Search
  • Follow NativePlanet
Share
» »பாஸ்...ப்ரொபோஸ் பண்ண போறீங்களா? ஒரு நிமிஷம் இதை படிச்சிட்டு பண்ணுங்க

பாஸ்...ப்ரொபோஸ் பண்ண போறீங்களா? ஒரு நிமிஷம் இதை படிச்சிட்டு பண்ணுங்க

காதல் விவரிக்க முடியாத உன்னத உணர்வு. காதல் ததும்ப இதழோரம் மலரும் ஒரு மெல்லிதான புன்னகை நமக்கு பைத்தியம் பிடிக்க வைக்கும். உலகத்தையே ஏதோ வென்றுவிட்டது போன்ற உணர்வு நம்மை ஆட்கொள்ளும். அவளுக்காக எதுவும் செய்யலாம் என்று தோன்றும். மொத்தத்தில் நம்மை நல்லதொரு மனிதனாக காதல் மாற்றும்.

உள்ளத்துள் தோன்றும் காதலை அவளுடன் பரிமாறும் அந்த தருணம் என்றென்றைக்கும் மறக்க முடியாததாக இருக்கும். என்றும், எல்லாவற்றிலும் உடன் வரப் போகிறவளிடம் காதலை சொல்லும் தருணத்தை வித்தியாசமாக, பிரம்மாண்டமாக, அவளால் கனவில் கூட கற்பனை செய்திராதபடி மாற்றவேண்டும். என்ன செய்யலாம்?. இந்தியாவில் ப்ரபோஸ் செய்ய மிகச்சிறப்பான இடங்களை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

அந்தமானில் ஸ்கூபா டைவிங் !!

அந்தமானில் ஸ்கூபா டைவிங் !!

வங்காள விரிகுடாவில் இருக்கும் அந்தமான் தீவுகள் ஒரு பூலோக சொர்க்கம் ஆகும். இங்கே ஸ்கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடல் நீச்சல் விளையாட்டு மிகப்பிரபலம்.

Arun Katiyar

அந்தமானில் ஸ்கூபா டைவிங் !!

அந்தமானில் ஸ்கூபா டைவிங் !!

கடலுக்கடியில் வண்ண வண்ண மீன்கள் சூழ்ந்திருக்க உங்கள் காதலியிடம் காதலை தெரிவியுங்கள். இப்படி செய்வது உங்கள் காதலியால் என்றென்றைக்கும் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும்.

ப்ரபோஸ் செய்த அதிர்ச்சியில் பேச வேண்டும் என்று நினைத்தால் கூட கடலுக்குள் பேச முடியாது.

Arun Katiyar

அந்தமானில் ஸ்கூபா டைவிங் !!

அந்தமானில் ஸ்கூபா டைவிங் !!

அந்தாமானில் ஸ்கூபா டைவிங் மிகப்பிரபலமான சுற்றுலா அம்சமாகும். இங்கே தேனிலவு கொண்டாட வரும் ஜோடிகள் பலரும் இதனை முயற்சி செய்து பார்க்க தவறுவதில்லை.

இதற்காகவே பல தனியார் முகவங்கள் அந்தமானில் இயங்குகின்றன.

Sankara Subramanian

அந்தமானில் ஸ்கூபா டைவிங் !!

அந்தமானில் ஸ்கூபா டைவிங் !!

இந்தியாவில் கோவா, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் ஸ்கூபா டைவிங் விளையாட்டு இருந்தாலும் அந்தமானில் இருக்கும் கடல் வளம் அங்கு இல்லை.

தெள்ளத்தெளிவான அந்தமான் கடலில் வண்ணமயமான மீன்களையும், பவளப்பாறைகளையும் நாம் காணலாம்.

Arun Katiyar

அந்தமானில் ஸ்கூபா டைவிங் !!

அந்தமானில் ஸ்கூபா டைவிங் !!

அந்தமானில் ஹேவ்லாக் தீவில் தான் அதிகமாக ஸ்கூபா டைவிங் நடைபெறுகிறது. கடலுக்குள் செல்லும் முன்பாக ஸ்கூபா டைவிங் முகவங்களில் இரண்டு நாட்கள் வரை பயிற்சி அளிக்கப்படும்.

அதன் பின்னர் ஆழ்கடலில் நீந்துவதற்கு தேவையான முகக்கவசம், ஆக்சிஜன் சிலிண்டர் போன்றவற்றை அணிந்துகொண்டு கடலுக்கடியில் சென்று ஆச்சரியங்கள் கொட்டிக்கிடக்கும் வேறொரு உலகை தரிசிக்கலாம்.

Arun Katiyar

அந்தமானில் ஸ்கூபா டைவிங் !!

அந்தமானில் ஸ்கூபா டைவிங் !!

ஆழ்கடலில் நீந்த விருப்பமில்லாதவர்கள், கடல் என்றால் பயபப்டுபவர்கள் ஸ்நார்கிளிங்' செய்யலாம். ஸ்நார்கிளிங்கில் முகக்கவசம் அணிந்துகொண்டு கடலின் மேற்பரப்பில் மிதக்கலாம்.

Thejas

அந்தமானில் ஸ்கூபா டைவிங் !!

அந்தமானில் ஸ்கூபா டைவிங் !!

ஸ்நார்கிளிங் செய்யும் போது அநேகமாக இப்படியானதொரு காட்சியை தான் நீங்கள் காண்பீர்கள்.

Arun Katiyar

அந்தமானில் ஸ்கூபா டைவிங் !!

அந்தமானில் ஸ்கூபா டைவிங் !!

அந்தமானில் ஸ்கூபா டைவிங் நடக்கும் ஹேவ்லாக் தீவில் இருக்கும் ராதா நகர் கடற்கரை ஆசியாவின் மிகச்சிறந்த கடற்கரைகளுள் ஒன்றாக புகழ்பெற்ற டைம்ஸ் பத்திரிக்கையால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

சென்னையில் மெரீனா கடற்கரையையும், பாண்டிச்சேரியில் பிராம்னேடு கடற்கரையையும் பார்த்து பழகிய நமக்கு ராதா நகர் கடற்கரை சொர்க்கம் போல காட்சியளிக்கும் என்றே சொல்லலாம்.

Sankara Subramanian

அந்தமானில் ஸ்கூபா டைவிங் !!

அந்தமானில் ஸ்கூபா டைவிங் !!

நண்பர்களுடன் வருவதை காட்டிலும் காதலியுடனோ, மனைவியுடனோ வர அந்தமான் சிறந்த இடமாகும். சற்றும் மாசுபடாத வெண்மணல் கடற்கரைகள், அடர்த்தியான வனப்பகுதிகள், சுதத்திர போராட்டத்தின் நினைவுகளை தாங்கி நிற்கும் கட்டிடங்கள் என ஓர் அற்புதமான இடம் அந்தமான் ஆகும்.

அந்தமானை பற்றிய பயண தகவல்களையும், அங்கிருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

காதல் சிகரம் !!

காதல் சிகரம் !!

சில்லென குளிரும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை நிறைந்திருக்கும் ஓரிடத்தில் வைத்து உங்கள் காதலை வெளிப்படுத்த ஆசையா?.

அபப்டியென்றால் கேரளாவில் உள்ள வயநாட்டில் இருக்கும் செம்ப்ரா சிகரத்திற்கு செல்லுங்கள். சிகரத்தின் மேல் காதலர்களுக்காகவே படைக்கப்பட்ட அற்புதமான ஒரு விஷயம் இருக்கிறது.

Sankara Subramanian

காதல் சிகரம்!!

காதல் சிகரம்!!

செம்ப்ரா சிகரத்தின் மேல் இயற்கையாகவே காதல் இதயத்தின் வடிவில் அமைந்த ஏரி ஒன்று இருக்கிறது. மேகங்கள் முத்தமிட காதலை சொல்வது எத்தனை அற்புதமாக இருக்கும்?.

Sankara Subramanian

காதல் சிகரம்!!

காதல் சிகரம்!!

வயநாட்டின் தலைநகரான கல்பேட்டாவுக்கு அருகில் இருக்கும் செம்ப்ரா சிகரம் ட்ரெக்கிங் செய்ய அற்புதமான இடமாக சொல்லப்படுகிறது.

அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டம் இங்கே ட்ரெக்கிங் செல்ல ஏற்றதாகும்.

Sankara Subramanian

காதல் சிகரம்!!

காதல் சிகரம்!!

செம்ப்ரா சிகரம் தவிர பசுமையான தேயிலை தோட்டங்கள், மூன்று லட்சம் ஆண்டுகள் பழமையான எடக்கல் குகைகள்,அம்புகுத்தி மலை போன்ற இடங்கள் இருக்கின்றன.

kiran kumar

லேக் பேலஸ் !!

லேக் பேலஸ் !!

ராஜஸ்தான் மாநிலம் உதைபுரில் இருக்கிறது உலகின் மிக ரொமேன்டிக் ஹோட்டல்களில் ஒன்றாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் 'லேக் பேலஸ்'.

ஒரு காலத்தில் உதய்பூர் அரசர்களின் அரண்மனையாக இருந்த இந்த இடம் இப்போது ஹோட்டலாக மாற்றப்பட்டிருக்கிறது.

Jon Connell

லேக் பேலஸ் !!

லேக் பேலஸ் !!

பிசோலா என்ற செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியில் இருக்கும் ஜக்நிவாஸ் என்ற குட்டி தீவின் மேல் இந்த லேக் பேலஸ் இருக்கிறது.

தற்போது தாஜ் குழுமத்தால் நிர்வகிக்கப்படும் ஹோட்டால் ஆகும் இது. மொத்தம் 83அறைகளை கொண்டிருக்கும் இந்த ஹோட்டலை படகின் மூலமே சென்றடைய முடியும்.

Arian Zwegers

லேக் பேலஸ் !!

லேக் பேலஸ் !!

இன்றும் ஒரு அரண்மனையின் அழகோடு இருக்கிறது இந்த லேக் பேலஸ். ராயலாக காதலியிடம் காதலை சொல்ல வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு லேக் பெலசை விட சிறந்த இடம் இருக்க முடியாது.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+