Search
  • Follow NativePlanet
Share
» »தனியாக சுற்றுலா செல்லும் பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 8 சூப்பர் டிப்ஸ்

தனியாக சுற்றுலா செல்லும் பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 8 சூப்பர் டிப்ஸ்

பெண்கள் பலருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாமல், தனியாக சென்று ஜாலியாக ஊர் சுற்றுவது மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும். அப்படி பயணம் செய்வது அற்புதமான அனுபவமாக இருக்கும். ஆனால் அதே சமயம் பாதுகாப்பு ரொம்ப ரொம்ப முக்கியம் இல்லையா? ஜாலியாக பயணத்தில் உங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முக்கியமான 8 டிப்ஸ் நாங்க சொல்கிறோம். இது நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதோ அந்த 8 சூப்பர் டிப்ஸ்...

8 Solo travel tips for Women must know

பயண இடங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுதல்

உங்கள் பயணத்தை தொடங்குவதற்கு முன் நீங்கள் செல்லும் ஊரின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் மற்றும் நீங்கள் தங்கும் இடம், சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் ஆகியவை குறித்து தெரிந்து வைத்து கொள்வது மிக மிக அவசியம். உள்ளூர்வாசிகள் எவ்வாறு உடை அணிகிறார்கள், எப்படி தொடர்பு கொள்கிறார்கள் மற்றும் அன்றாட வாழ்க்கை எவ்வாறு வழி நடத்துகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு செல்வதால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

நன்கு ரிவியூ செய்யப்பட்ட இடத்தில் தங்கலாம்

இதற்கு முன் தனியாக சென்று சுற்றுலாப் பயணிகளிடம் கருத்து கேட்டு அவற்றில் நல்ல விமர்சனங்களை பெரும் ஹோட்டல்கள், நல்ல விடுதிகள் அல்லது வாடகைக்கு தங்குவதற்கு உள்ள இடங்களை தேர்வு செய்யலாம். முடிந்தால் கூடுதல் பாதுகாப்பிற்கு உயர்ந்த தளங்களில் உள்ள அறையை தேர்ந்தெடுக்கலாம். உங்கள் அறை எண்ணை யாருக்கும் பகிராமல் இருக்கலாம்.

8 Solo travel tips for Women must know

உங்கள் குடும்பத்தில் ஒருவருடன் இணைந்திருங்கள்

உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு நீங்கள் எங்கு இருக்கிறீர்கள், எங்கு செல்கிறீர்கள் என எல்லா நேரங்களிலும் தெரியப்படுத்துவது நல்ல யோசனையாக இருக்கும். google maps, whatsapp போன்றவற்றில் உங்கள் நேரடி இருப்பிடத்தை பகிரவும். அவசர கால தொடர்பு பட்டியலை ஆஃப்லைனில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதனால் உங்கள் தொலைபேசி ஆப் ஆகிவிட்டாலும் அல்லது திருடப்பட்டாலும் கூட முக்கியமான எண்கள் இல்லாமல் அவதியுற தேவை இல்லை.

நேர்த்தியான உடைகளை அணியலாம்

மிகவும் நேர்த்தியாக உடைகளை அணியலாம். இதனால் பழக்கமான இடத்திற்கு நீங்கள் வந்துள்ளீர்கள், உங்களுக்கு இந்த இடத்தை பற்றி நன்கு தெரியும் என்பது போல் நம்பிக்கையுடன் நடப்பது, உங்களுக்கு தெரியாவிட்டாலும் கூட நீங்கள் புதிதாக வந்த சுற்றுலா பயணி போல தோற்றம் அளிப்பதை தடுக்கும். மேலும் மோசடி செய்பவர்கள் அல்லது பிக்பாக்கெட்களிடமிருந்து தப்பிக்க இது ஒரு நல்ல வழியாகும். வெளியில் செல்லும் போது மொபைலை பார்த்துக் கொண்டிருக்காமல் இருப்பது கூடுதல் பாதுகாப்பை தரும்.

உங்கள் போக்குவரத்தை முன்கூட்டியே திட்டமிடுங்கள்

ஓலா, உபர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட டாக்ஸி சேவைகள் போன்ற நம்பகமான சவாரி பயன்பாடுகளை எப்பொழுதும் பயன்படுத்தலாம். பெரும்பாலும் இரவு நேர பயணத்தை தவிர்க்கலாம். நீங்கள் டாக்ஸி சேவைகள் போன்ற சவாரி பயன்பாட்டு வாகனத்தில் சென்றால் பின் இருக்கையில் அமர்ந்து கொள்ளலாம். உங்கள் பயண விவரங்களை உங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

புதிய நபர்களை சந்திக்கும் பொழுது கவனம்

பயணம் என்பது புதியவர்களை சந்திக்க ஒரு அற்புதமான வாய்ப்பு. ஆனால், உங்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள். உங்கள் உள்ளுணர்வை நம்ப வேண்டும். நீங்கள் செல்லும் இடங்களில் உள்ள சூழ்நிலைகள் அல்லது உங்கள் உணவை அல்லது நீங்கள் அருந்தும் பானத்தை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள். மேலும் அந்நியர்களுடன் தனிப்பட்ட விவரங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

8 Solo travel tips for Women must know

பாதுகாப்பு கருவிகளை எடுத்துச் செல்லுங்கள்

அவசர காலங்களில் சில பாதுகாப்பு சாதனங்களை எடுத்துச் செல்வது மிகவும் உதவியாக இருக்கும். தனிப்பட்ட அலாரம், விசில் அல்லது பெப்பர் ஸ்பிரே போன்றவற்றை எடுத்துச் செல்வது உங்களுக்கு பாதுகாப்பான ஒன்றாகும்.

பொருட்களை பாதுகாப்பாக வைத்திருங்கள்

உங்கள் பணம் மற்றும் கார்டுகள் அனைத்தையும் ஒரே இடத்தில் எடுத்துச் சொல்லாதீர்கள். அவற்றை உங்கள் பணப்பை, பைகள் மற்றும் மறைக்கப்பட்ட பைக்குள் இடையே பிரித்து வைக்க வேண்டும். உங்கள் தொலைபேசியை உங்கள் உடலில் பாதுகாப்பான இடத்தில் வைக்கலாம். கூடுதல் பாதுகாப்பிற்காக உங்கள் பாஸ்போர்ட் மற்றும் காப்புப் பணம் போன்ற முக்கிய ஆவணங்களை சேமிக்க ஹோட்டல் லாக்கர்களை பயன்படுத்தலாம்.

More News

    Read more about: women solo travel solo trip
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+