Search
  • Follow NativePlanet
Share
» »தியோகர் Vs தியோகர் - ஒரே பேர்ல ரெண்டு ஊரா? இன்னும் என்னென்ன ஆச்சர்யங்கள்லாம் இருக்கு பாருங்க!

தியோகர் Vs தியோகர் - ஒரே பேர்ல ரெண்டு ஊரா? இன்னும் என்னென்ன ஆச்சர்யங்கள்லாம் இருக்கு பாருங்க!

தியோகர் Vs தியோகர் - ஒரே பேர்ல ரெண்டு ஊரா? இன்னும் என்னென்ன ஆச்சர்யங்கள்லாம் இருக்கு பாருங்க!

தியோகர் எங்க இருக்கு தெரியுமா? உடனே கூகுள்ல தேடி இது உபில இருக்குனு சொல்லிடுவீங்க.. இன்னும் சிலர் ஜார்க்கண்ட்ல இருக்குப்பா இதுனு சொல்வீங்க.. ஆமா ரெண்டு மாநிலத்துலயும் வேற வேற ஊர் ஒரே பேர்ல இருக்கு... அத பத்தி தெரிஞ்சிக்கணுமா? பாருங்க.. முழுவதும்...

கிராமம்

கிராமம்

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிக முக்கிய ஆன்மீகத் தலங்களுள் ஒன்றாக தியோகார் என்ற சிறிய கிராமம் விளங்கி வருகிறது. உத்திரப்பிரதேசத்தில் அமைந்திருக்கும் மிகச் சிறிய விவசாயக் கிராமமான தியோகார் முந்தைய குவாலியர் அரசின், தற்போதைய மத்தியப்பிரதேச மாநிலத்தின் எல்லைக்கு அருகில் அமைந்திருக்கிறது.

வரலாறு

வரலாறு

தியாகார் பண்டைய குப்தர்களின் வராற்றுச் சின்னமாக விளங்கி வருகிறது. இந்த பகுதியில் குப்த மன்னர்களின் நினைவிடங்கள் பலவற்றைப் பார்க்க முடியும். மேலும் பெட்வா ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கும் குப்த மன்னர்களின் அரண்மனை, இந்த அரண்மனைக்குள் அமைந்திருக்கும் ஜெயின் மற்றும் இந்து சமய மக்களின் நினைவிடங்கள் ஆகியவை பக்தர்களுக்கு புதிய இன்பத்தைத் தரும்.

AmanANAND731992

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

தியோகாரைச் சுற்றியுள்ள முக்கியச் சுற்றுலாத் தலங்கள் முக்கால்வாசி பண்டையை நினைவிடங்கள் மற்றும் கோயில்கள் ஆகும். குறிப்பாக பண்டைய காலத்தில் வடஇந்தியாவில் பஞ்சயத்தனா கோயில் என்று அழைக்கப்பட தசவதாரா கோயில் இந்த பகுதியில்தான் அமைந்திருக்கிறது. இந்த கோயில் ஏறக்குறைய முற்றிலும் அழிந்து போகும் தருவாயில் இருந்தாலும், இந்த கோயிலில் உள்ள கங்கா மற்றும் யமுனா தெய்வங்களின் சிற்பங்கள், பக்தர்களுக்கு முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன.

Bob King

தியோகார் கோட்டை

தியோகார் கோட்டை

தியோகாரின் அடையாளமாக கருதப்படுவது தியோகார் கோட்டை ஆகும். இந்த கோட்டை கீர்த்திகிரிதுர்கா கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இது 1057 ஆம் ஆண்டு சண்டாள அரசரான கீர்த்தவர்மன் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோட்டைக்கு அருகில் பல அழகிய ஜெயின் கோயில்கள் அமைந்துள்ளன. இவை அனைத்தும் 8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். தியோகார் இங்கு பாயும் பெட்வா ஆற்றுக்குச் செல்லும் கணவாயாக இருந்து வருகிறது.

jess n

எப்போது எப்படி செல்வது

எப்போது எப்படி செல்வது

தியோகரில் இருக்கும் அகழ்வாராய்ச்சிக் கலைக்கூடம் பார்ப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருப்போருக்கு இந்த கலைக்கூடம் உண்மையிலேயே உற்சாகத்தைத் தரும்.

தியோகாருக்கு எவ்வாறு செல்வது?

விமானம், தொடர்வண்டி மற்றும் பேருந்து மூலம் தியோகாருக்கு மிக எளிதாகச் செல்ல முடியும. தியோகாருக்கு மிக அருகில் லலித்பூர் என்ற இடத்தில் ஒரு தொடர்வண்டி நிலையம் உள்ளது. அதுபோல் தியோகாருக்கு அருகில் உள்ள குவாலியரில் ஒரு விமான நிலையமும் அமைந்திருக்கிறது. தியோகாருக்குச் செல்ல தகுந்த காலம் ஆண்டு இறுதியில் தியோகாருக்குச் சென்று வந்தால் அது சிறப்பாக இருக்கும்.

அட என்னங்க ஒரு தியோகர பத்தி சொன்னீங்க.. இன்னொரு தியோகர் என்னாச்சுனு கேக்குறீங்களா.. இன்னொரு தியோகர் பத்தி தெரிஞ்சிக்க இத கிளிக் பண்ணுங்க.

Ed Sentner

More News

    Read more about: uttar pradesh
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+