Read more about: amusement children parks
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+