Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் மலைகளின் அழகை ரோப் வேயில் சென்று ரசிக்க வேண்டுமா? இந்த இடத்திற்கு வாங்க

இந்தியாவில் மலைகளின் அழகை ரோப் வேயில் சென்று ரசிக்க வேண்டுமா? இந்த இடத்திற்கு வாங்க

இந்தியாவில் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் அழகை ரசிக்க அற்புதமான ரோப் வே சவாரிகள் பல உள்ளன. சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக பல பகுதிகளில் ரோப்வே சவாரி வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இப்படி இந்தியாவில் அந்தரத்தில் பறந்த படியே இயற்கை அழகை ரசித்து மகிழ ஏற்றதாக ரோப் வே வசதி உள்ள இடங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

Best places to enjoy ropeway ride in India

அவுலி ரோப் வே, உத்தரகண்ட்

இந்தியாவில் உள்ள மிக நீண்ட மற்றும் உயரமான கேபிள் கார் உத்தரகாண்டில் உள்ள அவுலியில் உள்ளது. இது பிரபலமான மலை வாசஸ்தலம் ஆகும். இங்கே உள்ள நந்தாதேவி மற்றும் திரிசூல் சிகரங்களின் அழகிய காட்சிகளை இந்த ரோப் காரின் வழியாக சென்று கண்டு களிக்கலாம்.

ரோஹ் தாங் ரோப் வே

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணாலிக்கு அருகில் அமைந்துள்ளது ரோஹ் தாங் ரோப் வே. இந்த ரோப் வே ரோஹ் தாங் கணவாய், இமயமலையை சுற்றியுள்ள பனி மூடிய சிகரங்களின் அற்புதமான காட்சிகளை கண்டு களிக்க உதவுகிறது.

Best places to enjoy ropeway ride in India

கேங்டாக் ரோப் வே

சிக்கிம் மாநிலத்தில் உள்ள கேங்டாக் என்ற நகரத்தில் உள்ளது இந்த ரோப் கார். இது காஞ்சன்ஜங்கா மலைத்தொடரின் அழகை கண்டு களிக்கவும் மற்றும் கீழே உள்ள பள்ளத்தாக்கின் அழகிய காட்சிகளையும் திரில்லிங்கான அனுபவத்துடன் நாம் ரசிக்க உதவுகிறது.

குல்மார்க் கோண்டோலா

இது ஆசியாவின் மிக உயரமான ஸ்கை ரிசார்ட் கேபிள் கார் ஆகும் .13 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது குல்மார்க் கோண்டோலா. இந்த சேவை குல்மார்க்கில் இருந்து கோங்டூரிக்கும், அபர்வத் சிகரத்திற்கும் அழைத்துச் செல்கிறது. இது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது. பனி படர்ந்த மலைகளின் அழகை த்ரில்லிங் அனுபவத்துடன் பார்த்து ரசிக்க முடியும்.

வைஷ்ணவா தேவி ரோப் வே

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது மிக முக்கியமான ஆன்மிக தலமான உலகப் புகழ்பெற்ற வைஷ்ணவா தேவி கோயில். இங்கே அமைந்துள்ள வைஷ்ணவா தேவி ரோப்வே வசதி யாத்திரிகர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் 4.8 கி.மீ., பயணத்தில் கத்ராவில் உள்ள வைஷ்ணவா தேவி கோயிலுக்கு அழைத்துச் செல்கிறது .

Best places to enjoy ropeway ride in India

டார்ஜிலிங் ரோப் வே

மேற்கு வங்கலத்தில் உள்ளது பிரபலமான சுற்றுலாத்தலமான டார்ஜிலிங். இங்கே உள்ள ரோப் வே வசதி திபெத்திய அகதிகள் , சுய உதவி மையம் மற்றும் கேசவ் நினைவு பூங்காவிற்கு செல்பவர்களை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு அழகான பயணத்தையும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குகிறது.

மாதேரான் ரோப் வே

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பைக்கு அருகில் அமைந்துள்ளது அழகான மலை வாசஸ்தலமான மாதேரான். இங்கு உள்ள ரோப் வே சேவை கஸ்தூரி கார் பார்க்கிங்கில் இருந்து 800 மீட்டர் உள்ள மாதோரான் மலையின் உச்சியில் சென்று ஓர் சிலிர்பூட்டும் ரோப் வே சவாரியை வழங்குகிறது.

ஆழப்புலா ரோப் வே

கேரள மாநிலம் ஆழப்புலா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ரோப் வே சேவை, இங்கு வரும் சுற்றுலா பயணிகளை இந்த பூங்கா முழுக்க சுற்றி காட்ட பயன்படுத்தப்படுகிறது. அந்தரத்தில் பறந்த படி பூங்காவின் அழகையும், ஆழப்புலாவின் அழகையும் ரசித்து மகிழ முடியும்.

பழனி ரோப் வே

தமிழ்நாட்டில் உள்ள மிக பிரபலமான கோயில்களில் ஒன்று பழனி முருகன் கோவில். இது திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மலை அடிவாரத்தில் இருந்து, மலை மீதுள்ள கோவிலுக்கு பக்தர்களை அழைத்துச் செல்வதற்காக அமைந்துள்ள ரோப் கார் சேவை, பக்தர்கள் கொடைக்கானல் மலை மற்றும் சிறுமலையின் அழகை ரசித்தவாறு பயணிக்க உதவுகிறது.

More News

    Read more about: india
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+