Search
  • Follow NativePlanet
Share
» »புதுச்சேரி போனால் எங்கெல்லாம் சாப்பிடலாம் ? இதோ உங்களுக்காக சில ஐடியாஸ்

புதுச்சேரி போனால் எங்கெல்லாம் சாப்பிடலாம் ? இதோ உங்களுக்காக சில ஐடியாஸ்

புதுச்சேரி, இந்தியாவின் ஒரு பகுதியாகவும், தமிழகத்திற்கு மிக அருகிலும் இருந்தாலும் அங்கு இன்று வரை பிரெஞ்சு கலாச்சாரமும் கலந்து தான் உள்ளது. இங்கு வெளி மாநிலத்தவர்கள், வெளிநாட்டினர் என பலரும் வருவதால் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையிலான விஷயங்கள் தான் அதிகமாக இருக்கும். புதுச்சேரியில் நாம் எந்தெந்த இடங்களுக்கு சென்றால் திருப்தியான உணவு வகைகளை சுவைக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம். புதுச்சேரி டிரிப் செல்வதற்கு முன் இந்த விஷயங்களை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

Best spots to eat and enjoy foods in Puducherry

கோரமண்டல் கஃபே

புதுச்சேரி போனால் கோரமண்டல் கஃபே செல்ல மறக்காதீர்கள். இந்தியாவின் டாப் 50 உணவகங்களில் ஒன்றாக இருக்கும் இந்த இடம் புதுச்சேரியில் சாப்பிடுவதற்கு ஏற்ற இடங்களில் ஒன்றாகும். மெனுவில் பல வித்தியாசமான உணவுகள் இடம்பிடித்திருக்கும் என்பதால் கவனமாகவே உணவை தேர்வு செய்ய வேண்டும். அந்தமான் இரால் இந்த உணவத்தில் ஸ்பெஷலான உணவுகளில் ஒன்று.

இந்தியன் கஃபே எக்ஸ்பிரஸ்

புதுச்சேரியில் உங்கள் சுற்றுலாவை இனிமையாக்க ஏற்ற இடம் இந்தியன் கஃபே எக்ஸ்பிரஸ். பிரெஞ்சு உணவு, ஃபாஸ்ட் ஃபுட், கேக், பானங்கள், இனிப்பு வகைகள் என பல விதமான உணவுகள் இங்கு கிடைக்கும். ஆன்லைனிலும் கூட இங்கு உணவுகள் ஆர்டர் செய்ய முடியும்.

Best spots to eat and enjoy foods in Puducherry

கஃபே ஓலே

கடலின் அழகை ரசித்த படியே உணவை சுவைக்க ஏற்ற இடம். நீங்க சாக்லேட் பிரியராக இருந்தால் இது உங்களுக்கான கடை தான். இங்கு கிடைக்கும் தனித்துவமான சுவை கொண்ட சாக்லேட், ஃபெர்ரெரொ ரோச்சர் மில்க் ஷேக் ஆகியவற்றை ருசிப்பதற்கே பலரும் இந்த கடையை தேடி வருவது உண்டு.

ஹோப் கஃபே

புதுச்சேரியில் அனைத்து வகையான உணவுப் பிரியர்களும் சென்று உணவு ருசிக்க ஏற்ற இடம் இது. சைவ உணவுப் பிரியர்களுக்கு ஏற்ற இடம் என்றே சொல்ல வேண்டும். இந்த உணவகத்தின் வடிவமைப்பு, ஊழியர்களின் கனிவான கவனிப்பு, உணவின் ருசி, அனைவருக்கும் கட்டுப்படியாகும் விலை அனைத்துமே மகிழ்ச்சியை அதிகரிக்க செய்வதால் பலரும் இந்த இடத்திற்கு தேடி சென்று உணவு சாப்பிட விரும்புகிறார்கள்.

இந்தியன் காபி ஹவுஸ்

மழைக்காலத்தில் இங்கு சென்றால் இன்னும் அழகாக இருக்கும். வழக்கமான உணவுகள் இல்லாமல் வித்தியாசமான தென்னிந்திய உணவுகளை ருசிக்க வேண்டும் என்றால் இந்தியன் காபி ஹவுஸ் தான் பெஸ்ட். கதம்ப பஜ்ஜி, சாம்பார் போண்டா, மசாலா பரோட்டா உள்ளிட்ட பல உணவுகள் உள்ளன. அதே போல் மதிய உணவுக்கு தயிர் சாதம் முதல், சாண்ட்விச் வரை சகலமும் உள்ளது. இரண்டு பேர் வயிறு நிறைய சாப்பிடுவதற்கு ரூ.150 முதல் ரூ.200 இருந்தாலே போதும்.

வில்லா சாந்தியின் தி ஸ்பாட்

புதுச்சேரியில் உள்ள பிரபலமான உணவகங்களில் இதுவும் ஒன்று. இது மிகவும் தனித்துவமான இடமாகும். அழகிய சூழல், சுவை, உணவு ரகங்கள் என அனைத்திலும் தனித்துவம் காட்டும் அழகான இடம். இங்கு பிரெஞ்ச், இந்தியா, ஐரோப்பா என பல நாட்டு உணவுகளும் கிடைக்கும். இங்கு தங்குவதற்கும் அறைகள் சர்வதேச ரகத்தில் உள்ளது.

ரெண்டெஸ்வஸ் கஃபே உணவகம்

நண்பர்களுடன் செல்ல சூப்பரான ஸ்பாட். அரவிந்தர் ஆசிரமத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது. லைவ் மியூசிக், பல விதமான பானங்கள் என பலவற்றையும் அனுபவிக்க முடியும். புதுச்சேரியில் உள்ள மிக பிரபலமான உணவகங்களில் இதுவும் ஒன்று. இதன் அழகிய சூழலே சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்த்து வருகிறது. இங்கு ரூஃப்டாப் ரெஸ்டாரண்டும் உள்ளதால் கடலின் அழகை ரசித்தபடியே உணவையும் சுவைக்கலாம்.

க்ரீப் இன் டச்

மேற்கத்திய உணவு பிரியங்களுக்கு மிகவும் பிடித்தமான இடம். சைவ உணவு பிரியர்களுக்கு ஏற்ற இடம் இது தான். உணவு மட்டுமல்ல குழந்தைகளை கவருவதற்கு இங்கு புத்தகங்கள், விளையாட்டு வசதிகளும் செய்துள்ளனர். சாலட், கேக், ஹாட், கோல்டு பானங்கள் இங்கு பிரபலமானவை. இங்கு பிரெஞ்ச், ஐரோப்பிய உணவுகள் தாராளமாக கிடைக்கும்.

கஃபே டெஸ் ஆர்ட்ஸ்

ருசியான அப்பம், சாண்ட்விச்களை சுவைக்க ஏற்ற இடம். வீட்டின் அமைப்பில் வடிவமைக்கப்பட்ட உணவகம் இதுவாகும். பிரெஞ்சின் பிரபலமான உணவுகள் அனைத்தும் இங்கு கிடைக்கும். கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட இந்த உணவகத்தின் வடிவமைப்பு, சூழலே பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.

More News

    Read more about: puducherry
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+