Search
  • Follow NativePlanet
Share
» »என்னது ரூ.600ல் கோவா போலாம்?

என்னது ரூ.600ல் கோவா போலாம்?

"டேய் மச்சான் இந்த வருசமாச்சும் கோவா போயே ஆகனும்டா"ன்னு, நம்மில் பெரும்பாலான இளைஞர்கள் சிறு வயதில் இருந்தே கோவா டூர் போகனும் என்று வருடம் தவறாமல் முடிவெடுத்து, பல ஆண்டுகள் கடந்தும் அந்த முடிவு வெறும் சொல்லாகவே இன்று வரை இருக்கும்.

அப்படி பல திட்டங்கள் தீட்டி இன்று வரை நிறைவேற்றாமல் இருக்கும் இளைஞரா நீங்க, அப்படின்னா இந்த கட்டுரை உங்களுக்கு தான். வெறும் ரூ.600 கட்டணத்தில் ஒரு டிரிப்ல உங்க வாழ் கனவை நிறைவேற்றி விடலாம் வாங்க...!

ஹலோ... காமெடி பண்ணுறீங்களா..! என்று நீங்க கேட்பது புரிகிறது. உங்களுக்கு தெரியாதா... ஒரு இடத்துக்கு சுற்றுலா போகனும் என்று முடிவெடுத்தால், அந்த இடத்தை ரீச் பண்ண தான் நமக்கு ஒரு தொகை தேவைப்படும். உங்க கனவை வெறும் ரூ.600ல் நினைவாக்கலாம் என்றதும், அது எப்படி இவனுக்கு வெயிலில் மேல் பகுதி பிரச்னையா என்று எல்லாம் நீங்க நினைத்து இருப்பீங்க. அது பரவாயில்லை விடுங்க.

goa trip cost

முதலிலேயே சொல்லவில்லை. ஒரு இடத்தை ரீச் பண்ண தான் நாம் தேர்வு செய்யும் வழி, அதற்கு ஆகும் செலவு. சரி நீங்க கோவா போகனும் என்று முடிவு எடுத்துட்டீங்கனா... அந்த இடத்தை ரீச் பண்ண ரூ.600 போதும்.

எப்படி போவது

கோவா என்பது இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில், கொங்கண் மண்டலத்தில் உள்ள ஒரு மாநிலமாகும். புவியியல் ரீதியாக தக்காண பீட பூமியிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளால் பிரிக்கப்பட்ட இது வடக்கில் மகாராஷ்டிரா, கிழக்கு மற்றும் தெற்கில் கர்நாடகம் ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ள மாநிலம் ஆகும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், அண்டை நாடுகள் மட்டுமின்றி உலகளவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பொது முடக்கத்துக்கு பின், வழக்கம் போல சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், 4.03 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இது, முந்தைய ஆண்டுகளை விட, 130.29 சதவீதம் அதிகம் ஆகும்.

goa trip at low budget travel

நோட் பண்ணுங்க

சரி விஷயத்துக்கு வருவோம். அதாவது தென் மாவட்டமான திருநெல்வேலியில் இருந்து வாரத்தில் புதன்கிழமை தோறும் தாதர் நோக்கி, திருநெல்வேலி-தாதர் அதிவிரைவு ரயில்(22630) செல்கிறது.

இந்த ரயிலில், ரூ.615 செலுத்தி படுக்கை வசதி புக் செய்யுங்க... காலை 7:20 மணிக்கு புறப்படும் இந்த ரயிலில் போகும் போது, ஏராளமான குகை, மலை என, கோவா போகும் முன்பே ஒரு குட்டி சொர்க்கத்தை பார்க்க முடியும்.

அலுப்பே தெரியாம ஒரு நாள் படுத்து கொண்டே, அழகை ரசித்தவாறே பயணம் செய்யும் நீங்க மறு நாள் அதிகாலை 5:30 மணிக்கு திவிம் என்ற ரயில் நிலையம் வந்ததும் இறங்கிவிட வேண்டும்.

கோவாவின் வட பகுதியான அங்கிருந்து வெறும் 60 ரூபாயில், பாகா கடற்கரைக்கு பஸ் பயணம் செய்தால் நீங்க அங்க போயிடலாம். அது மட்டுமில்லை... 500 ரூபாய் கட்டணத்தில் ஏசி வசதியுடன் அந்த பகுதியில் தங்குமிடமும் இருக்கும். மறக்காதீங்க... தெற்கு கோவாவை விட, வடக்கு கோவாவில் தான் தங்குமிடம் என, பல விஷயங்கள் உங்க பட்ஜெட்க்குள் வரும்.

அதுமட்டுமில்லாமல், நீங்க போக வேண்டிய பகுதிகளுக்கு ஒரு டூவீலரை நாள் வாடகைக்கு எடுத்தீங்கனா... நீங்க கோவாவை ஒரு ரவுண்ட் சுற்றிவிட்டு, உங்க கனவையும், வெளிநாட்டு கனவு கன்னியையும் பார்த்துவிடலாம் யூத்ஸ்...!

ரைட்டு நீங்க ரெடியாகிட்டீங்க போல... நானும் இதுவரை கோவா போல... நானும் போகலாம்னு நினைக்கிறேன். சரி நானும் டிக்கெட் புக் பண்ண ரெடி...!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+