Search
  • Follow NativePlanet
Share
» »பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் உலகின் மிக உயரமான 8 கட்டிடங்கள்

பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் உலகின் மிக உயரமான 8 கட்டிடங்கள்

பழங்கால கட்டிடக் கலைக்கு சான்றாக எத்தனையோ கோவில்கள், கோட்டைகள், அரண்மனைகள் உலகம் முழுவதும் இருப்பது போல், நவீன தொழில்நுட்பம் கலந்த கட்டிடக்கலைக்கு சான்றாகவும் உலகின் பல பகுதிகளில் பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. "அடேங்கப்பா...எவ்வளவு பெரிசு" என பார்ப்பவர்கள் வியக்கும் அளவிற்கு மிக உயரமாக உலகம் முழுவதிலும் கட்டப்பட்டுள்ள மிக உயரமான டாப் 8 கட்டிடங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Burj Khalifa

புர்ஜ் கலிஃபா

புர்ஜ் கலிஃபா, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கட்டிடமாகும். சுற்றுலாப் பயணிகள் 124, 125, 148வது மாடிகளில் இருந்து துபாய் நகரத்தின் அழகைப் பார்வையிடலாம்.அரேபிய கலாச்சாரம் மற்றும் நவீன கட்டிடக்கலையின் கலவையாக அமைந்துள்ள இந்த கட்டிடம், சுற்றுச்சூழல் மீதான தாக்கத்தை குறைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மெர்டேகா 118

மெர்டேகா 118 என்பது மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூரில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது மிக உயர்ந்த கட்டிடமாகும். இந்த வானளாவிய கட்டிடம் மலேசியாவின் வளர்ச்சியையும், அதன் நவீன கட்டிடக்கலையின் முன்னேற்றத்தையும் பிரதிபலிக்கிறது.

ஷாங்காய் டவர்

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் அமைந்துள்ள ஷாங்காய் டவர் உலகின் மூன்றாவது உயர்ந்த கட்டிடமாகும். உலகின் வேகமான எலிவேட்டர் (74 km/h வேகத்தில் செல்லும்) வசதி உள்ளது.புதுமையான கட்டிடக் கலை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய கட்டிடமாக இது பார்க்கப்படுகிறது.

அப்ராஜ் அல்-பைட் கடிகார கோபுரம்

அப்ராஜ் அல்-பைட் கடிகார கோபுரம் சவூதி அரேபியாவின் மக்கா நகரத்தில் அமைந்துள்ள உலகின் நான்காவது உயரமான கட்டிடமாகும். இது மஸ்ஜித் அல்-ஹராம் (புனித மசூதி) அருகே இருப்பதால் இஸ்லாமிய உலகில் மிக முக்கியமான கட்டிடங்களில் ஒன்றாகும். இது உலகின் மிகப்பெரிய ஓட்டல் வளாகங்களில் ஒன்றாகவும், சவூதி அரேபியாவின் முக்கியமான புகழ்பெற்ற கட்டிடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

பிங் அன் பைனான்ஸ் சென்டர்

பிங் அன் பைனான்ஸ் சென்டர் சீனாவின் ஷென்ழென் நகரத்தில் அமைந்துள்ள உலகின் ஐந்தாவது உயரமான கட்டிடமாகும். இது பிங் அன்ஃ இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் ஆகும். சிறப்பு வடிவமைப்பு மற்றும் பசுமை கட்டிட நுட்பம் கொண்டது. 33 உயர்மட்ட எலிவேட்டர்கள் மூலம் வேகமான போக்குவரத்து வசதி கொண்டது.

லோட்டே வேர்ல்ட் டவர்

லோட்டே வேர்ல்ட் டவர் தென் கொரியாவின் சியோல் நகரத்தில் அமைந்துள்ள உலகின் ஆறாவது உயரமான கட்டிடமாகும். இது தென் கொரியாவின் உயர்ந்த கட்டிடமாகவும், கொரியாவின் வரலாற்று மற்றும் நவீன நகர வடிவமைப்பின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டர்

ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டர்,அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள உலகின் ஏழாவது உயரமான கட்டிடமாகும். 2001 செப்டம்பர் 11 தாக்குதல்களில் அழிக்கப்பட்ட டுவின் டவர்ஸிற்குப் பதிலாக கட்டப்பட்ட முதன்மையான நினைவுச்சின்னம் ஆகும். அமெரிக்காவின் வணிக மற்றும் வரலாற்று அடையாளமாகவும்,உயர் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை கொண்ட சூழலியல் கட்டிட வடிவமைப்பு கொண்ட இடமாகவும் உள்ளது.

குவாங்சோ CTF பைனான்ஸ் சென்டர்

குவாங்சோ CTF பைனான்ஸ் சென்டர் சீனாவின் குவாங்சோ நகரத்தில் அமைந்துள்ள உலகின் எட்டாவது உயரமான கட்டிடமாகும். இது CTF டவர் என்றும் அழைக்கப்படுகிறது. இது உலகின் மிக வேகமான எலிவேட்டர்களில் ஒன்று.சீனாவின் வணிக வளர்ச்சிக்கும், நவீன நகரக்கட்டுமான வளர்ச்சிக்கும் ஒரு முக்கிய அடையாளமாக விளங்குகிறது.

More News

    Read more about: dubai america world tour
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+