Search
  • Follow NativePlanet
Share
» »புதுமைகள் கொட்டிக்கிடக்கும் இன்னோவேடிவ் ஃபிலிம் சிட்டி!!!

புதுமைகள் கொட்டிக்கிடக்கும் இன்னோவேடிவ் ஃபிலிம் சிட்டி!!!

By Super Admin

இன்னோவேடிவ் ஃபிலிம் சிட்டி என்ற பெயருக்கேற்றபடி இந்தியாவில் உள்ள தீம் பார்க்குகளில் பல புதுமையான மற்றும் நூதனமான அம்சங்களுடன் இது காணப்படுகிறது.

பெங்களூர்-மைசூர் மாநில நெடுஞ்சாலை SH 17-ல், வொண்டர் லா அமைந்திருக்கும் இடத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் இன்னோவேடிவ் ஃபிலிம் சிட்டி அமைந்துள்ளது.

இன்னோவேடிவ் ஸ்டுடியோ, ரிப்ளேயின் நம்பினால் நம்புங்கள் மியூசியம், 4D தியேட்டர், குழந்தைகள் குகை, லூயி டஸ்ஸாட் மெழுகு மியூசியம், தீம் ரெஸ்டாரண்டுகள் போன்ற எண்ணற்ற புதுமையான பொழுதுபோக்கு அம்சங்கள் இன்னோவேடிவ் ஃபிலிம் சிட்டியில் குவிந்து கிடக்கின்றன.

அவற்றில் வான்னடோ சிட்டி எனும் குழந்தைகளுக்கான தீம் விளையாட்டு மிகவும் புதுமையான ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு குழந்தைகள் நிஜமான சூழலில் அவர்கள் விரும்பும் கதாபாத்திரமாக மாறி விளையாடுவதற்கான வசதிகள் உள்ளன.

அதேபோல் டைனோசார் வேர்ல்டு பகுதியில் திகிலூட்டும் வகையில் அமைந்த ஜூராசிக் ஜீவராசிகளின் தத்ரூப மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் திகில் மாளிகை (ஹான்டட் மேன்ஷன்) எனும் விளையாட்டுப்பகுதி திகிலும், சுவாரசியமும் நிரம்ப உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.

இவையெல்லாவற்றையும் விட ரிப்ளேயின் நம்பினால் நம்புங்கள் மியூசியம் உங்களை திகைப்பின் உச்சிக்கு கொண்டுசெல்லும் என்பதில் சந்தேகமில்லை. எனவே நாம் ரிப்ளேயின் நம்பினால் நம்புங்கள் மியூசியத்தில் இருந்து நம் பயணத்தை தொடங்குவோம் வாருங்கள்!!!

பார்வை நேரம் : காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை.

படித்துப் பாருங்கள் : எம்.ஜி.எம் டிஸ்ஸீ வேர்ல்டும், 50 ரைடுகளும்!!!

தாடி வைத்த பெண்!!!

தாடி வைத்த பெண்!!!

கார்ல் மார்க்ஸ், சாக்ரட்டீஸ் போல நீளமான தாடி வளர்த்த இந்தப் பெண்ணிடம் ஒரே நாளில் 7 பேர் காதலை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரின் காதலையும் நிராகரித்த இந்தப் பெண்ணிடம் அதன் பிறகு யாரும் காதலை சொல்லவில்லை.

படம் : Rameshng

சுறா கடித்து உயிர் பிழைத்த மனிதர்!!!

சுறா கடித்து உயிர் பிழைத்த மனிதர்!!!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரூட்னி ஃபாக்ஸ் என்ற மீனவர் இராட்சஸ சுறா ஒன்றால் கடுமையாக தாக்கப்பட்டார். அவருடைய விலா எலும்புகள் அனைத்தும் நொறுங்கிப் போனதோடு, மொத்தம் 465 தையல்கள் அவருக்கு போடப்பட்டுள்ளது. அவர் சுறா கடித்தபோது அணிந்திருந்த ஈர உடை, குடல் சரியாமல் அவருடைய உடலுடன் இறுகப் பிடித்திருந்ததாம். இதுதான் ரூட்னி உயிர் பிழைத்ததற்கு காரணம் என்று மருத்துவர்கள் ஆச்சரியத்துடன் கூறுகிறார்கள்.

படம் : Rameshng

கிளிக்கூண்டில் அடைக்கப்பட்ட குள்ளர்!!!

கிளிக்கூண்டில் அடைக்கப்பட்ட குள்ளர்!!!

பண்டைய எகிப்து தேசத்தைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரியா பகுதியில் வாழ்ந்து வந்த அலிபிஃயஸ் என்ற இந்த சித்திரக்குள்ளரின் உயரம் வெறும் 17 அங்குலம்தான். இவர் ராஜதுரோக நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கிளிக்கூண்டில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

படம் : Rameshng

பொய் சொன்னால் சித்திரவதை!

பொய் சொன்னால் சித்திரவதை!

கி.மு 1200 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் பொய் பேசுவது பெருங்குற்றமாக கருதப்பட்டது. அப்படி யாராவது பொய் பேசினால் அவர்கள் ஆடை களையப்பட்டு நிர்வாணமாக ஒரு இரும்பு புகைப்போக்கி போன்ற குழாயில் கட்டிவைக்கப்படுவார்கள். அதன் பின்னர் அவர்களுக்கு கீழே நெருப்பு மூட்டி, குழாயை சூடேற்றி குற்றவாளிகளை சித்திரவதை செய்வார்கள். ஆனால் அவர்களின் உயிர் போகாதபடி பார்த்துக்கொள்வதோடு, அதற்காக ஒரு ஆளை நியமித்து உயிர் போகும் முன் விடுவிக்கப்படுவார்கள்.

படம் : Rameshng

சேஸ்டிடி பெல்ட்

சேஸ்டிடி பெல்ட்

ஐரோப்பிய தேசங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த சேஸ்டிடி பெல்ட் நடைமுறையில் இருந்தது. அதாவது கணவன் போருக்குச் செல்லும் வேளையில் வேலைக்காரர்கள், திருடர்கள் போன்ற ஆண்களிடமிருந்து பெண்களை பாதுகாக்க பெண்களின் பிறப்புறுப்பை மறைத்து, கற்பை காப்பாற்ற இந்த சேஸ்டிடி பெல்ட் பெண்களுக்கு அணிவிக்கப்பட்டது. மேலும் இங்கே சாமுராய் கவசம், வெக்கங்கெட்டவன் முகமூடி போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

படம் : Rameshng

பிணம் உயிரோடு எழுதந்தால்??!!

பிணம் உயிரோடு எழுதந்தால்??!!

19-ஆம் நூற்றாண்டுகளில் தவறுதலாக சிலர் இறந்ததாக கருதி மண்ணில் புதைக்கப்படுவதுண்டு. இந்த தவற்றை கண்டுபிடிக்கும் விதமாக அப்போது சவப்பெட்டிக்கு உள்ளே எச்சரிப்பு மணி ஒன்று பொருத்தப்பட்டு வந்தது. அவ்வாறாக புதைக்கப்பட்டவர் உயிரோடு இருந்தால் அவர் எழும்போது இந்த மணி சத்தமெழுப்பும். அதோடு இரவு வேளையில் இவ்வாறு புதைக்கப்பட்ட பிணங்கள் எழுந்தால் அதை கண்டறிய 'கிரேவ்யார்ட் ஷிப்ட்' என்ற பெயரில் ஆட்கள் வேலைக்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.

படம் : Rameshng

நிஜ மூதாதையர் தலை!!!

நிஜ மூதாதையர் தலை!!!

ஐரோப்பிய ஆதிக்கம் புது கினியாவில் படர்வதற்கு முன் மரத்தினால் ஆன மூதாதையர்களின் உருவம், அவர்களின் நிஜத் தலையுடன் காட்சிக்கு வைக்கப்பட்டு வந்தது. இங்கே காணப்படும் நிஜ மூதாதையர் தலை, களிமண்ணால் பூசி மொழுகப்பட்டு, ஆண் காட்டுப் பன்றியின் பற்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

படம் : Rameshng

இரட்டைத் தலை கன்றுகுட்டி!!!

இரட்டைத் தலை கன்றுகுட்டி!!!

அமெரிக்காவின் மிசௌரி பகுதியில் பிப்ரவரி, 2007-ஆம் ஆண்டு இந்தத் இரட்டைத் தலை கன்றுகுட்டி பிறந்துள்ளது. இப்படி இரட்டைத் தலையுடன் பிறக்கும் விலங்குகள் சாத்தானின் குழந்தைகளாக கருதப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் தாய் விலங்குகள் இவ்வாறு இரட்டைத் தலையுடன் பிறக்கும் விலங்குகளை சேர்த்துக்கொள்வதுமில்லை, அவற்றுக்கு பால் கொடுப்பதுமில்லை. எனவே பட்டினி கிடந்து அவை சாகும் பரிதாப நிலையே ஏற்படுகிறது.

படம் : Rameshng

பறக்கும் கார்

பறக்கும் கார்

1940-ஆம் ஆண்டு பிரிட்டேன் போரின்போது, இங்கிலாந்து வீதிகளில் கிடந்த கழிவுப்பொருட்களைக் கொண்டு இந்த பறக்கும் கார் உருவாக்கப்பட்டது. இதை வடிவமைத்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஃபோக்லே என்ற விஞ்ஞானி. ஆனால் காரை பறக்கவைக்கும் அவருடைய நீண்ட நாள் முயற்சி துரதிர்ஷ்டவசமாக தோல்வியில் முடிந்தது. அதன் பிறகு 1947-ஆம் ஆண்டு, அமெரிக்கர் ஒருவர் கண்டுபிடித்த 'ஏரோ கார்' (பறக்கும் கார்) பல மைல் தூரம் வானில் பறந்து சாதனை படைத்தது. எனினும் அந்த பறக்கும் காரும் போதிய எரிவாயு இல்லாமல் கீழே விழுந்து நொறுங்கியது.

படம் : Rameshng

மர்லின் மன்றோவின் முத்தம்!!!

மர்லின் மன்றோவின் முத்தம்!!!

மர்லின் மன்றோ தன்னுடைய சிவப்பு உதட்டுச்சாயம் பதிய கொடுத்த முத்தத்தின் அச்சு, அவருடைய சிகை அலங்கார நிபுணருக்கு அவரால் 1962-ஆம் ஆண்டு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

படம் : Rameshng

பாட்டிலை துளைத்த மர அம்பு!!!

பாட்டிலை துளைத்த மர அம்பு!!!

ஜோசப் ஷகேனா என்ற அமெரிக்கர் இந்த பீர் பாட்டிலுக்குள் ஒரு மர அம்பினை, பாட்டிலை அறுக்காமல் உள்ளே செலுத்தியிருக்கிறார். அது எப்படி சாத்தியம் என்று கேட்கிறீர்களா?...நம்பினால் நம்புங்கள்!!!

படம் : Rameshng

உயரமான மனிதர்

உயரமான மனிதர்

9 அடி வளர்ந்த உலகின் உயரமான மனிதரின் மெழுகுச் சிலை.

படம் : Rameshng

மனிதத் தலைப் பதக்கம்!!!

மனிதத் தலைப் பதக்கம்!!!

ஈக்குவடாரின் ஜிவாரோ இந்தியர்கள் தாங்கள் வெற்றிபெற்றதின் அடையாளமாக கொல்லப்பட்ட எதிரிகளின் தலையை கொய்வது வழக்கமாக இருந்துள்ளது. அவ்வாறு கொய்யப்படும் தலைகளிலுள்ள தோலை மண்டையோட்டிலிருந்து வெட்டி எடுத்து, பின்னர் கண், வாய் முதலிவற்றை மீண்டும் மண்டையோட்டிலேயே வைத்து தைத்துவிடுவார்கள். அதன் பிறகு மண்டையோட்டின் வெற்று இடங்களை மணல் மற்றும் கற்களைக் கொண்டு நிரப்பி, அதை மூலிகைச் சாறுடன் வேகவைப்பார்கள். இறுதியாக சுருங்கிய தோற்றத்துடன் வரும் குட்டித் தலைகளை வெற்றிப்பதக்கமாக அணிந்துகொள்வார்கள்.

படம் : Rameshng

நீர் எங்கேயிருந்து வருகிறது??!!

நீர் எங்கேயிருந்து வருகிறது??!!

இந்தக் குழாயிலிருந்து வழியும் நீர் எங்கேயிருந்து வருகிறது என்று உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது! அதைவிட இதன் கீழே உள்ள பாத்திரம் நிரம்பி வழிவதே இல்லையாம்!!

ஒட்டக எலும்பில் கலைப்படைப்பு!!!

ஒட்டக எலும்பில் கலைப்படைப்பு!!!

சீன ஒட்டகத்தின் எலும்புகளைக் கொண்டு இந்த அற்புதமான கலைப்படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

படம் : Rameshng

பட்டாம்பூச்சியில் மோனாலிசா ஓவியம்!!!

பட்டாம்பூச்சியில் மோனாலிசா ஓவியம்!!!

மெக்ஸிகோ நாட்டின் புகழ்பெற்ற ஓவியர் என்ரிக் ரேமோஸ் என்பவர் பட்டாம்பூச்சி ஒன்றின் சிறகுகளில் லியானோர்டா டா டாவின்ஸியின் உருவத்தையும், டாவின்ஸியின் பிரபலமான மோனாலிசா ஓவியத்தையும் வரைந்துள்ளார்.

படம் : Rameshng

சீன டிராகன் கப்பல்

சீன டிராகன் கப்பல்

பண்டைய சீனப் பேரசர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த டிராகன் கப்பலின் மாதிரி வடிவமான இது, 1000 பவுண்ட் எடை கொண்ட விலையுயர்ந்த பச்சை மாணிக்கக்கற்களால் உருவாக்கப்பட்டது.

படம் : Rameshng

65 லட்சம் மதிப்புள்ள புத்தர்!!!

65 லட்சம் மதிப்புள்ள புத்தர்!!!

பச்சை மாணிக்கக்கற்களைக் கொண்டு செய்யப்பட்ட இந்த சிரிக்கும் புத்தர் சிலையின் மதிப்பு 65 லட்சம் ரூபாயாம்!!!

வௌவாலின் சிறகுகளில் ஓவியம்!!!

வௌவாலின் சிறகுகளில் ஓவியம்!!!

மெக்ஸிகோ நாட்டின் புகழ்பெற்ற ஓவியர் என்ரிக் ரேமோஸ் என்பவர் ரத்தம் உறிஞ்சும் வௌவால் ஒன்றின் சிறகுகளில் தீட்டிய ஓவியம்.

படம் : Rameshng

பண்டைய போர்க்கருவிகள்

பண்டைய போர்க்கருவிகள்

பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட போர்க்கருவிகள்.

படம் : Rameshng

போலி டைனோசர்

போலி டைனோசர்

கங்காரு, முதலை உள்ளிட்ட விலங்குகளின் எலும்புகளையும், இராட்சஸ பல்லி ஒன்றின் மண்டையோட்டையும் கொண்டு இந்த டைனோசர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

படம் : Rameshng

நம்பினால் நம்புங்கள் மியூசியம்!!!

நம்பினால் நம்புங்கள் மியூசியம்!!!

இவ்வளவு நேரம் நீங்கள் பார்த்து ரசித்து வந்த அனைத்தும் அமைந்துள்ள ரிப்ளேயின் நம்பினால் நம்புங்கள் மியூசியத்தின் நுழைவாயில்.

படம் : Rameshng

மெழுகு மியூசியம்

மெழுகு மியூசியம்

இன்னோவேடிவ் ஃபிலிம் சிட்டியில் அமைந்துள்ள இந்த மெழுகு மியூசியத்தில் எண்ணற்ற பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மெழுகுச் சிலை, 'ராக்கி' என்ற ஹாலிவுட் படத்தில் சில்வர்ஸ்டர் ஸ்டாலோனின் தோற்றம்.

படம் : Rameshng

ஜேம்ஸ் பாண்ட்

ஜேம்ஸ் பாண்ட்

ஜேம்ஸ் பாண்ட் கெட்டப்பில் ஹாலிவுட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னன்.

படம் : Rameshng

மஹாத்மா காந்தி

மஹாத்மா காந்தி

மஹாத்மா காந்தியின் மெழுகுச் சிலை.

படம் : Rameshng

டாம் ஹேங்க்ஸ்

டாம் ஹேங்க்ஸ்

'ஃபாரஸ்ட் கம்ப்' என்ற ஹாலிவுட் படத்தின் ஒரு காட்சியில் டாம் ஹேங்க்ஸ் தோன்றும் ஒரு காட்சி மெழுகுச் சிலையாக வடிக்கப்பட்டுள்ளது.

படம் : Rameshng

ஹிட்லர்

ஹிட்லர்

ஹிட்லரின் மெழுகுச் சிலை.

படம் : Rameshng

சார்லி சாப்ளின்

சார்லி சாப்ளின்

சார்லி சாப்ளினின் மெழுகுச் சிலை.

படம் : Rameshng

மோனாலிசாவும், டாவின்ஸியும்!!!

மோனாலிசாவும், டாவின்ஸியும்!!!

லியானோர்டா டா டாவின்ஸி மற்றும் அவர் தீட்டிய புகழ்பெற்ற ஓவியமான மோனாலிசாவின் மெழுகுச் சிலையும்.

படம் : Rameshng

மர்லின் மன்றோ

மர்லின் மன்றோ

மர்லின் மன்றோவின் மெழுகுச் சிலை.

படம் : Rameshng

மைக்கேல் ஜேக்சன்

மைக்கேல் ஜேக்சன்

மைக்கேல் ஜேக்சன் உள்ளிட்ட புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் மெழுகுச் சிலைகள்.

படம் : Rameshng

ஹாரி பாட்டர்

ஹாரி பாட்டர்

ஜே.கே.ரௌலிங்கின் ஹாரி பாட்டர்.

படம் : Rameshng

டயானா

டயானா

கார் விபத்தில் இறந்துபோன இங்கிலாந்து முன்னாள் இளவரசி டயானாவின் மெழுகுச் சிலை.

படம் : Rameshng

நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலா

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மெழுகுச் சிலை.

படம் : Rameshng

பில் கிளிண்டன்

பில் கிளிண்டன்

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மெழுகுச் சிலை.


படம் : Rameshng

கார்ட்டூன் சிட்டி

கார்ட்டூன் சிட்டி

இன்னோவேடிவ் ஃபிலிம் சிட்டியில் உள்ள கார்ட்டூன் சிட்டி.

படம் : Rameshng

டைனோசர் வேர்ல்டு

டைனோசர் வேர்ல்டு

இன்னோவேடிவ் ஃபிலிம் சிட்டியினுள் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள டைனோசர் வேர்ல்டு அல்லது டைனோசர் பூங்கா.

படம் : Rameshng

நுழைவாயில்

நுழைவாயில்

இன்னோவேடிவ் ஃபிலிம் சிட்டியின் நுழைவாயில்.

படம் : Rameshng

நீச்சல் குளம்

நீச்சல் குளம்

இன்னோவேடிவ் ஃபிலிம் சிட்டியில் அமைந்துள்ள இந்த அக்குவாசிட்டி நீச்சல் குளத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விளையாடித் திளைக்கலாம்.

படம் : Rameshng

ஹான்டட் மேன்ஷன்

ஹான்டட் மேன்ஷன்

ஹான்டட் மேன்ஷன் என்ற இந்த திகில் மாளிகை திகிலும், சுவாரசியமும் நிரம்ப உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.

படம் : Rameshng

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+