Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களுருவில் பட்ஜெட் ஷாப்பிங் செய்ய சிறந்த ஐந்து இடங்கள்

பெங்களுருவில் பட்ஜெட் ஷாப்பிங் செய்ய சிறந்த ஐந்து இடங்கள்

பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள், விலை அதிகமான ப்ரண்டெட் கடைகள் , சாதாரணமா வாழவே ரொம்ப செலவு பிடிக்கும் நகரம்னு பிம்பங்கள் இருந்தாலும் இன்னமும் சாமானியனையும் அரவணைச்சு சந்தோசமா வாழ வைக்கிற, எல்லோருக்குமான நகரம் தான் பெங்களுரு. எப்படி சூரியன் இல்லாம சோலார் சிஸ்டம் இல்லையோ அப்படிதான் இந்தியாவுல ஷாப்பிங் இல்லாம பண்டிகைகளும். நம்மில்ல பல பேருக்கு ஷாப்பிங்க நினைச்சாலே பர்ஸ் அபாய சங்கை ஊத ஆரம்பிச்சுடும். அப்படி நடக்காம நிம்மதியா மனசுக்கு விருப்பப்பட்டத பெங்களூருல எங்க வாங்கலாம்?. வாங்க தெரிஞ்சுக்கலாம்.

சிக்பேட்:

புகைப்படம்: Ilias Bartolini

ஜவுளி கடைகளால நிரம்பி வழியும் இந்த சிக்பேட்டில் கிடைக்காத துணி வகையே இல்லை. அதிலும் பெண்களுக்கான சீலை வகைகளுக்கு மிகவும் பிரபலமானது. கர்நாடகாவில் மற்ற இடங்களில் இருக்கும் சிறிய துணிக்கடைகளுக்கு இங்கிருந்துதான் மொத்தமாக சரக்குகள் செல்வதால் கொஞ்சம் குறைந்த விலைக்கே நல்ல துணி எடுக்கலாம்.

பி.கு ஆசையாய் துணி எடுத்துட்டு போய் விலை கம்மிதான் செல்லம்னு சொன்னா அப்போ இன்னும் இரண்டு எடுத்துட்டு வர வேண்டியது தானே என்று கேட்கும் மனைவி உள்ள கணவன்மார்கள் ஜாக்கிரத்தை.


பிரிகேட் ரோடு:

புகைப்படம்: Charles Haynes

எங்கு திரும்பினாலும் இருக்கும் ப்ரண்டெட் கடைகள், வெளிநாட்டு உணவகங்கள் இருந்தாலும் அதற்கு நிகராக சிறிய கடைகளும் இங்கே அதிகம். செலவு செய்யலாம் ஆனாலும் ரொம்ப முடியாது என்று யோசிப்பவர்களுக்கான இடம் இது. இங்கிருக்கும் 'தி திபத்தியன் பிளாசா' பேரம் பேசி வாங்க தெரிந்தவர்களுக்கான ஆடுக்களம். துணி வகைகள், காலணிகள் மற்றும் அலங்காரப்பொருட்கள் பேரம் பேசி கம்மி விலையில் இங்கே வாங்கலாம். நீங்கள் இங்கே ஷாப்பிங் செய்தது களைத்து போகாமல் இருந்தால் சரி.


வர்த்தகத்தெரு (Commercial Street):

புகைப்படம்: Saad Faruque

இந்த இடத்திற்கு இந்தியா முழுக்க இருந்தும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் ஷாப்பிங் செய்ய குவிகின்றனர். கலைநயம் மிக்க கைவினை பொருட்கள், வேலைப்பாடு மிகுந்த தங்க, வெள்ளி நகைகள், கல்யாணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க தகுந்த இடம் இது. பழங்கால பொருட்கள் சேகரிப்பவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் பல கடைகள் இங்கே உண்டு. புதிதாக வருபவர்கள் எங்கே இருக்கிறோம் என்று குலம்பிபோய்விடும் அளவிற்க்கு குறுக்கும் நெடுக்குமாக நீளும் இந்த தெரு விழாக்கங்களில் களைகட்டும்.


ஜெயா நகர் 4 பிளாக்:

புகைப்படம்: screaming monkey

பெரிய பெரிய கடைகளில் எல்லாம் கிடைக்காத விதவிதமான தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள் இங்கிருக்கும் சாலையோர கடைகளில் நமக்கு கிடைக்கும். பெண்களுக்கு தேவையான சின்ன சின்ன அலங்காரப்பொருட்கள் முதல் வீட்டிற்க்கு தேவையான பர்னிச்சர் வரை குறைந்த விலையில் வாங்கலாம். பூஜை செய்ய தேவையான பூக்கள் முதல் பழங்கள் வரை இங்கே இருக்கும் கடைகளில் நியாயமான விலைக்கு வாங்க முடிகிறது. மாலை நேரங்களில் இங்கே கிடைக்கும் சுவையான உணவுகளும் வெகு பிரபலம்.

மரத்தஹல்லி:

புகைப்படம்: Ashwin Kumar

பெங்களுருவுக்கு சற்று வெளியே தள்ளி அமைந்திருக்கும் இங்கு பிராண்டெட் பொருட்கள் மிக குறைந்த விலைக்கு விற்கும் கடைகள் நிறைய உள்ளன. எலெக்ட்ரானிக் பொருட்கள், சோபாக்கள் மற்றும் அலங்கார விளக்குகள் போன்றவை இங்கே இருக்கும் கடைகளில் கிடைக்கின்றன. இது தவிர ஷாப்பிங் முடித்து விட்டு பொழுது போக்க திரையரங்குகள், உணவகங்கள், குழந்தைகளுக்கான கேளிக்கை விளையாட்டு மையங்கள் போன்றவை இங்கே அதிகம். முக்கியமாக பெங்களுரு நகர வாகன நெரிசலை வெறுப்பவர்கள் மரத்தஹல்லி சென்று கவலையில்லாமல் பொருட்களை வாங்கி வரலாம்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+