தினமும் ஒரு புதிய இடத்தை காணப் போகிறோம் என்ற எண்ணத்துடன் நாம் கண் விழித்தால் எப்படி இருக்கும்? படிக்கும்போதே நம்முள் உற்சாகம் எழுகிறது அல்லவா! இந்தியப் கடல்களின் அழகை அதன் மேல் மிதந்துக்கொண்டே கண்டு களிக்கலாம். சென்னை, கோவா, அந்தமான், கொச்சி, மும்பை, கணபதிபுலே, டையூ மற்றும் பல அருமையான கடலோர இடங்களில் இந்த கப்பல் நிறுத்தப்பட்டு சுற்றி காமிக்கப்படும். உல்லாசப் பயணத்தின் ஒவ்வொரு பகுதியும் உங்களை சர்வதேச தரத்தில் ஆச்சரியப்படுத்தும் என்று பலர் உறுதியாக கூறுகின்றனர்.
களிப்பூட்டும் கார்டெலியா கப்பல் பயணங்கள் இரண்டு முதல் எட்டு நாட்கள் வரையிலான பேக்கேஜ்களை உள்ளடக்கியது. மும்பை - டையூ மும்பை, கோவா மும்பை கோவா, சென்னை கொழும்பு, மும்பை - கோவா மற்றும் கொழும்பு காலி திருகோணமலை சென்னை உள்ளிட்ட பிரபலமான வழிகளை உள்ளடக்கியது. மேலும் அதனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் இதோ உங்களுக்காக!
பொழுதுபோக்கு:

சர்வதேசத் தரம் வாய்ந்த இந்த கப்பலில் ஏராளமான பொழுபோக்கு அம்சங்கள் உள்ளன. பாலிவுட் மியூசிக்கல் காமெடி நிகழ்ச்சியான பாலே பாலே ஷோ, பிரபல பாலிவுட் ரெட்ரோ டிராக்குகளில் கலைஞர்கள் நிகழ்த்தும் 'ரொமான்ஸ் இன் பாலிவுட்' நிகழ்ச்சி, வெளிநாட்டு கலைஞர்களுடன் பெப்பியான பாடல்களுக்கு நடனமாடுவது என ரகளையாக பொழுதை கழிக்கலாம். லைவ் மியூசிக், மேஜிக் ஷோக்கள், திரைப்படங்கள் போன்றவற்றும் இங்கு உண்டு. எல்லாவற்றுக்கும் மேல் இங்கு கேசினோவும் உண்டு. குழந்தைகளுக்கு என வெவ்வேறு வகையான விளையாட்டுகளும் இங்கு உள்ளது. குழந்தைகள் மட்டுமல்ல, எல்லா வயதினருக்குமான விளையாட்டுகளும் இங்கு உண்டு.
கப்பலில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் நிகழ்ச்சிகளும் இலவசம் அல்ல. ராக் வால் கிளைம்பிங், நட்சத்திரம் பார்த்தல், பர்லெஸ்க், ஆர்ட்ஸ் ஸ்பேல்ஷ், மார்டினி பேச்சு மற்றும் சுவைத்தல், ஃபேப்-லேப் ஷோ ட்விலைட், கேமிங் ஆர்கேட், ஜென்டில்மென்ஸ் கிளப் மற்றும் ஜாக்பாட் தம்போலா ஆகியவற்றிற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
வகைவகையான உணவுகள்:

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் இந்த கப்பலுக்கு வருகை தருவதால், அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் நாக்கில் நடனமாடும் வகையிலும் இந்த கப்பலின் செஃப்கள் பலதரப்பட்ட சுவையான உணவு வகைகளை தயாரித்துக் கொடுக்கின்றனர். மேலும் இங்கு இந்திய உணவு வகைகள் மட்டுமில்லாமல், சீன, கொரியா, ஜப்பான், ஃபிரெஞ்ச் வகை உணவுகளும் இங்கு கிடைக்கிறது. மேலும் இங்கு வகை வகையான பானங்களும் கிடைக்கும்.
கட்டணங்கள்:

சென்னையில் இருந்து வார இறுதியில் 2 நாட்கள் பயணமானது இயக்கப்படுகிறது. இது முற்றிலும் கடலை சார்ந்த பயணமாகும். வார நாட்களில் 5 நாட்கள் பயணமாக விசாகப்பட்டினம் வரை சென்று வருகிறது. விசாகப்பட்டினத்திலிருந்து 3 நாட்கள் பயணமாக சென்னை வரை இக்கப்பல் வந்து செல்கிறது. 2 பேர் கொண்ட ஒரு ஜோடி 2 இரவு தங்குவதற்கு இன்டெரியர் - ரூ 36,000, ஓஷன் வியூ - ரூ 46,000, மினி சூட் - ரூ 70,500, சூட் - ரூ1,35,000 மற்றும் சேர்மன் சூட் - ரூ 2,30,000 ஆகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications



