Search
  • Follow NativePlanet
Share
» »ரோடு டிரிப் போறீங்களா? இந்த 7 பொருட்களை எடுத்து செல்ல மறந்துடாதீங்க

ரோடு டிரிப் போறீங்களா? இந்த 7 பொருட்களை எடுத்து செல்ல மறந்துடாதீங்க

முழுக்க முழுக்க ரோடு வழியாகவே ஒரு சாகச பயணத்தை அனுபவிக்க காரிலோ அல்லது பைக்கிலோ செல்லலாம் என பிளான் போடுகிறீர்களா? அப்படியானால் முதலில் இந்த 7 பொருட்களை உங்களுடன் எடுத்து வைத்துக் கொண்டீர்களா என சரி பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் சிரமம் இல்லாமல் உங்கள் டிரிப்பை என்ஜாய் பண்ண முடியும். என்ன அந்த 7 பொருட்கள்? வாங்க தெரிந்த கொள்ளலாம்.

Essentials must have on your road trip

1. கார் ஜம்ப் ஸ்டார்டர்

உங்களது கார் பாதியில் நின்று விட்டால் நீங்கள் வழியில் செல்லும் அறிமுகம் இல்லாதவர்களின் உதவியை நம்பி, காத்திருக்காமல் உங்கள் பயணத்தை தொடர நிச்சயம் இந்த போர்டபிள் கார் ஜம்ப் ஸ்டார்டர் உங்களுக்கு கை கொடுக்கும். கார் பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து விட்டால் இதை பயன்படுத்தி சார்ஜ் ஏற்றலாம். இதில் தற்போது பல மாடல்கள் வந்து விட்டது. அவசர தேவைக்கு உங்கள் கார் பேட்டரிக்கு மட்டுமல்ல மொபைல் போனுக்கும் சார்ஜ் ஏற்றிக் கொள்ள உதவும்.

2. டயர் இன்ஃபிளேடர்

சிட்டியில் பயணம் செய்ய, சகச பயணம் செல்வதற்கு இது நிச்சயம் உதவும். எரிபொருளை சேமிக்க, சாலையின் தரம் எப்படி இருந்தாலும் அதற்கு தகுந்தாற் போல் உங்கள் டயரின் அழுத்தத்தை சரி பார்க்க இது கண்டிப்பாக தேவை. பாதுகாப்பான பயணத்திற்கு இது உங்களுக்கு உதவிடும். இப்படி அடிக்கடி டயரின் பிரஷரை சரி பார்த்துக் கொள்வதால் டயர்கள் நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.

Essentials must have on your road trip

3. ஜிபிஎஸ்

கூகுள் மேப், வேஸ் மேக் போன்ற ஜிபிஎஸ் ஆப்கள் சாலை பயணத்தின் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது ஆஃப்லைனில் பயன்படுத்தக்கூடிய மேப்களும் வந்து விட்டன. இவற்றை பயன்படுத்துவதால் ரியல் டைம் டிராபிக் எப்படி உள்ளது, பயண தூரம் உள்ளிட்ட பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். இந்த ஜிபிஎஸ் ஆப்களை மொபைல் போனில் பயன்படுத்துவதால் அவற்றில் சார்ஜ் குறைய வாய்ப்புள்ளது. அதற்கு பதிலாக காரிலேயே வைத்து பயன்படுத்துவது நல்லது.

4. போர்டபிள் சார்ஜர்

பயணம் செய்யும் போது உங்களுடன் மொபைல் போன்கள் கேமிரா, டேப்ளட், லேப்டாப், மினி.ஃபிரிட்ஜ் போன்ற பல விஷயங்களை எடுத்துச் செல்லலாம். அவற்றிற்கு சார்ஜ் போடுவதற்காக பவர்பேக்ங் போன்ற அதி திறன் கொண்ட போர்டபிள் சார்ஜர்களை உடன் எடுத்துச் செல்வது நல்லது.

Essentials must have on your road trip

5. டேஷ் கேம்

ரோடு டிரிப்பின் போது டேஷ் கேமிராக்களை பயன்படுத்துவது மிகவும் உதவியாக இருக்கும். சாகச பயணங்களின் போது வித்தியாசமான காட்சிகளை படம் பிடிக்க, ஜிபிஎஸ் டிராக் செய்வதற்கு மட்டுமல்ல, சில சமயங்களில் விபத்துக்கள் நடந்தால் கூட முக்கிய ஆதாரமாக காட்டுவதற்கு இவைகள் பயன்படும்.

6. கார் கூலர் அல்லது மினி ஃபிரிட்ஜ்

நாம் செல்லும் இடங்களில் தட்பவெப்ப நிலை எப்படி இருக்கும் என சொல்ல முடியாது. அதனால் எளிதில் கையோடு எடுத்துச் செல்லும் வகையிலான கார் கூலர் அல்லது மினி ஃபிரிட்ஜ்களை எடுத்துச் சென்றால் தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். பணத்தை மிச்சப்படுத்த வெளி உணவுகளுக்கு பதில், சாலையோரத்தில் நீங்களே உங்களுக்கு தேவையான உணவை சமைத்துக் கொள்ள இதில் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லலாம்.

7. அவசர உதவி பெட்டி

அவசரத்திற்கு பயன்படுத்த தேவைப்படும் முதலுதவி உபகரணங்கள் மட்டுமல்ல டார்ச் லைட், ஸ்க்ரூடிரைவர், கத்தி, ஜம்பர் கேபிள் போன்றவை அடங்கிய பெட்டியை பாதுகாப்பிற்காக எப்போதும் காரில் வைத்திருங்கள். இது சிறிய பழுதுகளை சரி செய்ய, விபத்து போன்ற அசம்பாவிதங்களின் போது உங்களை காக்க மிகவும் உதவியாக இருக்கும்.

More News

    Read more about: road trip
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+