Search
  • Follow NativePlanet
Share
» »காஷ்மீரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை கற்பனை செய்துள்ளீர்களா?

காஷ்மீரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை கற்பனை செய்துள்ளீர்களா?

காஷ்மீரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை கற்பனை செய்துள்ளீர்களா?

இந்தியாவில் மிகவும் குளிரான பகுதி காஷ்மீர் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். அப்படி ஒரு இடத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடினால் அந்த அனுபவம் நிச்சயமாக வேற லெவல் அல்லவா. வாருங்கள் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு காஷ்மீர் பயணத்து ஆயத்தமாவோம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

காஷ்மீரில் கிறிஸ்துமஸ்

காஷ்மீருக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் நீங்கள் வசதியின்மையாகவும் நெருக்கடியாகவும் உணர வாய்ப்பிருக்கிறது. ஆனால் கிறிஸ்துமஸ் நேரத்தில் நீங்கள் சுற்றுலா சென்றால் உங்களுக்கு நன்மைகள் சில இருக்கின்றன.

காஷ்மீர் பயணத்தான் லாபம்

அதிக மக்கள் தங்கள் இல்லங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதையே விரும்புவார்கள். இதனால் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வரப்போவதில்லை. இதன் காரணமாக உங்களுக்கான நெருக்கடி குறையும். உங்கள் தனிமை இனிமையாக அமையும்.

காஷ்மீரில் என்னவெல்லாம் செய்யலாம்



காஷ்மீர் பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டு, ஹெலிகாப்டர் பயணம், டிரெக்கிங் எனப்படும் மலையேற்றம், படகுப் பயணம், வாட்டர் ராப்ஃடிங் எனப்படும் நீர்ச்சறுக்கு, பாராகிளைடிங் மற்றும் கோல்ஃப் உட்பட பல விளையாட்டுகள் இருக்கின்றன.

பனிச்சறுக்கு விளையாட்டுக்கு பெயர்பெற்ற குல்மார்க்

காஷ்மீரில் பனிச்சறுக்கு விளையாட்டு குல்மார்க் பகுதியில் மிகவும் பிரபலம். இங்கு 1927-ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்ட பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்று உள்ளது. இந்த ரிசார்டை அடைய 400 மீட்டர் உயரத்தில் கேபிள் காரில் நீங்கள் பயணம் செய்ய வேண்டும். இப்படியாக ஒரு சிறிய சாகசப் பயணம் உங்களை ரிசார்ட்டின் உச்சிக்கு கொண்டு சேர்த்துவிடும்.

ஹெலி-ஸ்கையிங்

குல்மார்க் பகுதியில் பனிச்சறுக்கு சீசன் டிசம்பரில் தொடங்கி ஏப்ரல் பாதியில் முடிவடையும். இச்சமயங்களில் குல்மார்க்கில் பனிச்சறுக்கு வீரர்களுக்காக 'ஹெலி-ஸ்கையிங்'-யையும் ரிசார்ட் ஏற்பாடு செய்துகொடுக்கிறது. இந்த ரிசார்ட்தான் ஆசியாவிலுள்ள ஒரே ஹெலி-ஸ்கையிங் ரிசார்ட்.

கனடாவுக்கு அடுத்த இடம்

உலகிலேயே கேனடாவுக்கு பிறகு ஹெலி-ஸ்கையிங் செய்வதற்கு காஷ்மீர்தான் சிறந்த இடமாக கருதப்படுகிறது. அதாவது ஹெலி-ஸ்கையிங் என்பது கேபிள் கார் இன்றி ஹெலிகாப்டர் மூலம் நீங்கள் பனிமூடிய சிகரத்தின் உச்சியை அடைந்து பின்னர் அங்கிருந்து கீழே பனிச்சறுக்கு செய்து வரவேண்டும். அதோடு உங்களை பின்தொடர்ந்து ஹெலிகாப்டரும் வரும்.

அமர்நாத் செல்லும் அழகிய பாதை


காஷ்மீர் பகுதியில் காணப்படும் டிரெக்கிங் பாதைகளிலேயே அமர்நாத் ஆலயத்துக்கு செல்லும் வழிதான் மிகவும் புகழ்பெற்ற மற்றும் சிலிர்ப்பூட்டும் டிரெக்கிங் பாதையாகும். அதோடு குல்மார்க்கிலிருந்து தொசாமைதான் டிரெக்கிங் பாதையை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது.

டிரெக்கிங் செல்லும் அனுபவம்

சோனாமார்க்கில் தொடங்கி பல மலைகளையும், ஏரிகளையும் கடந்து விஷான்சர், கிஷான்சர், காட்சர், சாத்சர், கங்காபல் வழியாக டிரெக்கிங் செல்லும் அனுபவம் அட்டகாசமானது.

திகிலூட்டும் உயரப் பயணம்

ஷான்ஸ்கர் மலைத்தொடர் உறையவைக்கும் வெப்ப நிலைக்காகவும், திகிலூட்டும் உயரத்துக்காகவும் புகழ்பெற்ற டிரெக்கிங் பாதையாக அறியப்படுகிறது. இவ்வழியே செல்லும்போது ச்சா ச்சா லா பாஸ் மற்றும் தொன்மை வாய்ந்த கர்ஷா கொம்பா கோயில் ஆகியவற்றை கடந்த செல்வது அற்புத அனுபவமாக இருக்கும்.

ஷிக்காரா

காஷ்மீரின் சிலிர்ப்பூட்டும் சாகசங்களில் ஷிக்காரா படகுப்பயணத்துக்கு எப்போதும் தனி இடமுண்டு. ஷிக்காரா படகுப்பயணத்தில் தால் ஏரியின் சொக்கவைக்கும் இயற்கையழகையும், நகின் ஏரியின் மயக்கும் பேரழகையும் ஒரு சேர கண்டு களிக்கலாம்.

திரும்பி போகமாட்டேனென்று அழக்கூடாது

சாதாரணமாக ஒரு சில நாட்களை ஷிக்காராவில் செலவிடுவதே மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். அதோடு இந்த படகுப்பயணத்திலும் ஈடுபட்டால் அந்த இடத்தைவிட்டு வர நீங்கள் அடம்பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

ஆற்றில் கயாக்கிங்


பனிமூடிய சிகரங்கள், ஏரிகள் எல்லாம் சூழ வாட்டர் ராஃப்டிங் செய்வது என்பது சாகசத்தின் உச்சம் என்று சொல்லலாம். காஷ்மீரில் ஷான்ஸ்கர், பீஸ், சிந்து நதிகளில் வாட்டர் ராஃப்டிங்கில் ஈடுபடுவதே சிறப்பானதாக கருதப்படுகிறது. அதோடு செனாப் ஆற்றில் கயாக்கிங் செய்வது மிகவும் பிரபலம். அதேவேளையில் தால் ஏரியில் கயாக்கிங் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

பாராகிளைடிங் விளையாட்டு

காஷ்மீரில் சோனாமார்க், குல்மார்க், பதர்வாஹ் பகுதிகளில் பாராகிளைடிங் விளையாட்டு பிரபலமாக உள்ளது. இதற்கான சிறந்த சீசனாக மே முதல் ஜூன் வரையிலும், செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலுமான காலங்கள் கருதப்படுகின்றன. மேலும் பாராகிளைடிங் தற்போதுதான் காஷ்மீர் பகுதியில் பிரபலமடைந்து வருகிறது.

கோல்ஃப்

ஸ்ரீநகர் மற்றும் குல்மார்க் பகுதிகளில் காணப்படும் பசுமையான கோல்ஃப் மைதானங்களில் குறைந்த வெப்பநிலை காரணமாக சமவெளிகளில் விளையாடுவதை விட நீங்கள் நீண்ட நேரம் கோல்ஃப் விளையாட முடியும். காஷ்மீர் பகுதியில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலங்கள் கோல்ஃப் விளையாட சிறந்த காலங்களாக கருதப்படுகின்றன.

அழகிய காஷ்மீர் சுற்றுலா


காஷ்மீரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய காஷ்மீர் சுற்றுலா


காஷ்மீரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய காஷ்மீர் சுற்றுலா


காஷ்மீரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய காஷ்மீர் சுற்றுலா


காஷ்மீரின் அழகிய புகைப்படங்கள்

அழகிய காஷ்மீர் சுற்றுலா


காஷ்மீரின் அழகிய புகைப்படங்கள்

More News

    Read more about: travel kashmir
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+