Search
  • Follow NativePlanet
Share
» »தனியாக டிரிப் போறீங்களா? குறைந்த செலவில் என்ஜாய் பண்ண இப்படி பிளான் பண்ணுங்க

தனியாக டிரிப் போறீங்களா? குறைந்த செலவில் என்ஜாய் பண்ண இப்படி பிளான் பண்ணுங்க

தனியாக சுற்றுலா செல்ல, அதுவும் குறைந்த பட்ஜெட்டில் சென்று வர பிளான் பண்ணுறீங்களா? எப்படி பிளான் பண்ணினா அதிக செலவு இல்லாமல் சூப்பராக என்ஜாய் பண்ணலாம் என யோசிக்கிறீங்களா? இதோ நாங்கள் சொல்லும் ஐடியாவை ஃபாலோ பண்ணுங்க, உங்கள் பர்சில் இருக்கும் பணம் கரையாமல், செம சூப்பரான பயணத்தை அனுபவித்து விட்டு வரலாம். நீங்கள் ஒரு இடத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பொழுது சரியான திட்டமிடுதல் மிக முக்கியம். குறைந்த பட்ஜெட்டில் எவ்வாறு பயணம் செய்ய வேண்டும், மலிவு விலையில் உங்கள் பயணங்களை மேற்கொள்வதற்கு மிக முக்கியமான 8 குறிப்புகள் என்னவென்று பார்ப்போம்.

Solo Travel

பட்ஜெட் விலையில் தனியாக டிரிப் செல்ல டிப்ஸ் :

* முன்கூட்டியே திட்டமிடுங்கள் - பட்ஜெட்டுக்கு ஏற்ற தங்குமிடங்கள், போக்குவரத்து , பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்வது நல்லது.

* பட்ஜெட் தங்குமிடங்களை பயன்படுத்துங்கள் - விடுதிகள், விருந்தினர் மாளிகைகள் அல்லது குறைந்த வாடகையில் உள்ள தங்கும் இடங்களை தேர்வு செய்யுங்கள். காலை உணவு, வை-பை மற்றும் சமையலறை வசதிகள் போன்ற இலவச வசதிகளை வழங்கும் இடங்களை தேர்வு செய்யுங்கள்.

* உங்கள் விருப்ப உணவை நீங்களே சமைக்கலாம்: சமையலறை வசதிகளுடன் கூடிய தங்குமிடங்களை தேர்வு செய்யுங்கள். புதிய மற்றும் மலிவு விலையில் உள்ளூர் சந்தைகளில் கிடைக்கும் பொருட்களை வாங்கி சமைத்து உண்ணுவதால் செலவுகள் குறையும். வெளி உணவுகளால் ஆரோக்கியமும் கெடாமல் இருக்கும்.

* பயணச்சலுகைகளை பயன்படுத்துங்கள் - உங்கள் போனில் உள்ள பல மொபைல் ஆப்கள் மற்றும் வெப்சைட்டுகளை பார்வையிட்டு அதில் ஏதேனும் கடைசி நிமிட பயணி சலுகைகள் உள்ளதா என கண்டறிந்து, உங்கள் பயணம் மற்றும் தங்கும் இடங்களை புக் செய்து பயன் பெறலாம்.

* பொது போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் - நீங்கள் பயணம் செய்யும் இடத்தில் உள்ள டாக்ஸிகள் மற்றும் டிரைவ் ஷேரிங் சர்வீஸ்களுக்கு பதிலாக பொது போக்குவரத்து சாதனங்களான பஸ்கள், ரயில்கள் மற்றும் விலை குறைந்த மற்ற போக்குவரத்து சாதனங்களில் பயணம் மேற்கொள்ளுங்கள்.

* இலவச நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் - பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற இடங்களில் நடை பயணம் செய்து சுற்றிப் பாருங்கள். இது அதிக பணம் செலவழிக்காமல் ஒரு நாம் ஒரு புதிய இடத்தை பார்வையிட ஏதுவாக இருக்கும்.

* ஆஃப் பீக் சீசனை தேர்ந்தெடுங்கள் - நாம் சுற்றுலா செல்லும் இடங்களை தேர்வு செய்யும் போது சீசன் நேரத்தில் செல்லாமல் ஆஃப் பீக் சீசன் நேரத்தில் செல்லும் வகையில் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இதன் மூலம் அதிக செலவுகள் இல்லாமல் குறைந்த கட்டணத்தில் சுற்றுலா செல்லவும், கூட்டம் அதிகம் இல்லாமல் இனிமையான பயணத்தை மேற்கொள்ளவும் ஏற்றதாக இருக்கும்.

* பயணத்திற்கு தேவையான பொருட்களை பேக் செய்தல் - நீங்கள் பயணம் செய்வதற்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை மட்டுமே பேக் செய்யுங்கள். கூடுதல் சாமான்களை தவிர்த்தால் நல்லது. இது கூடுதல் கட்டணங்களை தவிர்க்கவும் எளிதாக போக்குவரத்திற்கும் உதவியாக இருக்கும்.

More News

    Read more about: solo travel
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+