Search
  • Follow NativePlanet
Share
» »சிர்ஸாவில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

சிர்ஸாவில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

சிர்ஸாவில் உள்ள சுற்றுலாத் தலங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்

ஹரியானா மாநிலத்தின் சிறந்த சுற்றுலாவுக்கு பெயர் பெற்று விளங்கும் இடம் சிர்ஸா. சிர்ஸாவில் சுற்றுலாப் பயணிகள் காண வேண்டிய பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. ஷா மஸ்தானா என்றழைக்கப்பட்ட கெமாமல் என்பவரால் உருவாக்கப்பட்ட தேரா சாச்சா சௌடா என்ற மத ரீதியான குழுவின் தலைமையகமாக சிர்ஸா உள்ளது. இந்த பிரிவினர் அவர்களுடைய சமூக பணி நடவடிக்கைகளுக்காக மிகவும் அறியப்படுபவர்கள் மற்றும் இவர்கள் இலவச சமையலை மக்களுக்கு அளிப்பவர்களாவர். இவர்கள் மக்களிடமிருந்து எந்தவித நன்கொடையையும் பெற மாட்டார்கள். ராதா ஸ்வாமி பிரிவு என்ற மற்றுமொரு பிரபலமான மதப் பிரிவும் இந்நகரத்தில் உள்ளது.

மேலும் உள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்து காண்போம்.

சிர்ஸா - ராதா ஸ்வாமி சத்சங்கார்

சிர்ஸா - ராதா ஸ்வாமி சத்சங்கார்


சிர்ஸா நகரத்திலிருந்து 5 கிமீ தொலைவில் கிழக்காக, உள்ள சிக்கந்தர் பூர் என்ற கிராமத்தில் ராதா ஸ்வாமி சத்சங் கார் அமைந்துள்ளது. பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பியாஸ் என்ற இடத்தைச் சேர்ந்த ராதா ஸ்வாமி பிரிவின் ஒரு பகுதியாகவே இது உள்ளது.

கக்தானா

கக்தானா

நீங்கள் சிர்ஸாவில் இருக்கும் போது கக்தானாவில் உள்ள ராம் தேவ் மந்திருக்கும் செல்ல முடியும். பெயரைப் போலவே, இந்த கோவில் பாபா ராம்தேவ்ஜி-க்கான கோவிலாக உள்ளது. இவர் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலும் மற்றும் பாகிஸ்தானின் சிந்து மாநிலத்திலும் மிகவும் மரியாதையுடன் வணங்கப்படும் தெய்வமாக உள்ளார்.

கதைகள்

கதைகள்

ஏழைகளுக்கும் மற்றும் துன்பப்படுபவர்களுக்கும் உதவி செய்பவராக கருதப்படும் இவரைப் பற்றிய பல்வேறு ஆச்சரியமான கதைகளும் இந்த பகுதிகளில் நிலவி வருகின்றன.

அனுமான் கோவில்

அனுமான் கோவில்


ராம் நக்ரியாவில் உள்ள அனுமான் கோவிலுக்கு வருவதும், சோர்மார் கேராவில் உள்ள குரு கோபிந்த் சிங் குருத்துவாராவிற்கு செல்வதும் இங்கே சிறந்த சுற்றுலா அனுபவமாக இருக்கும். இந்த சீக்கிய குரு ஒரு நாள் இரவு இங்கே இருந்ததாக நம்பப்படுகிறது. சிர்ஸாவில் ஹிஸார் கேட் என்று அழைக்கப்படும் இடத்தில் 13-ம் நூற்றாண்டில் ஒரு தேரா பாபா சர்சாஸ் நாத் கோவிலும் கட்டப்பட்டுள்ளது. நாம் பிரிவின் முதன்மையான குருவாக இருந்த சர்சாய் நாத் என்பவரும், அவரைப் பின்பற்றி வந்தவர்களும் இந்த கோவிலை கட்டி, இங்கே வழிபாடுகளையும் மற்றும் தியானமும் செய்து வந்தனர்.

வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியம்

வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியம்

சிர்ஸா நகரமும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கக்கார் பள்ளத்தாக்கில் உள்ள வளமான வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியமிக்க இடங்களாகும். இந்திய தொல்பொருள் நிறுவனத்தால் அகழ்நதெடுக்கப்பட்ட இந்த தலங்களையும் இங்கே உங்களால் காண முடியும்.

 சிர்ஸாவின் பருவநிலை

சிர்ஸாவின் பருவநிலை

மிதவெப்ப பருவநிலையை அனுபவிக்கும் சிர்ஸாவில் கோடை, மழை மற்றும் குளிர்காலம் என மூன்று பருவங்கள் உள்ளன.

 சிர்ஸாவை அடையும் வழிகள்

சிர்ஸாவை அடையும் வழிகள்

சிர்ஸா நகரம் சாலை, இரயில் மற்றும் விமான வழிகளால் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

More News

    Read more about: travel haryana
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+