Search
  • Follow NativePlanet
Share
» »பாரிஸ் டூர் போனால் செலவே இல்லாமல் இத்தனை இடங்களை பார்க்க முடியுமா?

பாரிஸ் டூர் போனால் செலவே இல்லாமல் இத்தனை இடங்களை பார்க்க முடியுமா?

ஐரோப்பாவின் கனவு நகரம் பாரிஸ். இது கலாச்சாரம், கலை, வரலாறு, மற்றும் இயற்கையின் தனிச்சிறப்புகளை ஒரு சேரக் கொண்டிருக்கும் ஒரு நகரமாகும். இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் எவ்வளவோ இருந்தாலும் அத்தனையையும் சென்று பார்ப்பதற்கு நம்முடைய பட்ஜெட் தாங்க வேண்டுமே? காஸ்ட்லி நகரமான பாரிசுக்கு சென்றாலும் குறைந்த செயலவில் எந்தெந்த இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்க்கலாம் என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

Paris

1. லூவ்ரே மியூசியம்

உலகின் மிகப்பெரிய மற்றும் புகழ்பெற்ற கலை அருங்காட்சியகமாக விளங்கும் லூவ்ரே, பாரிஸ் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதில் உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தோடு, ஆயிரக்கணக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த அருங்காட்சியகத்தின் கிளாசிக் மற்றும் நவீன கட்டிடக்கலையின் சேர்க்கை பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

2. டியூலரீஸ் தோட்டம்

லூவ்ரேன் அருகிலேயே டியூலரீஸ் தோட்டம் அமைந்துள்ளது. பிரெஞ்சு அரச குடும்பத்திற்காக உருவாக்கப்பட்ட இத்தோட்டம், தற்போது பொது மக்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. அழகிய பூந்தோட்டமாக விளங்குகிறது. இங்கு பசுமைமிக்க வழிச்சாலைகள், நீரூற்றுகள், சிற்பங்கள் என மனதிற்கு இதம் தரும் இடமாக உள்ளது.

3. நோட்ரே டேம் கதீட்ரல்

கோதிக் கட்டிடக்கலையின் உயரிய எடுத்துக்காட்டு என்று சொல்லக்கூடியது நோட்ரே டேம் பேராலயம். இங்கு காணப்படும் சாளரக்கலையும், சிற்பக்கலையும் பார்வையாளர்களை மெய்மறக்க செய்கிறது. பெருந்தீ விபத்துக்குப் பிறகும், அதன் சீரமைப்பு வேலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

Paris

4. சியன்னா ஆறு

பாரிஸ் நகரத்தைக் கடந்து செல்லும் சியன்னா ஆறு, நகரத்தின் முக்கிய புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாகும். இந்த ஆற்றின் ஓரங்களில் நடந்து செல்வதும், படகு சவாரி செய்வதும் பாரிஸ் பயணத்தின் ஒரு மறக்க முடியாத அனுபவமாகும்.

5. ஈபிள் டவர்

பாரிஸின் அடையாளமாக விளங்கும் ஈபிள் டவர், ஒவ்வொரு சுற்றுலா பயணியும் கட்டாயமாக பார்வையிட வேண்டிய இடமாகும். இரவில் மின்னும் ஒளி விளக்குகளால் இது ஒரு அற்புதமான காட்சியாக மாறும்.

6. பெரே லாச்சைஸ் கல்லறை

இந்த கல்லறை வெறும் ஓர் அடக்கம் செய்யப்படும் இடம் மட்டுமல்ல. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பலரை நினைவுகூறும் ஒரு அமைப்பாக உள்ளது. இசை கலைஞர் ஜிம் மொரிசன், எழுத்தாளர் ஆஸ்கார் வைல்ட் போன்ற புகழ்பெற்றவர்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

7. மான்ட்மார்ட்ரே

புகழ்பெற்ற சக்கர் குர் பேராலயம் அமைந்துள்ள மான்ட்மார்ட்ரே, பாரிஸ் நகரின் கலை மற்றும் சுதந்திர உணர்வை பிரதிபலிக்கும் ஒரு பகுதியாகும். மான்ட்மார்ட்ரே தெருக்களில் நடந்து செல்வது, ஒரு சுய சிந்தனைக்கு வழிவகுக்கும் அனுபவமாகும்.

8.லெ மரைஸ்

பழமையான கட்டிடங்கள், சிறிய உணவகங்கள், கலைக்கூடங்கள் என பாரிஸின் கலாச்சார ருசியை உணர விரும்பினால் லெ மரைஸ் பகுதி சிறந்த இடமாகும். இது நகரத்தின் பழமையான மற்றும் புதுமையான கலாச்சாரங்களை இணைக்கும் ஒரு பாலமாக திகழ்கிறது.

9. சாம்ப்ஸ்-எலிசீஸ்

இந்தப் பிரபலமான தெரு உலகின் மிகச்சிறந்த வணிக வீதிகளில் ஒன்றாக உள்ளது. உயர்நிலை ஷாப்பிங் ஸ்டோர்கள், உணவகங்கள் மற்றும் புகழ்பெற்ற அர்க்-ட்ரையம்ப் நினைவுச்சின்னம் உள்ளதால் இது பார்வையாளர்களை ஈர்க்கும் ஒரு முக்கிய இடமாக திகழ்கிறது.

பாரிஸ் ஒரு நகரம் மட்டும் அல்ல; அது ஒரு அனுபவம்! இங்கு வரும் ஒவ்வொருவரும் தனித்துவமான நினைவுகளைச் சேர்த்துச் செல்ல முடியும். கலையும், வரலாறும், இயற்கையும், பாரிஸ் நகரத்தை உலகின் மிக அழகான நகரமாக மாற்றியிருக்கின்றன.

More News

    Read more about: paris world trip world tour
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+