Search
  • Follow NativePlanet
Share
» »கேரளாவில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள்

கேரளாவில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள்

கடவுளின் தேசம் என அனைவராலும் புகழப்படும் கேரளா, இந்தியாவில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்று. மலைகள், அழகான இயற்கை காட்சிகள், கடற்கரைகள், கோவில்கள், நினைவு சின்னங்கள், வனவிலங்குகள் சரணாலயம் என அனைத்து தரப்பினரையும் தன் வசம் ஈர்க்கும் தன்மை கொண்டது கேரளா. அந்த அளவுக்கு இங்கு சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளமாக உள்ளன. மலை வாசஸ்தலங்கள், ஆயுர்வேத சிகிச்சை, மனதுக்கு இதமான பசுமையான சூழல் என அனைத்து விதத்திலும் பிரபலமாக இருக்கும் தளங்கள் அனைத்தும் கேரளாவில் தான் உள்ளன. அப்படி கேரளா செல்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய டாப் 10 இடங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Best top 10 tourist places in Kerala

ஆலப்புழா

கொச்சியில் இருந்து 53 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆலப்புழா கேரளாவில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. இதை அலப்பி என்றும் சொல்லுவது உண்டு. கடற்கரைகள், பசுமையான வயல்கள், பழமையான கலங்கரை விளக்கம், சாகச பயணம் என பல அம்சங்கள் இங்கு உள்ளன. இங்கு உள்ள கிருஷ்ணராயபுரம் அரண்மனை அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. தேவாலயங்கள், கடல் நீர் பகுதிகள், படகு சவாரி செய்ய விரும்புபவர்கள் என அனைவருக்கும் ஏற்ற இடம்.

கொச்சி

கேரளாவின் மிக முக்கியமான பிரபலமான இடங்களில் ஒன்று கொச்சி. "கேட் வே டு கேரளா" என்று இதை அழைப்பார்கள். கேரளாவின் சிறந்து துறைமுக நகரங்களில் ஒன்று கொச்சி. அரபிக் கடலின் ராணி என்றே இது அழைக்கப்படுகிறது. இந்தியாவில் ஐரோப்பியர்களால் கட்டப்பட்ட மிகப் பழமையான தேவாலயங்கள் இங்கு உள்ளன. சுவையான மீன் உணவுகள் இங்கு தாராளமாக கிடைக்கும். கடற்கரை பிரியங்களுக்கு பிடித்த இடங்களில் இதுவும் ஒன்று.

Best top 10 tourist places in Kerala

தேக்கடி

வன உயிரினங்கள், இயற்கை ஆர்வலர்கள் என அதிகமானவர்கள் தேடி செல்லும் இடம் தேக்கடி. இயற்கையை விரும்புபவர்களின் சொர்க்க பூமியாக விளங்குகிறது தேக்கடி. வனவிலங்குகள் சரணாலயம், தேயிலை, காப்பி தோட்டம், நறுமணம் வீசும் மசாலா பயிர் தோட்டங்கள் என கேரளாவின் மழைப்பிரதேசமாக, சுற்றுலா செல்பவர்கள் அவசியம் சென்று பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக உள்ளது தேக்கடி. இங்கு படகிலேயே சென்று வனவிலங்குகளை நேரடியாக சுற்றிப் பார்க்கலாம் என்பதால் குழந்தைகளை அழைத்துச் செல்ல மிகவும் ஏற்ற இடம்.

குமரகம்

கேரளாவின் மிக முக்கியமான இடங்களில் ஒன்று குமரகம். கொச்சியில் இருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. காடுகள், பச்சை பசேல் என்ற வயல்வெளிகள், தென்னந்தோப்புகள் என கேரளாவின் மிக அழகாக கண்களை கவரும் இடங்களில் குமாரகத்தை சிறப்பு சுற்றுலா மண்டலம் என்றே சொல்லலாம். இங்குள்ள நீர்வீழ்ச்சிகள், பாரம்பரிய வரலாற்றுச் சின்னங்கள், சுவைத்து பார்க்க ருசியான உணவு என ஏராளம் உள்ளது. வீட்டு படகு சவாரி, மீன் உணவுகள் ஆகியன இங்கு அவசியம் அனுபவிக்க வேண்டியவை.

Best top 10 tourist places in Kerala

திருச்சூர்

கேரளாவின் மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருப்பது திருச்சூர். இங்குள்ள சாவக்காடு கடற்கரை, வதனப்பள்ளி கடற்கரை, பெரியம்பலம் கடற்கரை என கடற்கரைகள் ஏராளமாக உள்ளன. தங்கம், வைர நகைகளுக்கு பெயர் போனது திருச்சூர் நகரம். இந்தியாவின் மிக முக்கியமான கோவில்களில் ஒன்றாக இருக்கும் குருவாயூர் கோவில் இங்கு உள்ளது. அதனால் இங்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என வருடத்தில் அனைத்து மாதங்களும் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். கேரளாவில் விற்பனை செய்யப்படும் 70 சதவீத நகைகள் திருச்சூரில் தான் தயார் செய்யப்படுகின்றன.

பூவார் தீவு

கேரளாவில் மிக முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று. அமைதியான நீர் பரப்பு, தனித்துவமான தாவரம் மற்றும் விலங்கு உயிரினங்களை கொண்டது இந்த தீவு. திருவனந்தபுரத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கேரளாவின் மிக அழகான இடங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள தூய்மையான கடற்கரைகள், தங்கும் குடில்கள் ஆகியவை சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கக் கூடியதாய் உள்ளன. படகு சவாரி மாறி செய்ய நினைப்பவர்கள், மன அழுத்தம் தீர நினைப்பவர்கள் மணிக்கணக்கில் மேகங்களை, கடல் அலைகளை ரசித்தபடி இருக்க நினைப்பவர்கள் இங்கு அவசியம் செல்ல வேண்டும்.
தேனிலவு செய்பவர்களின் பெஸ்ட் சாய்ஸ் ஆக இந்த இடம் நிச்சயம் இருக்கும்.

மூணாறு

கேரளாவிற்கு சமீப காலமாக அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடம் மூணாறு. தமிழகத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் முதலில் தேர்வு செய்யும் சுற்றுலா தளமாக இருக்கும் மூணாறு, மூடு பனி போர்த்திய இயற்கை எழில் கொஞ்சும் பள்ளத்தாக்குகள், எண்ணற்ற நீரோடைகள், பெரிய நீர்வீழ்ச்சிகள், தேயிலைத் தோட்டங்கள், வளைந்து நெளிந்து செல்லும் அழகிய சாலைகள், இதமான சூழல் ஆகியவற்றை அனுபவிக்க ஏற்ற இடம் மூணாறு. ஆடுக்காடு நீர்வீழ்ச்சிகள், லக்கம் நீர்வீழ்ச்சிகள், நைமக்காடு நீர்வீழ்ச்சி ஆகியவற்றுக்கு சுற்றுலா பயணங்கள் அடிக்கடி வருகை தருகின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அரிய வகை தாவரமான நீல குறிஞ்சி பூக்கள் அதிகம் கிடைக்கும் இடம் இந்த மூணாறு தான்.

கோவளம்

சுற்றுலா பயணங்களை மயங்கச் செய்யும் கடல் பரப்பு கொண்டது கோவளம் கடற்கரை. திருவனந்தபுரத்திலிருந்து வெறும் 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோவில்கள், சூரிய அஸ்தமன காட்சிகளுக்கு புகழ்பெற்ற இடமாக இருக்கிறது. யோகா பயிற்சி, உணவு வகைகள், புகைப்படங்கள் எடுத்து மகிழ, கலைக்கூடங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றை ரசித்து மகிழ ஏற்ற இடம். கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் கடற்கரை என்றாலும் மனதை மயக்கும் காட்சிகளை நிறைய கண்ட அனுபவிக்கலாம் .

திருவனந்தபுரம்

கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரம் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று. கடற்கரைகள், உலகிலேயே அதிக சொத்து மதிப்புடையதாக சொல்லப்படும் புகழ்பெற்ற பத்மநாபசாமி கோவில் ஆகியவை அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள். இங்குள்ள அருங்காட்சியகத்தில் அரசு குடும்பத்தின் மதிப்புமிக்க பொருட்கள் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சிற்பங்கள், கோவில்கள், புத்த சிற்பங்கள், தந்த சிற்பங்கள், கேரளாவில் புகழ் பெற்ற கோவிலான குருவாயூர் கோவிலின் மரத்தால் செய்யப்பட்ட மாதிரி வடிவம் என பார்க்க பார்க்க ஆசையை தூண்டும் இடமாக இருப்பது திருவனந்தபுரம்.

கோழிக்கோடு

இந்தியாவில் வாஸ்கோடகாமா முதல் முதலில் காலடி எடுத்து வைத்த இடமாக சொல்லப்படுவது இங்கு தான். கேரளாவின் துறைமுக நகரங்களில் இதுவும் ஒன்று. வரலாற்று ரீதியாகவும், வணிக ரீதியாகவும் இது முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகிறது. கடற்கரைகள், கிராமப் பகுதிகள், வனவிலங்கு சரணாலயங்கள், அருங்காட்சியகங்கள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் ஆகியவை அனைவரையும் கவரக் கூடியவை. தேங்காய், மிளகு, ரப்பர், காப்பி, எலுமிச்சை எண்ணெய், முந்திரி ஆகியவற்றிற்கு புகழ்பெற்ற இடமாக விளங்குகிறது. கடற்கரையில் ஓய்வெடுக்க, அமைதியாக பொழுதை கழிக்க, அழகான சூரிய உதயம், சூர்யா அஸ்தமனத்தை கண்டு ரசிக்க ஏற்ற இடமாக கோழிக்கோடு உள்ளது.

More News

Read more about: kerala tourism
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+