Search
  • Follow NativePlanet
Share
» »புதுதில்லியில் ஒரு நாள் !!

புதுதில்லியில் ஒரு நாள் !!

டெல்லி, கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மகாபாரத காலத்தில் இருந்து இன்றுவரை காலஒட்டத்தின் நெடுகே அதிகாரத்தின் மையமாக இருந்து வரும் சிறப்புமிக்க நகரம். உலகமயமாக்கலுக்கு பிறகான நவீன யுகத்தில் தனது அடையாளங்களை இழந்துவிடாமல் அதே சமயம் புதுமைகளையும் உள்வாங்கிக்கொண்டு பாரத தேசத்தின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாக திகழும் இந்த நகரை ஒரு நாளில் சுற்றிப்பார்க்கலாம் வாருங்கள்.

லோதி கார்டனில் வாக்கிங் :

லோதி கார்டனில் வாக்கிங் :

'காதலர்களின் மெக்கா' என்று அழைக்கப்படும் லோதி கார்டன் பரபரப்பு நிறைந்த புதுதில்லி நகரின் மத்தியில் பாலைவன சோலையை போல அமைந்திருக்கிறது. 15ஆம் நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட ஆப்கானிஸ்தானை சேர்ந்த 'லோதி' வம்சத்தினர் கட்டிய பழமையான கட்டிடங்களை இந்த தோட்டத்தினுள் நாம் பார்க்க முடியும்.

Photo:Panoramas

லோதி கார்டனில் வாக்கிங் :

லோதி கார்டனில் வாக்கிங் :

90 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த தோட்டத்தினுள் பரா கும்பத் சமாதி, முஹம்மத் ஷாஹ் சமாதி, சிக்கந்தர் லோதி சமாதி மற்றும் மசூதிகள் போன்றவை அமைந்திருக்கின்றன. அதிகாலையில் இங்கே தில்லியின் அதிகார மையத்தில் கோலோச்சும் அரசியல் தலைவர்களையும், முன்னணி தொழிலதிபர்களையும் காணலாம்.

Photo:Santosh Namby Chandran

லோதி கார்டனில் வாக்கிங் :

லோதி கார்டனில் வாக்கிங் :

எனவே குளிர் நிறைந்த டெல்லியின் அதிகாலையை இந்த லோதி கார்டனில் செலவிடுங்கள். இந்த இடத்தை பற்றிய மேலதிக தகவல்களை தமிழின் நெ.1 பயண இணையதளமான தமிழ் நேடிவ் பிளானட்டில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Brady Montz

லோதி கார்டனில் வாக்கிங் :

லோதி கார்டனில் வாக்கிங் :

லோதி கார்டனில் இருக்கும் ஷீஷ் கும்பத் என்ற கட்டிடம்.

Photo:Rob Towell

லோதி கார்டனில் வாக்கிங் :

லோதி கார்டனில் வாக்கிங் :

பூங்காவினுள் இருக்கும் பழங்கால மசூதி.

Photo:Fred Inklaar

செங்கோட்டைக்கு சென்றிடுங்கள் :

செங்கோட்டைக்கு சென்றிடுங்கள் :

டெல்லியில் அமைந்திருக்கும் மிக முக்கியமான வரலாற்று சின்னம் எதுவென்றால் அது செங்கோட்டை தான். முகலாய பேரரசனான ஷாஹ் ஜகானால் கட்டப்பட்ட இந்த கோட்டையானது 1857ஆம் ஆண்டு வரை முகலாய அரசர்கள் வாழ்ந்த இடமாகும். முழுவதும் செம்மணல் கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த கோட்டையினுள் சிறிய அருங்காட்சியகம் ஒன்றும் செயல்படுகிறது.

Photo:Arian Zwegers

செங்கோட்டைக்கு சென்றிடுங்கள் :

செங்கோட்டைக்கு சென்றிடுங்கள் :

இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.15 வசூலிக்கப்படுகிறது. இங்கு தான் ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் பாரத பிரதமர் தேசிய கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் விதமாக தினமும் மாலை இங்கு ஒலி - ஒளி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

Photo:Amit Rawat

செங்கோட்டைக்கு சென்றிடுங்கள் :

செங்கோட்டைக்கு சென்றிடுங்கள் :

இதனுள்ளே மிக நேர்த்தியாக பராமரிக்கப்படும் தோட்டம் ஒன்றும் உள்ளது.

photo:Christopher John SSF

செங்கோட்டைக்கு சென்றிடுங்கள் :

செங்கோட்டைக்கு சென்றிடுங்கள் :

திங்கள்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த வரலாற்று பாரம்பரிய சின்னம் பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது. கோட்டைக்குள் சுற்றுலா வழிகாட்டிகள், சிறிய உணவகம், கழிவறைகள், சக்கரநாற்காலிகள் மற்றும் வாகன நிறுத்த வசதிகள் போன்றவை பயணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Photo:Franc Pallarès López

சாந்தினி சௌக்கில் சாப்பிடுங்கள் :

சாந்தினி சௌக்கில் சாப்பிடுங்கள் :

டெல்லியில் சுவையான சாலையோர உணவுகளை ருசிபார்க்க விரும்புகிறவர்கள் கண்டிப்பாக செல்லவேண்டிய ஓரிடம் சாந்தினி சௌக். 17ஆம் நூற்றாண்டில் முகலாய அரசர் ஷாஹ் ஜகானால் கட்டப்பட்ட சந்தை வளாகமான இங்கு இந்தியாவின் மிக பழமையான உணவகங்கள் பரம்பரை பரம்பரையாக நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Photo:Franc Pallarès López

சாந்தினி சௌக்கில் சாப்பிடுங்கள் :

சாந்தினி சௌக்கில் சாப்பிடுங்கள் :

இங்கே சுட சுட ஜிலேபி, ரசமலாய், பலூடா, பரோட்டா போன்ற உணவுகளை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தயாரிக்கும் கடைகள் இங்கே இருக்கின்றன. அவற்றுக்கு சென்று உங்கள் மதிய உணவை முடித்திடுங்கள்.

Photo:Abhishek Baxi

சாந்தினி சௌக்கில் சாப்பிடுங்கள் :

சாந்தினி சௌக்கில் சாப்பிடுங்கள் :

உணவுகள் தவிர துணி வகைகள், போர்வைகள், கையினால் செய்யப்பட்ட காலணிகள், வீட்டு அலங்கார பொருட்கள் போன்றவை வாங்கிடவும் சாந்தினி சௌக் சிறந்த இடமாகும்.

photo:Franc Pallarès López

சாந்தினி சௌக்கில் சாப்பிடுங்கள் :

சாந்தினி சௌக்கில் சாப்பிடுங்கள் :

பரபரப்பு மிகுந்த சாந்தினி சௌக் பகுதி.

Photo: Wikimedia

இந்தியா கேட்டில் வீர வணக்கம் :

இந்தியா கேட்டில் வீர வணக்கம் :

மும்பைக்கு எப்படி 'கேட் வே ஆப் இந்தியா' இருக்கிறதோ அதுபோல தில்லியின் 'ஐகானிக்' அடையாளங்களில் ஒன்று தான் 'இந்தியா கேட்' எனப்படும் போர் வீரர்கள் நினைவகம் ஆகும். முதலாம் உலகப்போரில் பிரிட்டிஷ் படைகளுக்காக போரிட்டு மடிந்த 82,000 வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டதே இந்த 'இந்தியா கேட்' ஆகும்.

Photo:Amit Rawat

இந்தியா கேட்டில் வீர வணக்கம் :

இந்தியா கேட்டில் வீர வணக்கம் :

ஒரு காலத்தில் இந்தியா கேட்டின் வழியாக வாகன போக்குவரத்து நடந்திருக்கிறது. அப்போது இந்த சாலை 'கிங்க்ஸ் வே' என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

Photo:nthy ramanujam

இந்தியா கேட்டில் வீர வணக்கம் :

இந்தியா கேட்டில் வீர வணக்கம் :

இன்று இங்கே கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவாக 'அமர் ஜவான் ஜோதி' என்ற நினைவகம் உள்ளது.

Photo:Bijoy Mohan

இந்தியா கேட்டில் வீர வணக்கம் :

இந்தியா கேட்டில் வீர வணக்கம் :

இதனை ஒட்டியே தான் பாரத பிரதமரின் அலுவலகமும், இந்திய ஜனாதிபதியின் அலுவலகமும் உள்ளது.

Photo:Roshan Travel Photography

டெல்லி சுற்றுலாத்தலங்கள்

டெல்லி சுற்றுலாத்தலங்கள்

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களை தவிரவும் குதுப் மினார், தாமரை கோயில், ஹுமாயுன் கல்லறை, ஜம்மா மசூதி போன்ற ஏராளமான இடங்கள் இருக்கின்றன. அவற்றைப்பற்றிய விரிவான விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Photo: Flickr

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+