Search
  • Follow NativePlanet
Share
» » பாராஸாத் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது

பாராஸாத் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது

பாராஸாத் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது

பாராஸாத் நகரம் கொல்கத்தாவை ஒட்டி அமைந்துள்ளது. இது பெங்காளி கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒரு உற்சாக நகரமாக புகழ் பெற்றுள்ளது. துர்க்கா பூஜா மற்றும் காளி பூஜா திருவிழாக்காலங்களில் இது பரபரப்பாக காட்சியளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்நகரம் இந்து மற்றும் முஸ்லிம் வகுப்பினர் ஒற்றுமையாக வசிக்கும் நகர்ப்பகுதியாகவும் விளங்குகிறது. ஆசிரமங்கள் அதிகம் அமைந்திருப்பதால் கொல்கத்தாவாசிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அதிகம் விஜயம் செய்யும் ஸ்தலமாக இது பிரசித்தி பெற்றுள்ளது.

PC: Anup Sadi

உள்ளூர் கலாச்சாரம் கொல்கத்தாவின் ஒரு அங்கமாகவே கருதப்படுவதால் இந்த நகரத்துக்கான போக்குவரத்து வசதிகளுக்கு குறைவில்லை. இங்கு பங்களாதேஷிலிருந்து அதிக மக்கள் வந்து குடியேறி வசிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹஸ்ரத் ஏக்தில் ஷா எனும் முஸ்லிம் ஞானியின் கல்லறை இந்நகரத்தில் அமைந்திருப்பதால் முஸ்லிம் மக்களிடையே முக்கிய ஸ்தலமாக இது அறியப்படுகிறது. இந்த தர்க்காவில் நடைபெறும் நினைவுதின சடங்குகளில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருபிரிவினரும் ஒற்றுமையோடு கலந்துகொள்கின்றனர்.

 பாராஸாத் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது

உணவுவகைகள் மற்றும் இதர அம்சங்கள்

பாராஸாத் நகரத்தில் உள்ள உணவகங்களில் எல்லாவகை பெங்காளி உணவுகளும் பரிமாறப்படுவதால் அவற்றை ருசி பார்ப்பதும் அவசியம். இங்குள்ள சில பருத்தித்துணி நெசவு பட்டறைகளுக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம். தங்கும் வசதிகள் பாராஸாத் நகரத்தில் தங்குவதற்கு சில ஹோட்டல்கள் இருந்தாலும் கொல்கத்தாவில் தங்கி இந்த நகரத்திற்கு பயணம் மேற்கொள்வது சிறந்தது. கொல்கத்தாவிலிருந்து சிறிது நேர பயணத்திலேயே இந்த நகரத்துக்கு வந்துவிடலாம். ஒரு அரசு விருந்தினர் இல்லமும் பாராஸாத் நகரத்தில் உள்ளது. முன்கூட்டியே பதிவு செய்வதன் மூலம் இங்கு பொதுமக்களும் தங்கிக்கொள்ளலாம். பிரயாண வசதிகள் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவதால் கொல்கத்தா நகரத்திலிருந்து சுலபமாக இந்த நகரத்திற்கு வரலாம்.

More News

    Read more about: kolkata
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+