Search
  • Follow NativePlanet
Share
» »சிங்கப்பூரில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அட்டகாசமான 8 இடங்கள்

சிங்கப்பூரில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அட்டகாசமான 8 இடங்கள்

உலகில் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஆசிய நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். அதற்கு காரணம் இங்குள்ள சுத்தம், பிரமிக்க வைக்கும் தோட்டங்கள், சிலிர்ப்பூட்டும் சாகசங்கள் என ஏராளமாக உள்ளன. சிங்கப்பூரில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. கோவில்கள், ஷாப்பிங் செய்வதற்கு, இந்திய பொருட்களை வாங்கி மகிழ, இந்திய உணவுகளை ருசிக்க என பல இடங்கள் உள்ளன. இருந்தாலும் இந்த 8 இடங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டியவை. நீங்கள் சிங்கப்பூர் டூர் போனால் மறக்காமல் ஒரு முறை விசிட் செய்து விட்டு வாருங்கள்.

மெரினா பே சாண்ட்ஸ்

மெரினா பே சாண்ட்ஸில் ஒரு ஆடம்பர நகரமாகும். இங்குள்ள ஸ்கை பார்க் முடிவில்லா நீச்சல் குளம் மற்றும் பிரமிக்க வைக்கும் நகர காட்சிகள் மூலம் இது அதன் ஆடம்பரத்தை காட்டி சுற்றுலா பயணிகளை கவரும் ஒன்றாக உள்ளது.

கார்டன்ஸ் பை தி பே

சூப்பர் ட்ரீ குரோவ் மற்றும் கிளவுட் ஃபாரஸ்ட் ஆகியவற்றை கொண்ட கார்டன்ஸ் பை தி பே பார்வையார்களை மயக்கும் ஒரு இடமாக அமைந்துள்ளது.

செந்தோசா தீவு

யுனிவர்சல் ஸ்டூடியோக்கள் மற்றும் அழகான கடற்கரைகளை கொண்ட செந்தோசா தீவில் பல சிலிர்ப்பூட்டும் சாகசங்களை செய்து மகிழலாம். சிங்கப்பூரில் சுற்றுலா செல்ல வேண்டிய முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

மெர்லியன் பூங்கா

மெர்லியன் பூங்கா அழகிய கடற்கரைகளைக் கொண்ட அற்புதமான இடமாகும். இங்குள்ள பிரபலமான சின்னமான பாதி சிங்கம் பாதி மீன் சிலை உள்ளது இது பார்ப்போரை கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. அழகிய கடற்கரை காட்சிகளை படமெடுக்க ஒரு சிறந்த இடமாகும்.

சிங்கப்பூர் ஃப்ளையர்

ஒரு பெரிய கண்காணிப்பு சக்கரம் போல் அமைந்துள்ள சிங்கப்பூர் ஃப்ளையரில் வானலையில் பறந்து காட்சிகளை பார்ப்பதற்கும், உயரத்திலிருந்து நகரின் அழகை குதூகலத்துடன் கண்டு ரசிப்பதற்கும் அவ்வளவு ரம்மியமான இடமாகும்.

Singapore

சைனா டவுன்

இங்குள்ள பரபரப்பான சந்தைகள், பாரம்பரிய கோவில்கள் மற்றும் சுவையான தெரு உணவுகள் இங்கு மிகவும் பிரபலமானவை. சுற்றுலா செல்வோர் சிங்கப்பூரின் விதவிதமான உணவுகளை ருசிக்க இது ஒரு சிறந்த இடம் ஆகும்.

ஆர்ச்சர்ட் சாலை

ஆர்ச்சர்ட் சாலை ஷாப்பிங் செய்பவர்களின் சொர்க்கமாகும். இங்குள்ள ஆடம்பர பிராண்டுகள் மற்றும் மால்களில் பரபரப்பாக ஷாப்பிங் செய்வதற்கு ஏற்ற இடம் ஆகும்.

கிளார்க் கீ

உணவகங்கள், பார்கள் மற்றும் நதி பயணக் கப்பல்கள் கொண்ட ஒரு அழகான கடற்கரை பகுதி. இந்த பரபரப்பான கடற்கரை பகுதியில் அழகிய காட்சிகளை கப்பல்களில் பயணம் செய்தவாரே ரசிக்கலாம்.

சுற்றுலா தலங்களைப் போல் சிங்கப்பூரில் கட்டுப்பாடுகளும் அதிகம். அதனால் சிங்கப்பூருக்கு முதல் முறையாக செல்கிறீர்கள் என்றால் அங்கு செல்வதற்கு முன் அந்த நாட்டின் சட்ட திட்டங்கள், நடைமுறைகள், வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள் பற்றி ஓரளவிற்காவது தெரிந்து வைத்திருப்பது நல்லது.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+