Search
  • Follow NativePlanet
Share
» »இந்த கடற்கரையை மையமாக வைத்து தான் கோவா திரைப்படம் எடுத்தார்களா?

இந்த கடற்கரையை மையமாக வைத்து தான் கோவா திரைப்படம் எடுத்தார்களா?

கோவா என்றாலே நம்ம ஊரில் உள்ள இளசுகளுக்கும், ஆண்களுக்கும் ஒரு துள்ளல் தான். கோவா இந்தியாவின் தாய்லாந்து என்றழைக்கப்படும் அளவுக்கு மிகவும் துடிப்பான பார்ட்டி டவுன் ஆகும். அதனாலேயே தான் தமிழ் திரைப்படமான 'கோவா' பெரும்பாலான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது என்றே சொல்லலாம். மிகவும் உயிரோட்டமான கலாச்சாரம், வண்ணமயமான கடற்கரைகள், கஃபேக்கள், சுற்றுலாத் தலங்கள், பார்ட்டிகள் என கோவா சுற்றுலாப் பயணிகளுக்கு ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களை வாரி இறைக்கிறது. ஆனால் அதற்கு எல்லாம் மணி மகுடம் போல் இருப்பது இந்த பாகா கடற்கரை தான்! ஏன் முக்கால்வாசி திரைப்படம் இந்த கடற்கரையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என்றே தான் சொல்ல வேண்டும்! ஏன் இதில் அப்படி என்ன உள்ளது என யோசிக்கிறீர்களா? சொல்கிறேன்!

அழகிய பாகா பீச்

அழகிய பாகா பீச்

வடக்கு கோவாவில் உள்ள உயிரோட்டமான மற்றும் மிகவும் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றான பாகா பீச், கலாங்குட் கடற்கரையின் விரிவாக்கமாகும். இது அழகிய பாகா மற்றும் அஞ்சுனா மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. மலைகளும் கடலும் ஒன்று சேருமிடத்தின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கோவாவின் திகைப்பூட்டும் இரவு வாழ்க்கையைக் காண பாகா பீச் சரியான இடமாகும். பாகவில் இருக்கின்ற பலதரப்பட்ட நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்ந்திடுங்கள்.

அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பாகா

அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பாகா

வடக்கு கோவாவின் மிகவும் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றான பாகா பீச், பஞ்சிமிலிருந்து வடக்கே 30 கிமீ தொலைவில் கலங்குட் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. பாகா பீச் அதன் வெப்பம், பிளே மார்க்கெட், இரவு வாழ்க்கை, உற்சாகம் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றின் காரணமாக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இது வடக்கு கோவாவில் அதிகம் பார்வையிடப்பட்ட கடற்கரை என்பதால், பெரும்பாலான நேரங்களில் நீங்கள் அதிக அளவு கூட்டத்தை காண நேரிடும்.

பார்ட்டி தலைநகர் பாகா

பார்ட்டி தலைநகர் பாகா

கோவாவின் திகைப்பூட்டும் இரவு வாழ்க்கையைக் காண பாகா சரியான இடமாகும், ஏனெனில் புகழ்பெற்ற பிரிட்டோஸ், டிட்டோஸ் மற்றும் மம்போஸ் போன்ற இடங்கள் பாகா கடற்கரைக்கு அருகிலேயே அமைந்துள்ளன. வேடிக்கை ஒருபோதும் முடிவடையாத மிகவும் துடிப்பான இடமாக பாகா கடற்கரை பார்வையாளர்களின் கூட்டத்திற்கு சாட்சியாக உள்ளது. அதிகப்படியான பார்ட்டிகள் காரணமாக இங்கு நீங்கள் வெளிநாட்டு மற்றும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகளை அதிகம் காணலாம்.

பாகாவின் சாகச விளையாட்டுகள்

பாகாவின் சாகச விளையாட்டுகள்

வெயிலிலும் மணலிலும் நனைய விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாகா கடற்கரை ஒரு சொர்க்கமாகும். இயற்கையான இன்பங்களைத் தவிர, பாகா கடற்கரை சுற்றுலாப் பயணிகளுக்கு நிறைய செயல்பாடுகளை வழங்குகிறது. வடக்கில் அதிகம் பார்வையிடப்பட்ட கடற்கரைகளில் ஒன்றாக இருப்பதால், பாகா பரந்த அளவிலான நீர் விளையாட்டுகளையும் வழங்குகிறது. பாராசைலிங், வேக்போர்டிங், விண்ட்சர்ஃபிங், கைட் சர்ஃபிங், ஜெட் ஸ்கீயிங் ஆகியவை பாகா கடற்கரையில் ரசிக்கக்கூடிய சில சிறந்த நீர் விளையாட்டு நடவடிக்கைகள் ஆகும். கடற்கரையில் இருந்து ஒருவர் டால்பின்களைக் கண்டறிதல் மற்றும் தீவுப் பயணங்களுக்கும் செல்லலாம். அது மட்டுமின்றி ஸ்னோ வேர்ல்ட்க்கும் நீங்கள் சென்று பனிக்கட்டுகளுக்கு நடுவே விளையாடலாம்.

பாகாவின் தனித்துவமான ரிசார்ட்டுகள்

பாகாவின் தனித்துவமான ரிசார்ட்டுகள்

கோவாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பாகா, பல தரமான ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகளைக் கொண்டுள்ளது. பாகாவில் உள்ள பல ஹோட்டல்கள் சீசன் நேரங்களில் முன்பதிவு செய்யப்படுவதால், அறையைக் கண்டுபிடிப்பது கடினம். ஒரு அறையை முன்கூட்டியே பதிவு செய்வது நல்லது. பாகா கடற்கரையை ஒட்டியவாறே பல விடுதிகள் உள்ளன. எப்பொழுதாவது பாகா கடற்கரைக்கு சென்று வருபவர்களுக்கே அந்த இடத்தை மறக்க முடியாது. அங்கேயே தங்கினால் எப்படி இருக்கும். யோசித்து பாருங்கள்!

பாகாவில் உள்ள இதர ஆக்டிவிட்டிஸ்

பாகாவில் உள்ள இதர ஆக்டிவிட்டிஸ்

டாட்டூ பார்லர்கள், டாரட் கடைகள், கைரேகை கடைகள், ஸ்பாக்கள், சன் டெக்குகள் மற்றும் சில பழம்பெரும் குடில்களுடன் வரிசையாக, இது உங்கள் சரியான கடற்கரை விடுமுறையை வாழ உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. நீங்கள் பார்ட்டியில் ஈடுபடாதவராக இருந்தால், கடற்கரை யோகாசனத்துடன் உங்கள் காலைப் பொழுதைத் தொடங்கவும், கடலில் சத்தான காலை உணவை உட்கொண்டு, பின்னர் கடற்கரை சாய்வான இடத்தில் அமைதியாகக் கடலை பார்த்துகொண்டு நாளைக் கழிக்கவும் உங்களுக்கு விருப்பம் உள்ளது. பாகாவில் ஒவ்வொரு வகையான பயணிகளுக்கும் ஏதாவது ஒன்று கட்டாயம் இருக்கிறது!

குறிப்பாக தம்பதிகளுக்கு, காதலர்களுக்கு கடற்கரையோரத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி இரவு உணவு அருந்தவும் ஹட்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாகா கடற்கரை சரியான தேனிலவு இடமாகவும் செயல்படுகிறது! இத்தனை அம்சங்கள் பொருந்திய பாகா கடற்கரைக்கு நீங்கள் எப்போது செல்ல போகிறீர்கள்?

More News

    Read more about: baga goa
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+