Search
  • Follow NativePlanet
Share
» »என்னது...சன்ரைஸ், சன்செட் பார்க்க சென்னையிலேயே இத்தனை இடங்கள் இருக்கா?

என்னது...சன்ரைஸ், சன்செட் பார்க்க சென்னையிலேயே இத்தனை இடங்கள் இருக்கா?

சென்னையில் எத்தனையோ இடங்களுக்கு சென்றிருப்பீர்கள். ஆனால் சன் செட், சன் ரைசின் அழகை கண்டு ரசிக்க சென்னையில் ஒன்று அல்ல. ஏழு இடங்கள் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? சென்னையில் சன் ரைஸ், சன் செட் பார்த்து மகிழ ஏற்ற இடங்கள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Chennai

மெரினா பீச்

உலகின் நீளமான கடற்கரையான மெரினா பீச், சன்ரைஸ்-சன் செட் இரண்டையும் பார்த்து மகிழ ஏற்ற இடமாகும். காலை பொழுதை அமைதியாகவும், உற்சாகமாகவும், மகிழ்ச்சியுடன் துவக்க மிகவும் ஏற்ற இடம். காலை நேரத்தில் மெல்லிதாக தெரியும் அதிகாலை சூரியனின் ஒளியில் கடல் அலைகளை ரசித்த படி வாக்கிங் செல்லும் அனுபவமே தனி சுகம் தான். காலை 5 முதல் 6 மணிக்குள் மெரினா பீச்சிற்கு சென்றால் சன் ரைசின் அழகை ரசிக்க முடியும்.

எலைட் பீச்

பெசன்ட் நகர் பீச்சில் உள்ள எலைட் பீச், சன் செட் பார்ப்பதற்கு மிகவும் ஏற்ற இடம். அமைதியாக சூரியன் மறையும் அழகை கண்டு ரசிக்க ஏற்ற இடம். மாலை நேரங்களில் ஓய்வை அனுபவிக்க அதிகமான மக்கள் இங்கு வருவதுண்டு. மாலை 5.45 முதல் 06.30 மணிக்குள் சென்றால் இங்கு சன் செட் பார்க்கலாம். ரிலாக்சாக இருந்து விட்டு வருவதற்கு மெரீனாவை விடவும் இது மிகவும் ஏற்ற இடமாகும்.

Chennai

சாந்தோம் கதேடிரல் பேசிலிகா

ஸ்பெஷலான ஒரு இடத்திற்கு சென்று சன் ரைஸ் பார்க்க வேண்டும் என்பவர்கள் இங்கு செல்லலாம். மெரினா பீச்சிற்கு மிக அருகிலேயே இது உள்ளது. மிக அமைதியான இந்த இடத்தில் வித்தியாசமான ஒரு சென்னை சூழலை அனுபவிக்க முடியும். தேவாயத்திற்கு பின்புறம் இருந்து சூரியன் உதிப்பதை பார்ப்பதே தனி அழகு தான். ஆனால் அதிகாலை வேளையில் இந்த சர்ச் மூடப்பட்டிருக்கும் என்பதால் இங்கு அந்த சமயத்தில் யாரும் செல்வதற்கு அனுமதிக்கப்படுவது கிடையாது.

செம்மொழி பூங்கா

இயற்கை பிரியர்கள் சன் செட் பார்க்க விரும்பினால் செம்மொழி பூங்காவிற்கு செல்லலாம். அழகான பூங்கா, அமைதியான இடம், அங்கு அமர்ந்து ரிலாக்சாக சன் செட்டை பார்த்து மகிழலாம். சன் செட்டை மிக அருகிலேயே பார்ப்பது போன்ற காட்சிகளை உங்களால் காண முடியும். மரக் கிளைகளுக்கு பின்னால் சென்று சூரியன் மறையும் அழகை பார்த்துக் கொண்டே இருந்தால் பொழுது போவதே தெரியாது.

கிண்டி தேசிய பூங்கா

சன்ரைஸ் பார்ப்பதற்கு என்றே தனியாக ஒரு இடத்தை இயற்கை பிரியர்களுக்காக அமைத்து தந்துள்ளது கிண்டி தேசிய பூங்கா. நகரின் எந்த இரைச்சலும் இல்லாமல், வித்தியாசமான சூழலில், அமைதியாக, இயற்கையான சூழலில் வாழும் விலங்குகளை ரசித்த படியே சன் ரைசையும் ரசிக்கலாம். காலை நேரத்தில் பறவைகளின் சத்தத்தை கேட்டபடி வாக்கிங் செல்வதே சூப்பர் அனுபவம் தான்.

மகாபலிபுரம்

சென்னைக்கு அருகில் சன் செட் பார்க்க மிகவும் ஏற்ற மற்றொரு இடம், மகாபலிபுரம். வரலாற்று சிறப்பு மிக்க கடற்கரை குகை கோவில், கடற்கரையுடன் சேர்த்து சன்செட்டையும் பார்த்து ரசிக்க முடியும். வங்கக் கடலில் சென்று சூரியன் மறையும் காட்சி மறக்க முடியாததாக இருக்கும். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அந்த அற்புதமான அனுபவத்தை பெற ஒரு முறையாவது மகாபலிபுரம் சென்று சன்செட் பார்த்து விட்டு வாருங்கள்.

பாண்டி பஜார் ரூஃப்டாப்

கடைவீதிக்கு புகழ்பெற்ழ சென்னை பாண்டி பஜாரில் சன்செட்டின் அற்புத அழகை கண்டு ரசிக்க ரூஃப்டாப் கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்களின் மேல் தளத்திற்கு சென்று பார்த்தால் சென்னை நகரின் மொத்த அழகையும் பார்க்கலாம். மக்கள் இந்த இனிய அனுபவங்களை பெறுபதற்கு பல ரூஃப்டாப் ரெஸ்டாரன்ட்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. பிடித்தமான உணவுகளை ருசித்த படியே, சன் செட்டையும் ரசிக்கலாம்.

நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் ஒன்றால் ஒரு முறையாவது இந்த இடங்களுக்கு சென்று சன் ரைஸ் மற்றும் சன் செட்டின் அழகை ரசித்து விட்டு வாருங்கள்.

More News

    Read more about: chennai
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+