Search
  • Follow NativePlanet
Share
» »செலவு பட்ஜெட்டிற்குள்...சந்தோஷம் அளவில்லாமல்...2025ல் ஹனிமூன் செல்ல ஏற்ற இந்திய நகரங்கள்

செலவு பட்ஜெட்டிற்குள்...சந்தோஷம் அளவில்லாமல்...2025ல் ஹனிமூன் செல்ல ஏற்ற இந்திய நகரங்கள்

ஹனிமூன் செல்ல ஒரு ஊர் தேவை.. சிம்பிளான ஊராக இருக்க வேண்டும். அதே சமயம் ரம்மியமானதாகவும் இருக்க வேண்டும். பட்ஜெட்டும் ரொம்பப் போய் விடக் கூடாது. அப்படி ஒரு ஊர் இருக்கான்னு நிறைய பேர் கேட்பார்கள். இந்தியாவில் அப்படிப்பட்ட ஊர்களுக்கா பஞ்சம்? வெறும் பத்தாயிரம் ரூபாய் இருந்தால் போதும். சூப்பராக உங்களது தேனிலவைக் கொண்டாடலாம். இந்தியாவில் ஏகப்பட்ட ஊர்கள் இப்படி உண்டு. அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

Honeymoon

மூணாறு

கேரள மாநிலம் மூணாறு அழகான ஒரு மலை நகரம். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மூணாறு, ஆங்கிலேயர் காலத்தில் தான் ஓய்வு தலமாக கண்டறியப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்தது. இன்று அது நகரமாக மாறிக் காணப்படுகிறது. அருமையான மலைத் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள் நிரம்பிய மூணாறு பட்ஜெட் போட்டு ஹனிமூனுக்குத் திட்டமிடுவோருக்கு உகந்த குளிர் பிரதேசமாகும்.

ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இயற்கை எழில் கொஞ்சும் நகரங்களில் ஸ்ரீநகரும் ஒன்று. ரொம்பவும் செலவு வைக்காமல், சிம்பிளாகவும், அதேசமயம், அற்புதமான அனுபவத்தையும் பெற ஸ்ரீநகர் உகந்த இடம். இங்குள்ள தால் ஏரி மிகப் பிரபலமான ஒரு சுற்றுலாத் தலமாகும். இதில் படகு சவாரி செய்வது, படகு இல்லங்களில் தங்கி ஹனிமூனை அனுபவிப்பது புதிதாக திருமணமான தம்பதிகளை குதூகலிக்க வைக்கும்.

Udaipur

உதய்ப்பூர்

ராஜஸ்தானில் உள்ள அழகிய ஊர்களில் ஒன்று இந்த உதய்ப்பூர். அருமையான லொக்கேஷன். பாரம்பரியம் மிக்க இந்த ஊருக்கு ஹனிமூன் செல்லத் திட்டமிட்டால் பத்தாயிரம் பட்ஜெட் தாராளமாக போதும். இங்குள்ள ஏரிகள், அரண்மனைகள் ஆகியவை ஜாலியாக ஊர் சுற்ற, தனிமையை நன்கு அனுபவிக்க ஏற்ற இடமாகும்.

ஊட்டி

மலைகளின் ராணி என்று சொல்லப்படும் ஊட்டி, புதுமணத் தம்பதியர் தங்களது புது வாழ்க்கையை ஜம்மென்று தொடங்க அருமையான சாய்ஸ். ரொம்பவும் செலவு வைக்காது. அக்கம் பக்கத்தில் சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் உண்டு. பத்தாயிரம் பட்ஜெட்டுக்கு சென்று வர ஏற்ற இடம் தான் ஊட்டி. இங்கு குளுமை, இயற்கை அழகு ஆகியவை புரிதலை, காதலை அதிகரிக்க செய்யும்.

Shimla

சிம்லா

இமாச்சல் பிரதேசம் என்றால் சிம்லா தான் ஸ்பெஷல். சிம்லா என்றால் புதுமணத் தம்பதியினரின் சொர்க்க பூமி என்பது தான் ஸ்பெஷல். சிம்பிளான, அதேசமயம், பனி படர்ந்த சிம்லாவின் அழகை அள்ளிப் பருக புதுமணத் தம்பதிகள் இங்கு செல்வதற்கு ஆசைப்படுவார்கள். இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்றே இதை சொல்லலாம்.

மெளன்ட் அபு

ராஜஸ்தான் மாநிலம் ஆரவல்லி மலைத் தொடரில் அமைந்துள்ள அற்புதமான இடம் தான் இந்த மெளன்ட் அபு. குஜராத் எல்லைக்கு அருகில் உள்ள இந்த ஊர், புதுமணத் தம்பதியருக்கு உகந்த ஒரு அருமையான மலை வாசஸ்தலமாகும். இங்குள்ள அமைதி, மனதிற்குள் புதிய உணர்வுகளை ஊற்றெடுக்க வைக்கும்.

மனாலி, இமாச்சல் பிரதேசம்

மனாலி தான் புதுமணத் தம்பதியனரின் முதல் ஹனி மூன் சாய்ஸ். காதலர்களுக்கும், புதிதாக திருமணமானவர்களுக்கும் உகந்த இடம் இது. 3 இரவு, 4 பகல்களை இங்கு கழிக்க பத்தாயிரம் ரூபாய் போதுமானது. பட்ஜெட்டுக்குள் ஹனிமூன் டிரிப்பை என்ஜாய் செய்ய வைக்கும் மலை வாசஸ்தலம் இது.

தவாங், அருணாச்சல் பிரதேசம்

நான்கு நாட்கள் இங்கு செலவழிக்க பத்தாயிரம் ரூபாய் போதுமானது. சிம்பிளான ஊர், அழகானதும் கூட, ரம்மியமான மன நிலையில் புது மணத் தம்பதியருக்கு புது அனுபவத்தை கொடுக்கக் கூடிய ஊரும் கூட.

கோவா

ஹனிமூனுக்கு போக வேண்டிய அருமையான ஊர்களில் கோவாவுக்குத் தனி இடம் உண்டு. எழில் கொஞ்சும் கடற்கரையுடன் கூடிய கோவா அழகன பிரதேசமும் கூட. புதிதாக திருமணமான தம்பதியர் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் என்ஜாய் செய்யக் கூடிய ஊர்களில் கோவாவும் ஒன்று.

ஆலப்புழா

கேரளாவின் ஆலப்புழாவைப் போன்ற ஒரு அழகான பகுதி புதுமணத் தம்பதியருக்குக் கிடைக்காது. அழகான பேக் வாட்டர் புடை சூழ, படகு இல்லத்தில் தங்கியும், படகு சவாரி செய்தும் அனுபவித்து மகிழ முடியும். பத்தாயிரம் பட்ஜெட்டில் தாராளமாக ஆலப்பியில் உங்களது ஹனிமூனைக் கொண்டாடலாம்.

More News

    Read more about: honeymoon
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+