Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையில் மணக்க மணக்க... சூப்பரான ஃபில்டர் காபி கிடைக்கும் 10 இடங்கள்

சென்னையில் மணக்க மணக்க... சூப்பரான ஃபில்டர் காபி கிடைக்கும் 10 இடங்கள்

மக்களின் அன்றாட வாழ்வியலில் காபி ஒரு முக்கிய பங்காக மாறி உள்ளது. காலை எழுந்ததும் முதலில் அனைவரும் விரும்புவது சூடான காபியை தான். காபி அப்படி மனிதர்களின் உணர்வுகளில் கலந்து ஒன்றாகிவிட்டது. என்ன தான் வீட்டில் வித விதமான, காஸ்ட்லி காபி பொடியில் காபி போட்டு குடித்தாலும், பாரம்பரிய மணம், சுவை மாறாமல் ஃபிலிட்டர் காபி குடிக்கும் சுகமே தனி தான். ஹோட்டலில் கிடைக்கும் ஃபில்டர் காபிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பில்டர் காபி நறுமணமும் சுவையும் காபி பிரியர்களுக்கு அலாதியான ஒன்று. நம் சென்னையில் காபி பிரியர்கள் செல்ல வேண்டிய சூப்பரான 10 இடங்களை தெரிந்து கொள்ளலாம்.

Chennai

சென்னையில் பில்டர் காபிக்கு சிறந்த 10 இடங்கள்:

சங்கீதா வெஜ் உணவகம்

சென்னையில் பல கிளைகளைக் கொண்ட சங்கீதா வெஜ் உணவகத்தில் பில்டர் காபி மிக பிரபலம். குறிப்பாக ஆர் ஏ புரத்தில் உள்ள கிளையில் கிடைக்கும் காபிக்கின்றே தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த ஹோட்டலில் வாடிக்கையாளர்களின் விருப்பம் அறிந்து அவர்களுக்கு காபி சேவையை வழங்குகிறார்கள்.

கிருஷ்ணா உணவகம் (நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டல்)

கர்நாடக இசை ரசிகர்களுக்கு குறிப்பாக சென்னை இசை சீசனில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் பிரபலமான ஹேங் அவுட், கிருஷ்ணா உணவகம் ஆகும். இங்கு கிடைக்கும் உடுப்பி பாணியிலான மசால் தோசை மிகவும் பிரபல உணவாகும். மேலும் இங்கு கிடைக்கும் பில்டர் காபி பலரின் ஃபேவரைட். காபி பிரியர்களை கவருவதற்காகவே பிரத்யேகமான முறையில் இங்கு ஃபில்டர் காபி தயாரிக்கிறார்கள்.

மதிசியா

சென்னையில் உள்ள மற்றொரு உணவகமான இந்த இடம் 30 ஆண்டுகளுக்கு மேலாக கர்நாடகாவின் சிக்மகளூரில் உள்ள ஒரு காபி எஸ்டேட்டில் இருந்து பெறப்படும் அரபிக்கா பீன்ஸ் என்ற காபி கொட்டையில் இருந்து காபி பொடி தயார் செய்து வருகிறது. அதனால் இந்த ஹோட்டலில் கிடைக்கும் காபி தனித்துவமான சுவையுடன் இருப்பதால் இந்த காபிக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ளனர். மேலும் இங்கு சூடான பில்டர் காபியுடன் பரிமாறப்படும் பாரம்பரிய உடுப்பி சிற்றுண்டிகள் ஆன போண்டாக்கள் மற்றும் பஜ்ஜிகள் உடன் வழங்கப்படும் தேங்காய் சட்னியுடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். மேலும் இங்கு கிடைக்கும் பில்ட்டர் காபிக்காகவே வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் இந்த உணவகத்திற்க்கு வருகை தருகிறார்கள்.

Chennai

ஈட்டிங் சர்க்கில்ஸ்

பெங்களூரு பாணியில் மொறுமொறுப்பான மசாலா தோசை மற்றும் தட்டு இட்லிக்கு பிரபலமான இந்த ஹேட்டல் சென்னையில் உள்ள ஒரே மங்களூரு ஸ்டைல் உணவகம் ஆகும். இங்கு மங்களூரு ஸ்டைலில் பரிமாறப்படும் வெல்லம் கலந்த சாம்பார் மிக பிரபலம். மேலும் இங்கு கிடைக்கும் பெங்களூரு ஸ்டைல் ஃபில்டர் காபிக்கு என்று வாடிக்கையாளர்கள் அதிகம்.

சரவணபவன் ஆர் கே சாலை

சென்னை போன்ற பெரு நகரங்களில் விடியல் பொழுது மிக சீக்கிரமாகவே இருக்கும். அவ்வாறு அந்த விடியல் பொழுதில் சென்னை மெரினா கடற்கரையில் நடைபயிற்சிக்கு வரும் மக்கள் அருகில் உள்ள சரவணபவன் உணவகத்தில் கிடைக்கும் பில்ட்டர் காபி அவர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் விதமாக உள்ளது. மேலும் இரவு நேரத்திலும் இங்கு பில்டர் காபி சுவைப்பதற்கென்றே மக்கள் அதிகம் விரும்பி வருகிறார்கள்.

விவேகானந்தா காபி

சென்னையில் உள்ள பழமையான பில்டர் காபி சில்லறை விற்பனை பிராண்டுகளில் ஒன்றான விவேகானந்தா காபி 1950 களிலிருந்து வீட்டு பெயரால் உருவாகி வந்த கும்பகோணம் டிகிரி காபியின் பிராண்ட் ஆகும். இந்த காபி சென்னையில் பல சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கிறது அங்கு சென்று மக்கள் பிரஷான பில்டர் காபியை சுவைக்கிறார்கள்.

மெட்ராஸ் காபி ஹவுஸ்

சென்னை விமான நிலையத்தில் அமைந்துள்ள மெட்ராஸ் காபி ஹவுஸ் விற்பனை நிலையத்தில் கிடைக்கும் காபி அங்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகவும் புத்துணர்ச்சி ஊட்டும் விதமாக உள்ளது.மேலும் இங்கு பேப்பர் கப்பில் பரிமாறப்படும் பில்டர் காபியின் சுவையும் அதன் மனமும் அங்கே வந்து செல்லும் பல வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்துள்ளது.

மயிலை கற்பகாம்பாள் மெஸ்

சென்னையில் நல்ல பில்டர் காபி எங்கு கிடைக்கும் என்று யோசித்தால் அனைவரும் பெரும்பாலும் சொல்லும் இடம் மயிலாப்பூர் ஆக தான் இருக்கிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள பழைய பள்ளியின் அருகே கிடைக்கும் கீரை வடை மற்றும் பாதாம் அல்வாக்கும் பெயர் பெற்றது. இந்த உணவகம் இங்கு காபி விதைகளை உற்பத்தி செய்து வறுத்து அரைத்து பில்டர் காபி தயார் செய்து வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்கிறார்கள்.

கபே மேற்காரா ஐடிசி கிராண்ட் சோழா

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள ஆடம்பர ஹோட்டல்களில் ஒன்று ஐடிசி கிராண்ட் சோழா ஐடிசி கிராண்ட் சோழாவில் உள்ள கபே மேற்காரா எக்ஸ்பிரஸ், இது பில்டர் காபிக்கு என்று ஒரு சிறந்த இடமாகும். நள்ளிரவில் பில்ட்டர் காபி தேவைப்பட்டாலும் சரி பகலில் ஒரு பிசினஸ் மீட்டிங் பில்டர் காபி தேவைப்பட்டாலும் சரி இந்த கஃபேயில் கிடைக்கும்.

ரத்னா கஃபே

சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள ரத்னா கஃபே தனது சேவையை தொடங்கி 75 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இது பல விற்பனை நிலையங்களை கொண்ட ஒரு பிராண்ட் ஆகும். ரத்னா கஃபே சாம்பார் இட்லிக்கும் மிகவும் பிரபலமானதாக இருந்தாலும் அதன் தனித்துவமான பில்டர் காபிக்கு இன்றும் வாடிக்கையாளர்களை அதிகமாக ஈர்க்கும் பிரபல உணவகம் ஆகும்.

More News

    Read more about: chennai
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+