Search
  • Follow NativePlanet
Share
» »இதை செய்ய தில் இருக்கா உங்களுக்கு?

இதை செய்ய தில் இருக்கா உங்களுக்கு?

இதை செய்ய தில் இருக்கா உங்களுக்கு?

இளைய தளபதி விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் என்றால் அது 'குஷி' தான். எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் ஜோதிகா, விஜயகுமார் நடிப்பில் வெளியாகி சக்க போடு போட்ட இந்த படத்தில் வரும் 'மொட்டு ஒன்று மலர்ந்திட' பாட்டும் அதிரி புதிரி ஹிட்.

Photo: Imrankannu93

ஆஸ்த்ரேலியா, நியுசிலாந்து நாடுகளில் படமாக்கப்பட்ட இந்த பாடலில் விஜய் ஒரு பாலத்தில் இருந்து கால்களில் கயிற்றை கட்டியபடி குதிக்கும் காட்சி நம்மால் மறக்க முடியாத ஒன்றாகும். 'பங்கீ ஜம்ப்' எனப்படும் நெஞ்சை உறைய வைக்கும் இந்த சாகச விளையாட்டு தற்போது இந்தியாவிலும் அறிமுகமாகி உள்ளது. வாருங்கள், இந்த விளையாட்டு எங்கெங்கே உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.

ரிஷிகேஷ்:

ஆன்மீக ஸ்தலமாகவே அறியப்பட்டு வந்த ரிஷிகேஷ் சில காலமாக சாகச விளையாட்டுகள் அதிகம் நடைபெறும் இடமாகவும் புகழ் பெற்று வருகிறது. ஏற்கனவே இங்கு சாகச படகு சவாரி மிக பிரபலம், அதற்க்கு ஈடு கொடுக்கும் வகையில் இப்போது பங்கீ ஜம்ப் விளையாட்டும் இங்கே சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது. 'ஜம்பிங் ஹைட்ஸ்' என்ற நிறுவனத்தால் இங்கு பங்கீ ஜம்ப் விளையாட்டு நடத்தப்படுகிறது.

Photo: Julie Facine

ஒருமுறை குதிக்க 2500 ரூபாய் என்றாலும் மரண பயத்தை பக்கத்தில் போய் பார்த்துவர தாரளமாக இவ்வளவு ரூபாய் கொடுக்கலாம். ஒரு பாறை முகட்டில் தரையில் இருந்து 83 அடி உயரத்தில் குதிக்கும் மேடை அமைந்திருக்கிறது. இந்தியாவிலேயே மிக அதிக உயரத்தில் குதிக்கும் மேடை அமைந்திருக்கும் இடமும் இதுவே.

பெங்களூர்:

Photo: Jeremy Keith

ஓசோன் குழும நிறுவனத்தால் பெங்களுருவில் நடத்தப்படும் பங்கீ ஜம்ப் மிகப்பிரபலமாகும். தரையில் இருந்து 80அடிக்கு மேற்பட்ட உயரத்தில் கிரேன் ஒன்றின் உதவியுடன் இந்த விளையாட்டு நடத்தப்படுகிறது. குதிப்பவர்களுக்கு உலகத்தரமான பாதுகாப்பு வசதிகள் செய்திருப்பது இந்த இடத்தின் சிறப்பு.

தில்லி:

வட இந்தியாவில் பங்கீ ஜம்பிங் செய்ய நினைத்தால் தலைநகர் தில்லியில் வண்டேர்லஸ்ட் நிறுவனத்தால் நடத்தப்படும் பங்கீ ஜம்பிங் மட்டுமே உங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பாகும்.

Photo: Manish Chauhan

இந்த வண்டேர்லஸ்ட் பங்கீ ஜம்பிங் நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களும் ஜெர்மெனி நாட்டில் பயிற்சி பெற்றவர்கள் என்பதோடு மட்டுமில்லாமல் இந்த விளையாட்டுக்குரிய உபகரணங்களும் ஜெர்மெனியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. 14-50 வயதுக்கு உட்பட்ட அனைவரும் இந்த சாகச விளையாட்டில் ஈடுபடலாம்.

கோவா:

கேளிக்கை, கொண்டாட்டங்களின் தலைநகரான கோவாவில் உள்ள அஞ்சுனா கடற்கரையில் கிராவிட்டி ஜோன் என்ற நிறுவனத்தால் பங்கீ ஜம்பிங் விளையாட்டு நடத்தப்படுகிறது. வெறும் 25 மீட்டர் உயரத்தில் இங்கு குதிக்கும் மேடை உள்ளதால் முதல் முறை இந்த விளையாட்டை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு தகுந்த இடம் இது. நண்பர்களுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டபடியே இந்த பங்கீ ஜம்பிங் விளையாட்டையும் தில் இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

லோனாவ்லா, மகாராஷ்டிரா:

Photo: Della Adventure

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலங்களுள் ஒன்றான லோனவ்லாவில் இருக்கும் டெல்லா அட்வென்ச்சர்ஸ் என்ற கேளிக்கை பூங்காவில் இந்த பங்கீ ஜம்பிங் விளையாட்டு இடம் பெற்றுள்ளது. 45 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குதிக்கும் மேடையில் இருந்து நாம் குதிக்கலாம். 1500ரூபாய் கட்டணம் செலுத்தினால் 4-5 நிமிடங்கள் வரை அந்தரத்தில் தலைகீழாய் மிதக்கலாம்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+