Search
  • Follow NativePlanet
Share
» »குழந்தைகளை வளர்க்க உலகின் 9 சிறந்த நாடுகள்...இதில் இந்தியா இருக்கா ?

குழந்தைகளை வளர்க்க உலகின் 9 சிறந்த நாடுகள்...இதில் இந்தியா இருக்கா ?

குழந்தைகளை வளர்ப்பது என்பது ஒரு மிகப்பெரிய பொறுப்பாகும். நல்ல கல்வி, சிறந்த ஆரோக்கிய சேவைகள், பாதுகாப்பான சூழல், வாழ்வதற்கான தரமான வசதிகள் போன்ற அம்சங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கியமானவை. உலகில் சில நாடுகள் குழந்தைகள் வளர்ச்சிக்கு மிகவும் உகந்த சூழலை வழங்குகின்றன. அது போன்ற சிறப்பான சூழலை வழங்கும், உலகில் குழந்தைகளை வளர்க்க சிறந்த 9 நாடுகளைப் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Norway

நார்வே

உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக நார்வே உள்ளது. குழந்தைகளின் நலனை முக்கியமாகக் கருதும் குடும்ப ஆதரவு திட்டங்கள், இலவச கல்வி, சிறந்த மருத்துவ வசதி மற்றும் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறை ஆகியவை இந்த நாட்டின் சிறப்பம்சமாகும். அழுத்தம் குறைவாக, குழந்தைகளின் படைப்பாற்றல் மற்றும் சுயமாக கற்றல் திறனை வளர்க்கும் கல்வி முறை உள்ளது. எனவே நார்வே குழந்தைகளை வளர்க்க உலகில் மிகவும் சிறந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

டென்மார்க்

டென்மார்க் என்பது உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. குழந்தைகளை வளர்க்க சிறந்த கல்வி முறை, சிறப்பான மருத்துவ வசதிகள், பாதுகாப்பான சமூக சூழல் ஆகிய அம்சங்களை வழங்குவதால், இது குழந்தைகள் வளர்ப்பதற்கு மிகச் சிறந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. அனைத்து குழந்தைகளுக்கும் இலவச சுகாதார சேவைகள் வழங்கப்படுகின்றன. குழந்தைகள் கல்வியில் மட்டுமல்லாது, சமூக மற்றும் கலாச்சார பண்பாட்டிலும் வளர்ச்சி அடைவார்கள்.

ஸ்வீடன்

ஸ்வீடன் என்பது குழந்தைகள் வளர்ப்பதற்கும், பெற்றோர்களுக்கும் சிறந்த வாழ்க்கை தரத்தை வழங்குவதற்கும் பிரபலமான நாடுகளில் ஒன்றாக உள்ளது. இலவச கல்வி, சிறந்த மருத்துவ சேவைகள், பெற்றோர்களுக்கு நீண்ட கால விடுப்பு, மற்றும் குழந்தைகள் நட்பான சமூக அமைப்பு ஆகியவை இந்த நாட்டை குழந்தைகள் வளர்க்க மிகவும் சிறந்த இடமாக மாற்றுகின்றன.மாணவர்களுக்கு தேர்வு அழுத்தம் குறைவாக, அதே சமயம் வாழ்க்கை திறன்களை வளர்க்கும் வகையில் கல்வி முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பின்லாந்து

பின்லாந்து (Finland), உலகளவில் குழந்தைகளை வளர்க்க சிறந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பாதுகாப்பான சூழல், தரமான கல்வி, சிறந்த மருத்துவம், மற்றும் குடும்பத்திற்கு மையமாக அமைந்த வாழ்க்கை முறை ஆகியவை இதை சிறப்பிக்கின்றன.குழந்தைகள் இயற்கையுடன் இணைந்து வளர சிறந்த இடமாகும்.பாதுகாப்பான விளையாட்டு மையங்கள், பூங்காக்கள், மற்றும் வெளி இடங்கள் அதிகம் உள்ளன. தந்தைக்கும், தாய்க்கும் சமமான குழந்தை பராமரிப்பு விடுப்பு கிடைக்கிறது. எனவே உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக பின்லாந்து உள்ளது.

Finland

கனடா

கனடா, குழந்தைகளை வளர்க்க உலகின் மிகச் சிறந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சிறந்த கல்வி, இலவச மருத்துவம், பாதுகாப்பான சூழல், மற்றும் குடும்ப நட்பு கொள்கைகள் ஆகியவை இந்நாட்டில் பின்பற்றப்படுகின்றன. அனைவருக்கும் இலவச மருத்துவம் மற்றும் குழந்தை பராமரிப்பு மற்றும் வளர்ச்சிக்காக அரசு நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன. குழந்தைகளுக்காக சிறப்பு மருத்துவ கண்காணிப்பு மற்றும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. வேலை மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு சிறந்த சமநிலை கொண்ட நாடுகளில் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து குழந்தைகளை வளர்க்க உலகின் மிகவும் பாதுகாப்பான மற்றும் உயர் தரமான நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சிறந்த கல்வி, உயர் தரமான மருத்துவம், குறைந்த குற்றச்சாட்டு மற்றும் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறையால் இது தனித்துவமாக விளங்குகிறது. உலகத் தரமான கல்வி முறையால் அரசு பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் சிறப்பாக செயல்படுகின்றன. குழந்தைகளுக்கு பல்மொழிக் கல்வி வாய்ப்புக்களான பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலிய மொழிகளை பள்ளியில் பயிலும் வாய்ப்பும் உள்ளது.

நெதர்லாந்து

நெதர்லாந்து குழந்தைகளை வளர்க்க உலகின் மிகச்சிறந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. குழந்தைகள் மகிழ்ச்சியாக வளர்கிற நாடுகளில் முதலிடத்தில் உள்ள நெதர்லாந்து, சிறந்த கல்வி, பாதுகாப்பான சூழல், மற்றும் குடும்ப சூழலால் தனித்துவமாக உள்ளது. மருத்துவ அறிவு, கலை, மற்றும் அறிவியல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.தூய்மையான சுற்றுச்சூழல் மற்றும் தரமான உணவு, குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உதவுகிறது.

Australia

ஆஸ்திரேலியா

உயர் தரமான கல்வி, சிறந்த மருத்துவ வசதி, பாதுகாப்பான சூழல், மற்றும் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறையால் இது பெற்றோர்களின் முதல் தேர்வாக மாறியுள்ளது. குழந்தைகளுக்கு அதிநவீன மருத்துவ வசதி மற்றும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.குழந்தைகள் தனியாக வெளியே சென்று விளையாடக்கூடிய பாதுகாப்பான சூழல் உள்ளது. ஆஸ்திரேலியா, குழந்தைகளை வளர்க்க உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

More News

Read more about: australia world tour
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+