• Follow NativePlanet
Share
» »சாகச பிரியர்களே...இந்தியாவில் டிரெங்கிங் செல்ல ஏற்ற இடங்கள் இவைகள் தான்...குறிச்சு வச்சுகோங்க

சாகச பிரியர்களே...இந்தியாவில் டிரெங்கிங் செல்ல ஏற்ற இடங்கள் இவைகள் தான்...குறிச்சு வச்சுகோங்க

ஊர் சுற்ற, வித்தியாசமான பகுதிகளுக்கு, வெளிநாடுகளுக்கு செல்ல விருப்பம் உள்ளவர்களை போல் டிரெக்கிங் எனப்படும் மலையேற்றத்திற்கு ஆர்வம் கொண்டவர்களும் அதிகம் உள்ளனர். அதிலும் சவாலான காட்டுப்பாதை, மலைப்பாதையில் டிரெக்கிங் செல்வது என்றால் சாகச பிரியர்களுக்கு கொள்ளை பிரியம். அப்படிப்பட்டவர்கள் இந்தியாவில் அவசியம் செல்ல வேண்டிய இடங்களை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

Amazing trekking spots in India for adventure lovers

கேதாரகந்தா, உத்தரகாண்ட்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதாரகந்தா ஒரு அருமையான மலையேற்ற தலமாகும். மலையேற்றத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கும் சரி, மலையேற்றம் ஏறுவதில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களும் சரி, செல்வதற்கு இது சரியான இடமாகும். பிப்ரவரி மாதம் இங்கு பனி படர்ந்து ரம்மியமாக காணப்படும். அப்போது இங்கு மலையேற்றம் மேற்கொள்வது திரில்லாகவும், ஜாலியாகவும் இருக்கும்.

தயாரா புகயால், உத்தரகாண்ட்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் தயாரா புகயால் பிப்ரவரி மாதத்தில் பார்க்கவே அத்தனை அற்புதமாக இருக்கும். குடும்பத்தோடு இங்கு பிப்ரவரி மாத சமயத்தில் டிரெக்கிங் மேற்கொள்ளலாம். பந்த்ரா பூன்ச், திரவுபதி கா தன்டா ஆகிய மலைப் பகுதிகளைப் பார்த்தபடி அற்புதமான மலையேற்ற அனுபவத்தை நாம் பெற முடியும்.

Amazing trekking spots in India for adventure lovers

பிரம்மதால் டிரெக், உத்தரகாண்ட்

பிரம்மதால் டிரெக் பகுதியில் பிப்ரவரி மாதத்தில் டிரெக்கிங் மேற்கொள்வது சிறப்பானது. ஏரி உறைந்த நிலையில் அப்போது காணப்படும். திரிசூல மலையும், நந்தா சுன்டி மலையும் பார்க்கவே பிரமிப்பைக் கொடுக்கும். பனி படர்ந்த மலைப் பகுதியில் இந்த சமயத்தில் மலையேறுவது அருமையான அனுபவத்தைத் தரும்.

தியோரிடால் - சந்திரஷீலா டிரெக், உத்தரகாண்ட்

இது அட்வென்ச்சரும், ஆன்மீகமும் இணைந்த மலையேற்றம். கேதார்நாத் மலையும், செளகாம்பா மலையும் பார்க்கவே அதி அற்புதமான அனுபவத்தைத் தரும். அமைதியான நீர் நிரம்பிய தியோரிடால் ஏரி மனதுக்கு அமைதியைக் கொடுக்கும். அற்புதமான அனுபவம் இந்த மலையேற்றத்தில் கிடைக்கும்.

Amazing trekking spots in India for adventure lovers

சந்தக்பு - பலாத், மேற்கு வங்காளம்

சந்தக்பு பலாத் பகுதியானது எவரெஸ்ட் சிகரம், கஞ்சன்ஜங்கா, மகாலு ஆகிய மலைச் சிகரங்களை பார்க்க சரியான இடமாகும். பிப்ரவரி மாதம் இந்தப் பகுதியில் மலையேற்றம் செய்வது சிறப்பான அனுபவமாக இருக்கும். கிழக்கு இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது இந்தப் பகுதி.

குவாரி பாஸ், உத்தரகாண்ட்

இமயமலையின் பனி படர்ந்த சிகரங்களைத் தரிசிக்கும் அற்புதமான பகுதி தான் இந்த குவாரி பாஸ். பிப்ரவரி மாதம் இங்கு பனி படர்ந்த இந்தப் பகுதியில் மலையேற்றம் செய்வது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். ஓக் மரக் காடுகள், அருமையான கிராமங்கள் இந்தப் பகுதியில் உள்ளன. நல்ல அனுபவத்தைத் தரும் டிரெக்கிங்காக இது இருக்கும்.

சட்டிஸ்கர் காடு மலையேற்றம்

சட்டிஸ்கரின் வனப்பகுதியில் டிரெக்கிங் செல்வதே ஒரு திரில்லான அனுபவம் தான். அடர்ந்த காட்டுப் பகுதியில் மிதமான சீதோஷ்ணம் நிலவும் பிப்ரவரி மாதம் டிரெக்கிங் செல்வது சாகச பிரியர்களை நிச்சயம் குஷிப்படுத்தி விடும். இப்பகுதியின் பழங்குடியினர் கலாச்சாரம் உள்ளிட்டவற்றை அறியவும் வாய்ப்பு கிடைக்கும்.

மனாலி கைஷ்தார் மலை

ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மனாலி கைஷ்தார் மலைப் பகுதியில் மலையேற்றம் செல்வது ஜில் அனுபவம் தரும். ஆம் பனி மலையான இதில் மலையேற்றம் செய்வதை யாராலும் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது. அடர்ந்த காடுகள், பனிப் பிரதேசம் என டிரெக்கிங் பாதையே பிரமிப்பைத் தரும். சுற்றிலும் பனியும், காடும், அமைதியும் மட்டுமே. இயற்கையின் அற்புதம் இது.

More News

    Read more about: trek
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+