Search
  • Follow NativePlanet
Share
» »எத்தனை வகையான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன தெரியும்?

எத்தனை வகையான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன தெரியும்?

பட்டாம்பூச்சிகள் உயிரின வகைப்பாடுகளில், லெப்பிடோப்டரா (Lepidoptera) என்னும் அறிவியல் பெயர் தாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த அறிவியல் பெயரில் உள்ள லெப்பிசு (Lepis) என்பது செதில் என்று பொருள்படும். தெரான் (pteron) என்பது இறக்கை (சிறகு) என்று பொருள்படும்.

beautiful butterfly parks in India

பட்டாம்பூச்சிகள் செதிலிறகிகள் என்னும் இனத்தைச் சேர்ந்தவை. பட்டாம்பூச்சிகளில், 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு வகைகள் உள்ளன. இவற்றில் மிகப்பெரியதான பட்டாம்பூச்சியானது, பப்புவா நியூகினி நாட்டில் காணப்படும் குயின் அலெக்ஸாண்டிரா என்பதாகும். அது தன் இறக்கைகளை விரித்திருக்கும் பொழுது 28 செ.மீ., நீளம் இருக்கும்.

பட்டாம்பூச்சி பூங்கா, பன்னர்கட்டா உயிரியல் பூங்கா

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் புகழ்பெற்ற பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிற்குள் அமைக்கப்பட்டுள்ள இந்த பட்டாம்பூச்சி பூங்கா, இந்தியாவின் முதல் முறையாக அமைக்கப்பட்ட பட்டாம்பூச்சி வளாகமாகும். இந்த பூங்காவில் 50 வகையான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன.

beautiful butterfly parks in India

பட்டாம்பூச்சி கன்சர்வேட்டரி - போண்டா, கோவா

கோவா உள்ள போண்டாவில் பட்டர்ஃபிளை கன்சர்வேட்டரி என்பது தனியாரால் நடத்தப்படும் பூங்காவாகும். இங்கு 100 வகையான பட்டாம்பூச்சிகளுக்கு மேல் உள்ளது. பார்வையாளர்கள் நடைபாதைகளில் நடந்தவாறே கண்டு மகிழலாம். வண்ணத்துப்பூச்சி பாதுகாப்பு பற்றியும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

ஜுராசிக் பட்டாம்பூச்சி பூங்கா - அகமதாபாத், குஜராத்

ஜுராசிக் பட்டாம்பூச்சி பூங்கா, வண்ணத்துப்பூச்சி இனங்கள் குவிந்து கிடக்கும் மற்றொரு முக்கிய பூங்காவாகும். இவை பூக்கும் தாவரங்களுக்கு மத்தியில் அவற்றின் இயற்கையான சூழலில் உலா வருவதை, பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம்.

பட்டாம்பூச்சி பூங்கா, சண்டிகர்

சண்டிகரில் உள்ள இந்த பட்டாம்பூச்சி பூங்கா நன்கு பராமரிக்கப்பட்ட சரணாலயமாகும். இந்த பூங்கா, பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகளை ஈர்க்கிறது.

சுந்தரவன் - அகமதாபாத், குஜராத்

சுந்தரவன் என்பது அகமதாபாத்தின் மையத்தில் உள்ள ஒரு இயற்கை கண்டுபிடிப்பு மையம். சுந்தரவனத்தில் ஒரு சிறியது; ஆனால் துடிப்பான பட்டாம்பூச்சி பூங்காவாகும்.

செம்மொழிப் பூங்கா - சென்னை, தமிழ்நாடு

செம்மொழி பூங்கா என்பது ஒரு தாவரவியல் பூங்கா ஆகும். இதனுள் ஒரு பிரத்யேக பட்டாம்பூச்சி பூங்காவைக் கொண்டுள்ளது. இந்த பூங்காவில் பரந்த அளவிலான புரவலன் தாவரங்கள் உள்ளன. உள்ளூர் பட்டாம்பூச்சி, இனங்களுக்கு அழைப்பு விடுக்கும் இடமாக அமைகிறது.

பட்டாம்பூச்சி பூங்கா - சிக்மகளூர், கர்நாடகா

வண்ணத்துப்பூச்சி பூங்கா என்பது மேற்கு தொடர்ச்சி மலைகளின் வளமான பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு பாதுகாப்பு முயற்சியின் ஒரு பகுதியாகும். மலபார் பேண்டட் ஸ்வாலோடெயில் உட்பட பல்வேறு உயிரினங்களை, இது ஈர்க்கிறது.

திருச்சி பட்டாம்பூச்சி கன்சர்வேட்டரி

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள மேலூர் கிராமத்துக்கு அருகே 8.67 கோடி மதிப்பீட்டில் 25 ஏக்கர் பரப்பில் உள்ளது இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா. இது, கடந்த 2015 நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது.

இந்த வண்ணத்துப் பூச்சி பூங்கா ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவாகும். இங்கு இளநிலை ஆராய்ச்சியாளர்களால் வண்ணத்துப்பூச்சிகளின் முக்கியத்துவம், அவற்றின் பாதுகாப்பு நிலை குறித்தும் பார்வையாளர்களுக்கு விளக்கப்பட்டு வருகிறது. வெப்பமண்டல பட்டர்ஃபிளை கன்சர்வேட்டரி ஆசியாவிலேயே மிகப்பெரியது. இது, 100 க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்கள் மற்றும் அழகான தோட்டம் மற்றும் செயற்கை நீர்வீழ்ச்சிகளைக் கொண்டுள்ளது.

பட்டாம்பூச்சி என்றதும் ஒவ்வொருவரின் மனதில்ஆயிரம் பட்டாம்பூச்சிகள் ஒரு நொடி பறந்திருக்கும் அல்லவா...? உங்கள் மனதில் பறந்த பட்டாம்பூச்சிகள் என்னென்ன என்று எனக்கு தெரியாது? ஆனால், என் மனதில் பறந்த நினைவு என்ற பட்டாம்பூச்சி எதுவென்றால், சிறிய வயதில் வயலில் பரந்த சிறகை விறித்து என்னை வந்து தொடு பார்க்கலாம் என அழைத்த அந்த கருப்பு நிற இறக்கையில் இளம்சிவப்பு, ஊதா நிற பட்டாம்பூச்சி தான் வந்து செல்கிறது. நாங்க நம்பிட்டோம் என கேட்பது புரிகிறது. ஆனால் நம்பி தான் ஆகனும் பாஸ்...!

More News

    Read more about: tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+