Search
  • Follow NativePlanet
Share
» » சென்னையிலிருந்து வெறும் 2 மணி நேர தூரத்தில் உலகத்தர பார்ட்டி டவுன் – வெல்கம் 2023!

சென்னையிலிருந்து வெறும் 2 மணி நேர தூரத்தில் உலகத்தர பார்ட்டி டவுன் – வெல்கம் 2023!

புத்தாண்டு பிறக்க இன்னும் ஒரு சில தினங்களே இருக்கிறது! ஆனால் இன்னமும் நீங்கள் உங்களது புத்தாண்டு கொண்டாட்டங்களைப் பற்றிய ஐடியா எதுவும் இல்லாமல் திகைக்கிறீர்களா? வெளிநாடு செல்லவோ அல்லது வெகு தூரத்தில் இருக்கும் கோவா, பெங்களூர் செல்லவோ அதிக செலவாகும் என்ற அச்சமா? குறைந்த செலவில், குறைந்த பயண தூரத்தில் ஒரு இடம் இருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறதா? கவலை வேண்டாம், இந்த எல்லா கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது. சென்னையிலிருந்து வெறும் 2 மணி நேர பயண தூரத்தில் அமைந்து இருக்கும் புதுவையில் பிறக்கப் போகும் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றிடுங்கள்! மினி கோவா என்றழைக்கப்படும் புதுச்சேரியில் உங்களது புத்தாண்டை வரவேற்க பெஸ்ட் டிப்ஸ் மற்றும் ஐடியாஸ் இதோ!

புத்தாண்டை கோலாகலமாக வரவேற்கும் புதுவை

புத்தாண்டை கோலாகலமாக வரவேற்கும் புதுவை

கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதற்கு முன்னே புதுவை நகரம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிப்பட்டு மின்ன ஆரம்பிக்கிறது. இந்த விழாக்கோலம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மட்டுமே அல்ல, அடுத்த ஒரு வாரத்திலேயே வரவிருக்கும் புத்தாண்டை வரவேற்க தான்! புத்தாண்டு பிறப்பதற்கு குறைந்துது 1௦ நாட்களுக்கு முன்னரே, புது வருட கொண்டாட்டத்தின் அதிர்வுகள் புதுவையில் கால் பதித்து விடுகிறது. இந்த ஆண்டும் அது போலவே புதுவையில் ஏற்கனவே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பார்ட்டிகள், பப்கள், நியூ இயர் வாக், கோவில்கள், தேவாலயத்தில் நைட் மாஸ், கடற்கரைகளில் கொண்டாட்டம் என எல்லா வகையான கூட்டத்தினருக்கும் புதுவை ஏதோ ஒன்றை வழங்குகிறது. நீங்கள் இதில் எந்த வகையோ அப்படி உங்கள் கொண்டாட்டத்தை தேர்வு செய்யுங்கள்.

2023 ஆம் ஆண்டை வரவேற்க உற்சாகமான இரவு பார்ட்டிகள்

2023 ஆம் ஆண்டை வரவேற்க உற்சாகமான இரவு பார்ட்டிகள்

அர்ஜுனாடோ இசை விழா

அர்ஜுனாடோ மியூசிக் ஃபெஸ்டிவலில் சர்வதேச இசைக் கலைஞரான ஹன்னா ஷைன் DJ வாக பங்கு கொள்கிறார். ஆரிக்ஸ், சிரில், நியான் ஃபியூச்சர் மற்றும் DJ லியோ ஆகியோரும் உங்களை ஆட வைக்க போகிறார்கள். பாலிவுட் இசையோடு, சுவையான உணவுகளை உண்டு மகிழ்ந்து, வித விதமான பானங்களை பருகி புத்தாண்டை வரவேற்க இப்போதே டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்.

நடைபெறும் இடம்: அசோகா பீச் ரிசார்ட்

தேதி மற்றும் நேரம்: 31 டிசம்பர் 2௦22, இரவு 7 மணி முதல்

நுழைவுக்கட்டணம்: ரூ. 1999 முதல்

தி பாரடைஸ் ஐலண்ட் (கடலின் நடுவில்) புத்தாண்டு விருந்து

இந்தியாவின் நம்பர் 1 பெண் DJ வான தீபிகா மற்றும் அவரது தோழர் DJ நவாஸ் ஆகியோரின் இசை மழையில் நனைய இந்த விருந்தில் கலந்துக் கொள்ளுங்கள். கடற்கரை தீவில் நடைபெறும் இந்த விருந்து "நியான் நிற தீம்" கொண்டு நடைபெறுகிறது. கப்பலில் பயணம் செய்த அனுபவம், அன்லிமிடெட் ஸ்டார்டர்கள் மற்றும் பானங்கள், நடனம், வான வேடிக்கைகள், தங்க நாணய மழை ஆகியவை இடம் பெறும்.

நடைபெறும் இடம்: பாரடைஸ் பீச்

தேதி மற்றும் நேரம்: 31 டிசம்பர் 2௦22, மாலை 5.3௦ மணி முதல்

நுழைவுக்கட்டணம்: ரூ. 1799 முதல்

பே வாட்ச் 2 கே 23 - ஏ நியூ இயர் பார்ட்டி பை தி பே

அமெரிக்காவின் நியூயார்க் நகர அனுபவத்தை எங்களால் உங்களுக்கு வழங்க முடியும் என்று இவர்கள் கூருகிறார்கள். சர்வதேச இசையையும் சிறந்த நாட்டுப்புற ராக் இசையையும் சேர்ந்து ரசிக்க இங்கே வாருங்கள். இந்த பார்ட்டி ஆடம்பரமான உணவு மற்றும் முடிவில்லா பானங்களின் கலவையாகும்.

நடைபெறும் இடம்: பாண்டி மெரினா

தேதி மற்றும் நேரம்: 31 டிசம்பர் 2௦22, மாலை 7 மணி முதல்

நுழைவுக்கட்டணம்: ரூ. 236௦ முதல்

மேற்கூறப்பட்ட இந்த 3 இடங்களும் 2023 ஆம் ஆண்டை வரவேற்க பிரத்யேகமகா பெரிய அளவில் தயார்படுத்தப்பட்டுள்ளன.

உலகத்தர பப்களில் புத்தாண்டு கொண்டாட்டம்

உலகத்தர பப்களில் புத்தாண்டு கொண்டாட்டம்

புதுவையில் இரவு கலாச்சாரம் என்பது மேற்கத்திய நாடுகளைப் போல மெருகேறிக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு வார இறுதியும் இங்கு துடிப்பான பார்ட்டிகள் நடைபெறுகின்றன. ஏறக்குறைய புதுவையின் எல்லா முக்கிய வீதிகளிலும் நாம் ஒரு பப்பை கண்டுபிடித்துவிடலாம். வார இறுதிகளிலே பார்ட்டி என்றால், புத்தாண்டு அன்று சொல்லவா வேண்டும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள புதுவையின் பிரபலமான பப்பில் கலந்துக் கொண்டு புத்தாண்டை கொண்டாடி வரவேற்றிடுங்கள்!o அதிதி டிஜிஐ கிராண்டு

o அரோமா கார்டன்ஸ் ஆரோவில்

o சீகல்ஸ் பீச் ரிசார்ட்

o உமாமி கிட்சன்

o ஹாப்பர்ஸ் பார் & கிட்சன்

o கோசி பப்

o கிராஸ்கீஸ் ரெஸ்டோ பப்

o பப் ஸிப்பர்

o டார்வின் ரெஸ்டோ பப்

o பிஃளேமிங் டிராகன்ஸ் லான்ஞ்

o பைக் & பேரல்

o சித்ரா'ஸ் குசின்

o LB2 லான்ஞ் & ஐஸ்க்யுப்ஸ் பப்

o FLOAT கேஸ்ட்ரோ பப்

o ஆசியன் ஹவுஸ்

ப்ரோமினெட் பீச் கொண்டாட்டம்

ப்ரோமினெட் பீச் கொண்டாட்டம்

மேற்கூறிய அனைத்து இடங்களுக்கும் நாம் கட்டாயம் செலவு செய்ய வேண்டும். ஆனால் இந்த இடத்திற்கு செல்ல உங்களுக்கு எந்த கட்டணமும் தேவையில்லை. ஏனென்றால் இது முற்றிலும் இலவசம். புதுவை சுற்றுலாத் துறையால் ப்ரோமிநெட் கடற்கரையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது. புதுவையின் பாதி இளசுகள் கூட்டம் இந்த இடத்தில் தான் வட்டமடிக்குமாம்! இங்கு உற்சாகமான இசை இசைக்கப்படுகிறது, நீங்கள் நடனமாடலாம். புத்தாண்டு பிறக்கும் போது வெடிக்கும் வான வேடிக்கைகளை பார்த்து மகிழலாம். முகம் தெரியாத நண்பர்களுடன் புத்தாண்டு வாழ்த்து சொல்லி சந்தோஷத்தை பரிமாறலாம்.

உங்களுடைய புத்தாண்டை நீங்கள் எப்படி வரவேற்கலாம் என்று திட்டமிட்டுள்ளீர்கள் மக்களே!

More News

Read more about: new year pondicherry
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+