Search
  • Follow NativePlanet
Share
» »குட்டியாக இருந்தாலும் க்யூட்டாக இருக்கும் இந்தியாவின் சிறிய 8 விமான நிலையங்கள்

குட்டியாக இருந்தாலும் க்யூட்டாக இருக்கும் இந்தியாவின் சிறிய 8 விமான நிலையங்கள்

ஒரு சிறிய விமான நிலையத்தில் குறைவான வாயில்கள் கொண்ட இடத்தில் மிக குறைந்த கூட்ட நெரிசலில் புறப்படும் மற்றும் தரையிறங்கும் விமானங்களை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இந்த அழகான வேடிக்கையான அனுபவத்திற்கு மேலும் வலுசேர்ப்பது இந்த விமான நிலையங்களின் அழகிய சுற்றுப்புறங்கள் தான். இந்தியாவின் மிகவும் அழகான சிறிய விமான நிலையங்கள் சிலவற்றைப் பற்றியும் அவை என்னென்னவென்றும் தெரிந்து கொள்ளலாம்.

Discover India s 8 cutest smallest Airports

காகல் விமான நிலையம்

கங்காரா விமான நிலையம் என்று அழைக்கப்படும் காகல் விமான நிலையம் நாட்டின் மிகச்சிறிய விமான நிலையங்களில் ஒன்றாகும். அதன் சிறிய முனையத்தில் ஒரே நேரத்தில் 100 பயணிகள் செல்ல முடியும். இதன் ஓடு பாதை நீளம் 1372 மீட்டர் ஆகும்.

லிலாபரி விமான நிலையம் அசாம்

அசாமின் லக்கிம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் 400 பயணிகளை மட்டுமே கையாள கூடிய சிறிய விமானநிலையம் ஆகும். இது அசாமில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்திற்கு அதன் சேவையை வழங்குகிறது. இதன் ஓடுபாதை நீளம் 1670 மீட்டர்கள் ஆகும்

ஜூஹூ விமான நிலையம் மகாராஷ்டிரா

1928 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜூஹூ விமான நிலையத்தில் தான் ஜே. ஆர். டி. டாடா விமானத்தில் பறந்து இந்தியாவின் விமான பயணத்தை தொடங்கினார். இங்கு தனியார் ஜெட் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர், வாடகை விமானங்களுக்காக உள்ள சேவை இன்னும் செயல்பாட்டில் உள்ளது. இதன் ஓடு பாதை நீளம் 1143 மீட்டர் ஆகும்.

Discover India s 8 cutest smallest Airports

ஷில்லாங் விமான நிலையம் மேகாலயா

நகர மையத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உம்ரோயில் அமைந்துள்ள ஷில்லாங் விமான நிலையம் மூன்று விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளது. பயணிகள் போக்குவரத்து 5 விமானங்களில் மட்டுமே உள்ளது. இதன் ஓடு பாதை நீளம் 1829 மீட்டர்கள் ஆகும்.

சிந்துதுர்க் விமான நிலையம் மகாராஷ்டிரா

சிப்பி விமான நிலையம் என்று அழைக்கப்படும் சிந்துதுர்க் விமான நிலையம் மகாராஷ்டிராவின் கடலோர கொங்கண் பகுதியில் அமைந்துள்ள முதல் விமான தளமாகும். வெறும் 679 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ள இந்த விமான நிலையத்திற்கு மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் இருந்து வரும் விமானங்கள் வருகின்றன. இதன் ஓடு பாதை நீளம் 2500 மீட்டர்.

அகட்டி விமான நிலையம் லட்சத்தீவுகள்

லட்சத்தீவில் உள்ள வெப்ப மண்டல தீவுகூட்டம் மற்ற யூனியன் டெரிடோய் தீவுகளுடன் இணைக்கும் முனையான அகட்டி தீவில் முழுமையாக செயல்படும் மற்றும் அழகான பொது விமான நிலையம் உள்ளது. இதன் ஓடு பாதை நீளம் 1204 மீட்டர்கள் ஆகும்.

கெஷோத் விமான நிலையம் குஜராத்

அரபிக் கடலில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொஷோத்தில் உள்ள சிறிய விமான நிலையம். இது 1930 களின் முற்பகுதியில் ஜூனாகத்தின் நவாப் மூலம் மஹாபத் கான்ஜி அவர்களால் அவரது பயன்பாட்டிற்காகவும் இறுதியாக பாகிஸ்தானுக்கு தப்பி செல்வதற்காகவும் நிறுவப்பட்டது. இந்த விமான நிலையம் 2022 ஆம் ஆண்டு மட்டுமே மீண்டும் வணிக விமானங்கள் சேவையை தொடங்கியது. இதன் ஓடு பாதை நீளம் 1372 மீட்டர்.

பிகானீர் விமான நிலையம் ராஜஸ்தான்

பிகானீர் நகரத்திலிருந்து 245 கிலோமீட்டர் தொலைவில் ஜோத்பூரில் நிறுவப்பட்ட வணிக விமான நிலையம் ஆகும். நகரத்தில் உள்ள நல் விமானப்படை நிலையும் பிகானரின் சிவில் விமான நிலையம் ஆக செயல்படுகிறது. இது தினமும் சுமார் 4600 பயணிகளுடன் பயணிகள் பயணிக்க கூடிய போக்குவரத்தை கொண்டது. இதன் ஓடு பாதை நீளம் 2731 மீட்டர்கள் ஆகும்.

More News

    Read more about: airport
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+