Search
  • Follow NativePlanet
Share
» »விமானத்தில் நடு இருக்கையை புக் செய்தால் பல பரிசுகளை வெல்லலாம்!

விமானத்தில் நடு இருக்கையை புக் செய்தால் பல பரிசுகளை வெல்லலாம்!

விமானத்தில் அடிக்கடி பயணம் மேற்கொள்ளுபவரா நீங்கள்? அப்படியென்றால் விமான பயணத்தில் மிகவும் எரிச்சலூட்டும் விஷயம் நடு இருக்கை என்பது நீங்கள் நன்றாகவே உணர்ந்து இருப்பீர்கள். அனைவராலும் ஒதுக்கப்படும் நடு இருக்கையை நீங்கள் தேர்ந்தெடுத்தால் பல அற்புதமான பரிசுகளைப் பெறும் வாய்ப்பை பெறுவீர்கள்! ஆம், விர்ஜின் ஆஸ்திரேலியா விமானத்தில் நடு இருக்கையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு சுவாரஸ்யமான பரிசுகளை வழங்க முன்வந்துள்ளது.

பயணிகள் விரும்பாத நடு இருக்கை

பயணிகள் விரும்பாத நடு இருக்கை

விமானத்தில் நடு இருக்கைகள் கிடைக்கும் பயணிகள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகி இருப்பதோடு, ஆர்ம்ரெஸ்ட்டுக்காக முழங்கை சண்டையில் ஈடுபடுவதையும் அறிவார்கள். ஜன்னல் காட்சியை ரசிக்க முடியாத ஏமாற்றம், அல்லது கழிவறையை எளிதாக அணுக முடியாததால், நடு இருக்கையை விமானத்தில் தேர்வு செய்ய விரும்பாத இடமாக மாற்றுகிறது. நீங்கள் எகனாமி கிளாஸில் பயணிக்கிறீர்கள் என்றால் பயணிகளுக்கு மிகவும் பிடிக்காத இடமாக நடு இருக்கை ஒரு திகிலான இடமாக மாறிவிட்டது.

விர்ஜின் ஆஸ்திரேலியா அறிவித்த அதிரடி சலுகை

விர்ஜின் ஆஸ்திரேலியா அறிவித்த அதிரடி சலுகை

இதன் காரணமாக, நடு இருக்கைகளை பயணிகளே விருப்பபட்டு தேர்வு செய்வதை தூண்டும் வகையில் விர்ஜின் ஆஸ்திரேலியா மிடில் சீட் லாட்டரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லாட்டரி ஏப்ரல் 23, 2023 வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஏப்ரல் 23, 2023 எப்போது விர்ஜின் ஆஸ்திரேலியாவில் பறந்தாலும் ஏர்லைன் ஆப்ஸைத் திறந்து, மிடில் சீட் லாட்டரிக்குள் நுழைந்து விவரங்களை உள்ளிடவும். உங்கள் விமானம் புறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் நீங்கள் நுழைய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

எக்கச்சக்கமான பரிசுகளை வெல்ல ஒரு வாய்ப்பு

எக்கச்சக்கமான பரிசுகளை வெல்ல ஒரு வாய்ப்பு

230,000 AUD அதாவது இந்திய ரூபாய் கணக்குப்படி ரூ. 1,21,30,730 மதிப்பிலான பல்வேறு பரிசுகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஒரு மில்லியன் புள்ளிகளோடு பிளாட்டினம் ஃபிளையர் ஸ்டேட்டஸ், கரீபியனில் பயணம்,, பிரீமியம் எகானமியில் அமெரிக்காவிற்கு பயணம், ஏஎஃப்எல் குழுவின் அவே கேம்களுக்கான டிக்கெட்டுகள், ஹெலிகாப்டர் பப் க்ரால் மற்றும் பல்வேறு ஊர்களுக்கான விமான டிக்கெட்டுகள் என பல அற்புத பரிசுகளை பயணிகள் வெல்லலாம்.

அதிக பயணிகளையும் முன்பதிவுகளையும் கொண்டு வருவதற்கான இந்த அற்புதமான புதுமையான யோசனையை வகுத்த விமான நிறுவனத்தை நாம் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்களும், அதிக பயணிகளை கொண்டு வர இதுபோன்ற சேவைகளையும் சலுகைகளையும் கொண்டு வந்தால் நன்றாக இருக்குமல்லவா?

More News

    Read more about: airlines india australia
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+